சொந்தமாக ஒரு கார் வாங்க வேண்டும் என்ற கோடிக்கணக்கான இந்திய குடும்பங்களின் கனவை நனவாக்குவது வங்கிகள், நிதி நிறுவனங்கள் வழங்கும் வாகன கடன்கள் தான். இவ்வாறு கார் லோன் வாங்க விண்ணப்பம் செய்யும் போது சில விஷயங்களை கண்டிப்பாக பார்க்க வேண்டும். இல்லையெனில் பிற்காலத்தில் பெரிய நிதிச்சுமையில் சிக்கி கொள்ள நேரிடலாம்.
பெரும்பாலான நபர்கள் தங்களால் மாதந்தோறும் எவ்வளவு ஈஎம்ஐ கட்ட முடியும் என்பதை மட்டுமே பார்த்துவிட்டு கடன் பெறுகின்றனர். ஆனால், மாத தவணை என்பது மட்டுமே இல்லை, கார் லோன் வாங்கும் போது செயலாக்க கட்டணம் ,ஆவண கட்டணங்கள் மற்றும் மறைமுக வரிகள் ஆகியவற்றையும் விரிவாக பார்க்க வேண்டும்.

கடன் வாங்கும் போது வட்டி விகிதம் நிலையானதா (Fixed) அல்லது மாறுபடும் தன்மை கொண்டதா (Floating) என்பதை தெளிவாக பார்க்க வேண்டும். நிலையான வட்டி விகிதத்தில் வட்டி மாறாது, ஆனால் வட்டி விகிதம் அதிகமாக இருக்கலாம். மாறாக, மாறுபடும் வட்டி விகிதத்தில் வட்டி முதலில் குறைவாக இருந்தாலும் ரெப்போ வட்டி விகித மாற்றத்திற்கு ஏற்ப மாறுபடும். எனவே இது மிக முக்கியம்.
கடன் காலம் முடிவதற்குள் உங்களிடம் கூடுதல் பணம் வரும்போது, ஒட்டுமொத்த கடனையும் ஒரே முறையாக அடைக்கலாம் இதனை Foreclosure என்பார்கள். சில வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் இதற்கு கூடுதல் தொகையை வசூலிக்கின்றன. எனவே கடன் ஒப்பந்தத்தில் இந்த கட்டணங்கள் எவ்வளவு என்பதை முன்கூட்டியே சரிபார்த்து கொள்வது அவசியம்.
கார் லோனுக்கு விண்ணப்பம் செய்யும் போது செயலாக்க கட்டணம் பார்க்க வேண்டும். ஏனெனில் சில வங்கிகளில் இது குறைவாகவும், சிலவற்றில் மிக அதிகமாகவும் இருக்கலாம். இது தவிர ஆவண சரிபார்ப்பு மற்றும் NOC கட்டணங்கள் போன்ற பல்வேறு மறைமுக கட்டணங்கள் உங்கள் பாக்கெட்டை பதம்பார்க்கும். வங்கியிடம் இவை அனைத்தையும் எழுத்துப்பூர்வமாக கேட்டு தெரிந்து கொள்வது புத்திசாலித்தனம்.
உங்கள் கிரெடிட் ஸ்கோர் சிறப்பாக இருந்தால் மட்டுமே உங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். பல வங்கிகள் குறைந்த கிரெடிட் ஸ்கோர் உள்ளவர்களுக்கு அதிக வட்டி விகிதத்தை மறைமுகமாக திணிக்கும். எனவே, கடன் விண்ணப்பிக்கும் முன் உங்கள் கிரெடிட் ஸ்கோரை சீராக வைத்துக்கொள்வது முக்கியம்.
ஒன்றிரண்டு வங்கிகளின் வட்டி விகிதம், செயலாக்க கட்டணம் உள்ளிட்டவற்றை எல்லாம் ஒப்பிட்டு பார்த்து முடிவெடுப்பது தான் நல்லது. இறுதியாக கார் லோனுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன், வங்கியின் விதிமுறைகளை முழுமையாகப் படித்து பாருங்கள். அனைத்து வரிகள் மற்றும் கட்டணங்கள் போக உங்களுக்கு எவ்வளவு செலவாகிறது என்பதை கணக்கிட்டு பிறகு முடிவெடுக்க வேண்டும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

