கொரோனா பீதி..இந்த சமயத்தில் எதில் முதலீடு செய்யலாம்..எது லாபகரமாக இருக்கும்

உலகம் முழுக்க கொரோனாவின் தாக்கம் மக்களை பாடாய்படுத்தி வரும் இந்த நிலையில், முதலீடு என்பது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயமாகவே தான் இருக்கிறது.

அதிலும் கொரோனா பீதியில் சர்வதேச சந்தைகள் வீழ்ச்சி கண்டு வரும் அதே நேரத்தில், இந்திய பங்கு சந்தைகளும் வீழ்ச்சி கண்டு வருகின்றன.

இதே பத்திர சந்தைகளும் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் வர்த்தகமாகி வருகின்றது.

பங்கு சந்தையில் பாதுகாப்பாக முதலீடு செய்யலாம்

பங்கு சந்தையில் பாதுகாப்பாக முதலீடு செய்யலாம்

இதே தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்றால், அது அதிகளவு ஏற்ற இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது. ஆக எதில் தான் பாதுகாப்பாக முதலீடு செய்வது. இந்திய பங்கு சந்தைகள் அவ்வப்போது ஏற்றம் கண்டாலும், சில பங்குகள் மட்டும் தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகின்றன. ஆக அது போன்ற பங்குகளை தேர்வு செய்து முதலீடு செய்யலாம்.

எந்தெந்த துறை பங்குகள்

எந்தெந்த துறை பங்குகள்

கொரோனாவின் இந்த ரனகளத்திலும், எந்த துறைகள் தடை படாமல் இயங்கி கொண்டு இருக்கின்றன. ஒன்று மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அளித்து வரும் எஃப்எம்சிஜி துறை மற்றும் மக்களை கொரோனாவின் பிடியில் இருந்து காப்பாற்றும் மருத்துவ துறை ஆக இத்துறையை சேர்ந்த பங்குகளில் முதலீடு செய்யலாம் என்று கூறுகின்றனர் நிபுணர்கள்.

பார்மா துறை பங்குகள்

பார்மா துறை பங்குகள்

குறிப்பாக டாக்டர் ரெட்டி லேபாரட்டரீஸ், சன் பார்மா, சிப்லா போன்ற பங்குகளை முதலீட்டாளார்கள் தேர்வு செய்து வருகின்றனர். ஏனெனில் அதன் மதிப்பு பல ஆண்டுகளில் உள்ள குறைவில் உள்ளன. தற்போதைய சந்தை கொதிப்பால் விலை பல பங்குகள் விலை குறைந்து காணப்படுகின்றது. ஆனால் மக்களின் அத்தியாவசிய தேவையாக இருக்கும் பங்குகள் தற்போது ஏற்றம் காணலாம் என கூறப்படுகிறது.

மருந்து பங்குகள் விலை அதிகரிக்கலாம்

மருந்து பங்குகள் விலை அதிகரிக்கலாம்

அதிலும் இதுவரையில் 12 முக்கிய மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை மத்திய அரசு நீக்கியுள்ளது. எனினும் சீனாவில் இருந்து மூலதன கூறுகள் கிடைக்காத நிலையில், பல மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவற்றின் விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

FMCG பங்குகள்

FMCG பங்குகள்

கொரோனாவின் பரவலை தடுக்க நாட்டில் 21 நாள் ஊரடங்கு கடைபிடிக்கப்படும் நிலையில், வேகமாக நுகரப்படும் பொருட்களுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதிலும் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் சோப், பேஸ்ட், பிஸ்கட் மற்றும் எண்ணெய் வகைகள் என பல பொருட்களுக்கு மட்டும் தேவை கூடிக் கொண்டே செல்கிறது. ஆக FMCG பங்குகளான Tata Consumer products, ITC, DAbur india உள்ளிட்ட பங்குகள் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+