சென்னை: ஓய்வுக்குப் பிறகு வருமானத்திற்கு என்ன செய்வது? என்ற கேள்வி நம்மில் பலருக்கும் இருக்கும். அதற்காக சிலர் வேலையில் இருக்கும் போதே சேமிக்கத் தொடங்கி விடுகின்றனர். ஆனால் பலருக்கு, இது சற்று கடினமாக இருக்கலாம். ஏனென்றால், தற்போது அவர்கள் பெறும் சம்பளத்தை வைத்து அன்றாட குடும்ப தேவையை மட்டுமே பூர்த்தி செய்யும் அளவில் இருக்கும்போது, சேமிப்பிற்கு அது தடையாக இருக்கலாம், எனினும், இதுபோன்ற நபர்களுக்கு உதவும் வகையில் அதிக பென்ஷன் கொடுக்கும் 3 பக்கெட் பிளான் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
மன அழுத்தம் இல்லாத ஓய்வு பெற முன்கூட்டியே திட்டமிடுவது புத்திசாலித்தனமான ஒன்றாகும். எனவே, உங்களுக்கு உதவும் வகையில் 3 பக்கெட் பிளானைப் பயன்படுத்தி எவ்வாறு சேமிக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம். இந்த பிளான் மூலம் நீங்கள் ஓய்வூதியத்திற்காக சேமிக்க முடியும். அதாவது உங்களுக்கு எப்போது பணம் தேவைப்படும் என்பதன் அடிப்படையில் உங்கள் சேமிப்பை மூன்று பக்கெட்களாக பிரித்து சேமிக்க முடியும்.

3 பக்கெட் பிளான் என்றால் என்ன?: வயதாக, வயதாக ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒருவருக்கு தனித்தனியாக பணத் தேவை இருக்கும். அதனைப் பூர்த்தி செய்யும் வகையில் தனித்தனி முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்வது தான், இந்த 3 பக்கெட் பிளான் எனப்படுகிறது. எனவே இதன் மூலம் முதலீடு செய்யப்படும் தொகை ஒவ்வொரு காலகட்டத்திற்கு உங்களுக்கு உதவுகிறது.
அதற்கு முதலில் இந்த 3 பக்கெட் பிளானை பற்றி தெரிந்து கொள்வது அவசியம். இது ஒரு முதலீட்டு அணுகுமுறை தான். இதனைக் கொண்டு நீங்கள் உங்களுடைய ஓய்வூதிய கார்பஸை 3 வகைகளாகப் பிரிக்க முடியும். இதன் மூலம் உடனடித் தேவைக்கான பணம், நடுத்தர தேவைக்கான பணம் மற்றும் நீண்ட நாள் தேவைக்கான பணம் என 3 வகைகளாகப் பிரித்து முதலீடு செய்யலாம். இந்த அணுகுமுறையை பயன்படுத்துவதன் மூலம் ஒருவர் தங்களுடைய ஓய்வூதிய நாட்களை திறம்பட கழிக்க முடியும்.
முதல் பக்கெட்: உங்களுடைய அன்றாட செலவுகள் மற்றும் மருத்துவ கட்டணங்கள் மற்றும் திடீர் தேவைகளை ஈடுசெய்வதை, இந்த பக்கெட் கவனம் செலுத்துகிறது. அதாவது அடுத்து வரும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் உங்களுக்கு தேவைப்படும் பணத்தேவையை இது குறிக்கிறது. இதற்காக நீங்கள் பிக்சட் டெபாசிட்கள், ஈக்விட்டி ஃபண்டுகள் போன்றவற்றில் முதலீடு செய்யலாம். ஆனால் நீங்கள் டெபாசிட் செய்வது, ஆபத்தை விளைவிக்காததாக இருப்பது முக்கியம். ஏனெனில், இது உங்கள் உடனடி தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது என்பதால் அவை நிலையான வருமானத்தை வழங்கக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும்.
இரண்டாம் பக்கெட்: அதாவது நடுத்தர கால இலக்குகளுக்காக தேவைப்படும் பணம். இது பயணம் செய்வதற்காக அல்லது உங்களுடைய பொழுதுபோக்கை தொடர்வதற்கான எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அடுத்ததாக வரும் 5 முதல் 10 ஆண்டுகளுக்கான செலவுகளுக்கு இந்த பணம் போதுமானதாக இருக்க வேண்டும். அதற்காக நீங்கள் குறுகிய கால FDகள் மற்றும் பத்திரங்களில் முதலீடு செய்யலாம் மற்றும் அரசு சிறுசேமிப்பு திட்டங்களிலும் முதலீடு செய்யலாம்.
மூன்றாம் பக்கெட்: அதாவது இது நீண்ட காலத்திற்கான சேமிப்பாகப் பார்க்கப்படுகிறது. ஒரு நபர்கள் தங்களது ஓய்வூதியத்திற்கு பிறகு, நிலையான வருமானத்தை ஈட்டுவதற்காக இந்த பக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக நீண்ட கால மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது முக்கியம். ஸ்மார்ட் பீட்டா நிதிகள், தங்கம் போன்றவற்றிலும் நீங்கள் முதலீடு செய்யலாம்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications