இந்தியாவில் பெரும்பாலான குடும்பங்கள் தங்களுடைய மாதாந்திர சம்பளத்தை நம்பி தான் வாழ்க்கையை நடத்துகின்றன.1ஆம் தேதி அன்று வரக்கூடிய சம்பளத்தை வைத்து தான் வீட்டு வாடகை இஎம்ஐ மற்றும் பிற செலவினங்கள் ,குழந்தைகளுக்கான கல்வி கட்டணம் உள்ளிட்டவற்றை கவனித்து வருகிறார்கள்.
பெரும்பாலான குடும்பங்களிடம் அவசரகால நிதி என்பது கிடையாது, அதேபோல மருத்துவ காப்பீடு உள்ளிட்ட திட்டங்களும் கிடையாது . இத்தகைய சூழலில் திடீரென ஒரு அவசர பண தேவை என்றால் முதலில் நம் கவனத்திற்கு வருவது கடன் வாங்குவது தான் . கடன் கொடுப்பதற்கு தற்போது இந்தியாவில் ஏராளமான வங்கிகளும் நிதி நிறுவனங்களும் வந்துவிட்டன . நமக்கு கடன் கொடுத்தால் தான் அவை வளர்ச்சி அடையும் என்பதால் கூவி கூவி கடன் வழங்குகிறார்கள். ஆனால் இந்த கடன்கள் படிப்படியாக நம்முடைய வருமானத்தையும் நிம்மதியையும் அழித்துவிடும்.

இருந்தாலும் ஒரு அவசர தேவை என வரும்போது வேறு வழி இல்லை கடன் வாங்கி தான் ஆக வேண்டி இருக்கிறது. இவ்வாறு கடன் வாங்கும் போது குறிப்பிட்ட சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக திடீர் பண தேவைக்கு நாம் நாடுவது பெர்சனல் லோன் எனப்படும் தனிநபர் கடன்கள் தான்.இந்த இரண்டுமே உங்களுடைய வாழ்நாள் வருமானத்தையே அழிக்கக்கூடியவை எனவேதான் நிபுணர்கள் உங்களுக்கு ஒரு அவசர தேவை வருகிறது என்றால் பர்சனல் லோனுக்கு மாற்றாக உங்கள் கைவசம் இருக்கும் தங்கத்தை அடகு வைத்து கடனாக வாங்குங்கள் என அறிவுரை வழங்குகிறார்கள்.
பெர்சனல் லோன் பொறுத்தவரை எந்த உத்திரவாதமும் இல்லாமல் வழங்கப்படும் கடன் என்பதால் அதற்கு வட்டி விகிதம் எப்பொழுதுமே அதிகமாக தான் இருக்கும். இதுவே தங்க நகையை நீங்கள் அடகு வைத்து கடன் வாங்கும்போது வங்கிகளுக்கு உங்களுடைய தங்கம் அவர்கள் வசம் இருக்கிறது என்பதால் உங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குவார்கள்.
தங்கத்தை நீங்கள் அடகு வைத்து கடன் வாங்கும்போது உடனடியாக கடன் பணமும் உங்கள் கைக்கு வந்துவிடும் . இதுவே தனிநபர் கடன் என்றால் விண்ணப்பம் செய்து ப்ராசசிங் நடந்து சில நாட்கள் அதற்கு தேவைப்படும். மேலும் தனிநபர் கடன் வட்டி விகிதம் உங்களின் கிரெடிட் ஸ்கோரை பொறுத்து உயரும். குறைந்த கிரெடிட் ஸ்கோர் என்றால் வட்டி அதிகமாக இருக்கும். தங்க நகை கடனில் உங்களின் கிரெடிட் ஸ்கோர் பற்றியெல்லாம் கவலையே இல்லை. எந்த வித ஆவணங்களும் தேவையில்லை.
உதாரணமாக ஒரு நபர் 2 லட்சம் ரூபாயை பெர்சனல் லோனாக வாங்குகிறார் என வைத்துக் கொள்வோம் 12 மாத காலத்திற்கு அவருக்கு 14% வட்டி விதிக்கப்படும். அப்படி என்றால் அவர் மாதம் 17,957 ரூபாய் ஈஎம்ஐ செலுத்த வேண்டும் ஓராண்டில் வட்டியாக 15,489 ரூபாய் செலுத்தி இருப்பீர்கள். தங்க நகை அடமானம் வைத்து 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கினால் 9% சதவீதத்திலேயே கிடைத்துவிடும். அப்படி என்றால் மாதம் 17,490 ரூபாய் ஈஎம் ஐ செலுத்த வேண்டும் , மொத்த வட்டி 9,884 ரூபாயாக செலுத்துவீர்கள். வட்டியிலேயே உங்களுக்கு 5,600 ரூபாய் மிச்சமாகும்.
எனவே உங்களுக்கு ஒரு அவசர தேவை இருக்கிறது என்றால் தனிநபர் கடன்களுக்கு மாற்றாக லாக்கரிலிருக்கும் தங்கத்தை பயன்படுத்துங்கள் என ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனத்தின் மூத்த தலைவர் சிட்டிஸ் ஜெயின் தெரிவிக்கிறார். உங்களுக்கு ஒரு அவசர தேவை இருக்கிறது உடனடியாக பணத்தேவை இருக்கிறது எனும் போது தங்க நகை கடன் வாங்கலாம். உங்களின் கிரெடிட் ஸ்கோர் மோசமாக இருக்கிறது எனும் போது தங்க நகை கடன்கள் தான் உங்களுக்கு சிறந்தது. ஒரு குறுகிய காலத்திற்கு தான் நீங்கள் கடன் வாங்குகிறீர்கள் விரைவில் அதனை திரும்ப செலுத்த முடியும் என்றால் தங்க நகை கடன்கள் தான் பெஸ்ட் என கூறுகிறார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications