பங்குச்சந்தையில் முதலீடு செய்ய போறீங்களா? இந்த 3 விஷயங்கள முதல்ல தெரிஞ்சுக்கோங்க!!

பங்குச் சந்தை முதலீடு என்பது ஒரு கலை. சரியான நிறுவனத்தை தேர்ந்தெடுத்து முதலீடு செய்தால் நாம் எதிர்பார்த்ததை விட நிறைய லாபத்தை காண முடியும். பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் பல்வேறு விஷயங்களை கவனத்தில் கொள்வது முக்கியம்.

பங்குச்சந்தை முதலீடு: ஒரு நிறுவனத்தின் பங்கை தேர்ந்தெடுக்கும் போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும் , எந்த எண்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து நாம் தற்போது விரிவாக பார்க்க போகிறோம். இந்தியாவில் சந்தை மூலதன அடிப்படையில் முதல் நிறுவனமாக இருக்கிறது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம். நீங்கள் இந்த பங்கை வாங்குகிறீர்கள் என்றால் இதன் மார்கெட் வேல்யூ, எண்டர்பிரைஸ் வேல்யூ மற்றும் புக் வேல்யூ ஆகியவற்றை தெரிந்து கொள்ள வேண்டும்.

பங்குச்சந்தையில் முதலீடு செய்ய போறீங்களா? இந்த 3 விஷயங்கள முதல்ல தெரிஞ்சுக்கோங்க!!

மார்கெட் வேல்யூ(Market value): ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பு என கூறலாம். இன்றைய தேதியில் பங்குச்சந்தை குறிப்பிட்ட நிறுவனத்தின் மதிப்பு என்ன என்பது தான் மார்க்கெட் வேல்யூ எனப்படும் சந்தை மதிப்பு. ஆகஸ்ட்9ஆம் தேதி நிலவரப்படி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 1366 ரூபாய் இந்த நிறுவனம் மொத்தம் 1,353 கோடி பங்குகளை வெளியிட்டு இருக்கிறது. ஆகவே இந்த நிறுவனத்தின் மார்க்கெட் வேல்யூ சுமார் 18.5 லட்சம் கோடி ரூபாய்.

எண்டர்பிரைஸ் வேல்யூ (enterprise value) : எண்டர்பிரைஸ் வேல்யூ என்பது ஒரு நிறுவனத்தை இந்த நேரத்தில் நீங்கள் வாங்குகிறீர்கள் என்றால் எவ்வளவு விலை கொடுத்து வாங்குவீர்கள் என்பதை குறிக்கிறது. இதனை கணக்கிட EV = Market Cap + Total Debt - Cash என்ற சூத்திரம் தேவை. நீங்கள் ஒரு தொழிலை வாங்கினால் அதன் கடன்களையும் ஏற்பீர்கள், அதனிடம் இருக்கும் ரொக்கத்தையும் கைப்பற்றுவீர்கள். அதன் படி பார்த்தால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் எண்டர்பிரைஸ் வேல்யூவை சந்தை மதிப்பு 18.5 லட்சம் கோடி ரூபாய் , அதில் அதன் மொத்த கடன் 3.69 லட்சம் கோடி ரூபாய் , கைவசம் இருக்கும் பணம் 1.06 லட்சம் கோடி ரூபாய். எனவே ரிலையன்ஸின் எண்டர்பிரைஸ் வேல்யூ 21 லட்சம் கோடி ரூபாய். அதாவது தற்போது இந்த நிறுவனத்தை நீங்கள் வாங்க வேண்டும் என்றால் 21 லட்சம் கோடி ரூபாயை வழங்க வேண்டும்.

பங்குச்சந்தையில் முதலீடு செய்ய போறீங்களா? இந்த 3 விஷயங்கள முதல்ல தெரிஞ்சுக்கோங்க!!

புக் வேல்யூ (book value) : புக் வேல்யூ என்பதை நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு மற்றும் நிறுவனத்திற்கு இருக்கக்கூடிய கடன் அல்லது நிதி பொறுப்புகளை கழிப்பதன் மூலம் கிடைப்பது. 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி ரிலையன்ஸ் நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு 19. 5 லட்சம் கோடி ரூபாய், அதற்கு இருக்கும் நிதி பொறுப்பு 9.4 லட்சம் கோடி ரூபாய். எனவே மொத்த ஈக்விட்டியின் மதிப்பு 10 .1 லட்சம் கோடி ரூபாய். இதில் மைனாரிட்டி பங்கு எனப்படும் 10% ஐ கழிக்க வேண்டும். அப்படி பார்த்தால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் புக் வேல்யூ 8.4 லட்சம் கோடி ரூபாய். எனவே இதன் மதிப்பு 8.4 லட்சம் கோடி ரூபாய் தான்.

3 முக்கிய எண்கள்:மார்க்கெட் வேல்யூ என்பது ஒரு நிறுவனம் பங்குச்சந்தையால் எப்படி மதிப்பீடு செய்யப்படுகிறது என்பதை குறிக்கிறது என்டர்பிரைஸ் வேல்யூ என்பது ஒரு நிறுவனத்தை நீங்கள் தற்போது வாங்குகிறீர்கள் என்றால் அதற்கு எவ்வளவு தொகை செலுத்த போகிறீர்கள் என்பதை புக் வேல்யூ என்றால் நிகர சொத்துக்களின் ஒட்டுமொத்த மதிப்பு. ஒரு நிறுவனத்தில் நீங்கள் முதலீடு செய்கிறீர்கள் என்றால் இந்த விஷயங்களை கவனிப்பது முக்கியம்.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+