அவசரமாக ரூ.2 லட்சம் தேவைப்படுகிறதா? பர்சனல் லோன் வாங்கலாமா? சேமிப்பை பயன்படுத்தலாமா? எது சிக்கனம்?

இன்றெல்லாம் எதிர்பாராத செலவுகள் யாருக்கு? எப்போது வருகிறது? என்பதை கணிக்கவே முடியவில்லை. திடீரென ஏற்படும் மருத்துவச் செலவுகள், விபத்துக்கள் மற்றும் பல காரணங்களால் லட்சங்களில் பணம் தேவைப்படுகிறது. அப்படி உங்களுக்கும் ரூ.2 லட்சம் பணம் தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். இதுபோன்ற சூழ்நிலையில் சேமிப்பை பயன்படுத்துவது சிக்கனமா? அல்லது வங்கிகளில் கடன் பெறுவது சிக்கனமா? என்பதைத்தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.

ஒரு சிலர் சேமிப்பு இல்லாத சூழ்நிலையில் பர்சனல் லோன், கிரெடிட் கார்டு லோன் போன்ற லோனைத் தான் நம்பி இருப்பார்கள். ஒரு சிலர் ஏற்கனவே சேமிப்பு இருந்தால் அதை பயன்படுத்திக் கொள்வார்கள்.

சேமிப்பு Vs பர்சனல் லோன்: எதிர்பாராத நிதி நெருக்கடி வரும்போது அதை சமாளிக்க சேமிப்பை பயன்படுத்துவது தான் சிக்கனமான வழி. ஆனால் அதற்காக அடுத்து வரும் மருத்துவச் செலவுகளை ஈடுகட்ட முடியாமல் போகும் வகையில் எல்லா பணத்தையும் எடுக்கக் கூடாது. அதே நேரம் அடுத்து வரும் பல மாதங்களுக்கு உங்களுக்கு ஈஎம்ஐ இருக்கிறது என்றால் அந்த சமயங்களில் பர்சனல் லோன் பொருத்தமானதாக இருக்கும்.

அவசரமாக ரூ.2 லட்சம் தேவைப்படுகிறதா? பர்சனல் லோன் வாங்கலாமா? சேமிப்பை பயன்படுத்தலாமா? எது சிக்கனம்?

ஆனந்த் ரதி ஷேர் அண்ட் ஸ்டாக் ப்ரோக்கர்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தில் இயக்குனரும் தலைவருமான தாமஸ் ஸ்டீபன், ஒருவருக்கு அவசர அவசரமாக ரூ.2 லட்சம் தேவைப்படும் போது கிரெடிட் கார்டு கடன் பெறுவது ஈஸியான வழியாக தோன்றும். ஆனால் கடன்களிலேயே அதிக செலவு பிடிக்கும் கடன் என்றால் அது கிரெடிட் கார்டு கடன்கள் தான். பெரும்பாலான வங்கிகள் பர்சனல் லோனுக்கு 10 முதல் 18 சதவீதமே வட்டி விதிக்கின்றன.

ஆனால் கிரெடிட் கார்டு கடனுக்கான வட்டி விகிதம் 24 சதவீதத்திற்கும் மேல் இருக்கும். உதாரணமாக ரூ.1 லட்சம் கிரெடிட் கார்டு கடனை ஓராண்டுக்கு செலுத்தாமல் விட்டாலும் வட்டி மட்டும் ரூ.40,000 தாண்டி விடும். எனவே ரூ.2 லட்ச தேவைக்காக அவசர அவசரமாக முடிவெடுக்கக்கூடாது. திருப்பி செலுத்தும் முறை எப்படி இருக்கும்?, அதிக வட்டி செலுத்த வேண்டுமா? என்பதை எல்லாம் கவனித்து முடிவுக்கு வரவேண்டும்.

பேங்க் பஜார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான அதில் ஷெட்டியும் இதே போன்ற கருத்தைதான் முன்வைக்கிறார். அதாவது உங்களிடம் அவசர காலத்திற்கு பயன்படும் வகையில் சேமிப்பு இருந்தால் தற்காலிகமாக ஏற்படும் நிதி நெருக்கடியை தவிர்க்க அதையே பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் கடன் வாங்கித்தான் ஆகவேண்டும் பிற சேமிப்பு இல்லை எனும் பட்சத்தில் பர்சனல் லோன் வாங்குவது சிறப்பு.

ஏனெனில் கிரெடிட் கார்டுகளை விட இதற்கு வட்டி குறைவு. அதிக செலவு செய்வதற்கு மாற்றாக ஒரு கடன் இருக்கிறது என்றால் அதையே பயன்படுத்தி உங்களுடைய கிரெடிட் ப்ரோபைலை சிறப்பாக வைத்துக் கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+