அவசரத்திற்கு கடன் பெற வேண்டும் என்று நினைக்கும் போது உடனடியாக மக்கள் பெறுவது பர்சனல் லோன்களை தான். ஆனால் பர்சனல் லோன்களை பெறுவதற்கு முன்பு ஒரு சில மறைமுக கட்டணங்கள் குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஏனெனில் பல்வேறு வங்கிகளும் போட்டி போட்டுக் கொண்டு பர்சனல் லோன்களை வழங்கி வருகின்றன. இப்படி இருக்கும் பட்சத்தில் எந்தவித கட்டணங்கள் குறித்தும் தெரியாமல் சென்று லோன்களை எடுக்கக்கூடாது.
இது உங்களுக்கு பிற்காலத்தில் வட்டியை அதிகம் செலுத்த வேண்டிய சூழலை ஏற்படுத்தலாம். எனவே பர்சனல் லோன்களை பெறுவதற்கு மறைமுக கட்டணங்கள் குறித்து தெரிந்து வைத்துக் கொண்டு பின்னர் லோன் வாங்க வேண்டும்.

லோன்களை எடுப்பதற்கு முன்பு கவனிக்க வேண்டிய கட்டணங்கள்:
ப்ராசசிங் கட்டணம்: ஒரு கடனை செயல்படுத்துவதற்கு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ப்ராசசிங் கட்டணத்தை வசூலிக்கின்றன. இந்த பிராசசிங் கட்டணம் வழக்கமாக 1 சதவீதத்தில் இருந்து 3 சதவீதம் வரை இருக்கலாம். சில சமயங்களில் நீங்கள் கடன் பெறும் வரம்பை பொறுத்து இந்தக் கட்டணம் மாறுபடலாம். ப்ராசசிங் கட்டணம் குறைவாக இருக்கும் வங்கிகளைத் தேர்வு செய்வது நல்லது.
ப்ரீ பேமென்ட் கட்டணங்கள்: கடன் தொகையை பெற்றுவிட்டு மாதம் மாதம் EMI செலுத்த வேண்டும். ஒரு வேலை நீங்கள் மொத்தமாக பணம் கிடைத்து முன்கூட்டியே கடனை செலுத்தினால் அதற்கும் வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன. இந்தக் கட்டணம் உங்கள் கடன் இருப்பில் 2 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை இருக்கலாம்.
தாமதமாக EMI செலுத்துவது: சரியான நேரத்தில் நீங்கள் EMI செலுத்தவில்லை என்றால், அதற்கு அபராதம் வசூலிக்கப்படலாம். அபராத கட்டணம் அந்தந்த வங்கியை பொறுத்தும், மேலும் உங்கள் இஎம்ஐ தொகையைப் பொறுத்தும் மாறுபடலாம். பொதுவாக ரூ.500 முதல் ரூ.2000 வரை தாமதக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
பவுன்ஸ் கட்டணம்: நீங்கள் செக் மூலம் கடன் தொகையை செலுத்தி, செக் பவுன்ஸ் ஆனால்.. உங்களிடம் பவுன்ஸ் கட்டணத்தை வங்கிகள் வசூலிக்கும். இந்த கட்டணம் 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை இருக்கலாம். இதுவும் அந்தந்த வங்கிகளை பொறுத்து மாறுபடும்.
எனவே பர்சனல் லோன்களை பெறுவதற்கு முன்பு இது போன்ற அனைத்து கட்டணங்களையும் தெரிந்து வைத்துக் கொண்டு அதன் பிறகு லோன் எடுக்க வேண்டும். அதோடு கடன் காலம் மிகவும் முக்கியம். கடன் காலம் நீண்ட நாட்களாக இருந்தால் அதற்கு வட்டி அதிகமாக வசூலிக்கப்படலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications