70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கும் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் நாளை அக்டோபர் 29ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மூத்த குடிமக்கள் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB-PM-JAY) திட்டத்தின் கீழ் அவர்களின் குடும்ப ஆண்டு வருமானத்தைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் விரிவாக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்
யாருக்கு லாபம்?: ஆயுஷ்மான் பாரத் மூலம், நாட்டில் உள்ள 4.5 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 6 கோடி மூத்த குடிமக்கள் ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீட்டுத் தொகையைப் பெறுவார்கள். இத்திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளுக்கு சிறப்பு அட்டை வழங்கப்படும்.

70 வயது அல்லது அதற்கு மேல் உள்ள அனைவரும் ஆயுஷ்மான் கார்டுக்கு தகுதியுடையவர்கள். அவர்கள் ஏழை, நடுத்தர வர்க்கம் அல்லது பணக்காரர் என்ற பாகுபாடுகள் இருக்காது. ஏற்கனவே AB-PM-JAY-ல் உள்ள குடும்பங்களில் உள்ள மூத்த குடிமக்கள் தனித்தனியாக ரூ. 5 லட்சம் கூடுதல் கவரேஜைப் பெறுவார்கள்.
பிற உடல்நலக் காப்பீட்டுத் திட்டங்களில் இருந்து கவரேஜ் பெறும் மூத்த குடிமக்கள் தங்களின் தற்போதைய திட்டத்தைத் தொடரலாம். அல்லது AB-PM இன் கீழ் கவரேஜைத் தேர்வுசெய்யலாம். ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் இருந்தால், அவர்களுக்கு பகிருதல் அடிப்படையில் இருக்கும்
எப்படி விண்ணப்பிப்பது?: விண்ணப்பிக்க, PMJAY இணையதளம் அல்லது ஆயுஷ்மான் செயலியை பதிவிறக்கம் செய்த பிறகு பதிவு செய்யலாம். அதேபோல், அருகிலுள்ள CSC மூலம் விண்ணப்பிக்கலாம், www.beneficiary.nha.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் பதிவு செய்யலாம்
மற்றும் பிஎம் - ஜேஏஒய் மையங்களிலும் பதிவு செய்யும் வசதி இருக்கும். ஆயுஷ்மான் கார்டு வைத்திருப்பவர்கள் புதிய கார்டுக்கு மீண்டும் விண்ணப்பித்து EKYC ஐ முடிக்க வேண்டும்
ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா என்பது உலகின் மிகப்பெரிய பொது நிதியுதவி சுகாதாரத் திட்டமாகும். இது இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை பராமரிப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் சுகாதார காப்பீடு வழங்குகிறது. குடும்ப உறுப்பினர்களின் வயதைப் பொருட்படுத்தாமல், நாட்டில் உள்ள 12.34 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 55 கோடி பேருக்கு இந்தத் திட்டம் வழங்கப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications