சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவை நிறைவேற்றுவதற்கு பலரும் நாடுவது வங்கிகளில் கிடைக்கக்கூடிய வீட்டுக் கடன்கள் தான். நம்முடைய வருமானத்தை கணக்கீடு செய்து வங்கிகள் அதற்கேற்ற வகையிலான ஒரு தொகையை நமக்கான வீட்டுக் கடனாக வழங்குவார்கள்.
இந்த வீட்டுக் கடனை நாம் வங்கிகளுக்கு வட்டியோடு திரும்ப செலுத்த வேண்டும் . மாதம்தோறும் இஎம்ஐ தொகையாக அது கணக்கிடப்பட்டு நம்முடைய வங்கி கணக்கிலிருந்து பெற்றுக் கொள்ளப்படும். இந்த மாதாந்திர இஎம்ஐ தொகையில் தொடக்க ஆண்டுகளில் பெரும்பாலான தொகை நம் கடனுக்கான வட்டியாக தான் பிடித்தம் செய்யப்படும் . வங்கிகளை பொறுத்தவரை இதுபோல வீட்டு கடன்கள் வழங்குவது அவர்களுக்கு லாபமான ஒரு பிரிவாக இருந்து வருகிறது.

நாம் வாங்கக்கூடிய கடனுக்கு நிகரான பணத்தை நாம் வட்டியாக மட்டுமே செலுத்தி இருப்போம் . இதனாலேயே தற்போது பலரும் வீட்டு கடன் வாங்கி வீடு வாங்க வேண்டுமா என்ற குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். 2026 ஆம் ஆண்டு தொடங்கி இருக்கிறது இந்த ஆண்டில் புதிதாக நான் வங்கியில் கடன் வாங்கி வீடு வாங்க போகிறேன் என்பவர்கள் இந்த ஒரு வழிமுறையை பின்பற்றினால் பெருமளவிலான பணத்தை சேமிக்க முடியும் . இது எப்படி செயல்படுகிறது என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ளலாம்.
வீட்டு கடனில் இருக்கக்கூடிய மிகப் பெரிய பாதகமான அம்சம் நீண்ட காலத்திற்கு நாம் அதை திரும்ப செலுத்த வேண்டும் என்பதுதான் . கடன் செலுத்தும் காலம் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அவ்வளவு அதிகமாக நாம் வட்டி செலுத்துகிறோம். 30 லட்சம் ரூபாய்க்கு ஒரு நபர் வீட்டுக்கு கடன் வாங்கி இருக்கிறார் அதற்கான வட்டி தொகை 9.55% என வைத்துக் கொண்டால் 25 ஆண்டுகளில் அவர் செலுத்திய மொத்த தொகை சுமார் 79 லட்சம் ரூபாய் . வட்டியாக மட்டுமே அவர் 49 லட்சம் ரூபாயை செலுத்தி இருப்பார்.
இந்த நிலையில் தான் வீட்டுக்கு கடன் வாங்கக்கூடிய நபர்கள் அந்த கடன் தொடங்கும் போது அத்துடன் ஒரு எஸ்ஐபி திட்டத்தையும் தொடங்க அறிவுரை வழங்குகிறார்கள். அதாவது வீட்டுக் கடனுக்கான இஎம்ஐ செலுத்த தொடங்கும் மாதத்தில் நீங்கள் கூடுதலாக எஸ்ஐபி முறையில் முதலீடு செய்ய வேண்டும். எனவே இந்த 25 ஆண்டு கால முடிவில் நீங்கள் செலுத்திய அந்த இஎம்ஐ தொகை முடிந்து வீடு உங்களுக்கு சொந்தமாகி இருக்கும் அதே வேளையில் அந்த எஸ்ஐபி முதலீடு உங்களுக்கு பெரிய அளவில் வளர்ந்து ஒரு கணிசமான தொகையை உங்கள் கைகளில் கொண்டு வந்து சேர்க்கும்.
உதாரணமாக ஒரு நபர் 30 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார். 20 ஆண்டு காலத்திற்கு அதனை திரும்ப செலுத்த வேண்டும். 9.55% வட்டி என்றால் மாதம் அவர் செலுத்த வேண்டிய தொகை 28,062 ரூபாய் . மொத்தமாக 20 ஆண்டுகளில் அவர் செலுத்திய பணம் 67.34 லட்சம் ரூபாய் . இதுவே அவர் இந்த இஎம்ஐ தொகையில் 25% பணமான 7,015 ரூபாயை மாதம்தோறும் ஒரு ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து வருகிறார் என வைத்துக் கொள்வோம். அவருடைய முதலீட்டு காலம் 20 ஆண்டுகள்.
ஆண்டுக்கு 12 சதவீத லாபம் கிடைக்கிறது என்றால் கூட 20 ஆண்டுகள் முடியும்போது ஒருபுறம் வீட்டுக் கடன் அடைந்திருக்கும் இவர் மாதந்தோறும் செய்த sip மூலம் மட்டும் இவருக்கு 64 லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும். இது கிட்டத்தட்ட வீட்டுக் கடன் மற்றும் திரும்ப செலுத்திய வட்டிக்கு நிகரான தொகை . என்னிடம் அவ்வளவு பணம் இல்லை எஸ்ஐபியில் 25% எல்லாம் இல்லை என்பவர்கள் கடன் செலுத்தும் காலத்தை 5 ஆண்டுகள் நீட்டித்து விட்டால் மாதம் இஎம்ஐ தொகை குறையும், எனவே மீதமாகும் பணத்தை எஸ்ஐபி செய்யலாம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications