பொதுவாக சொந்த வீடு என்பது எல்லோரின் ஆசையாக இருக்கும். எப்படியாவது கடனை வாங்கியாவது கட்டி விட வேண்டூம் என்பதே, இன்றைய நடுத்தர குடும்பத்தினரின் கனவு எனலாம்.
எலி வளை என்றாலும் தனி வலையாக இருக்க வேண்டும் என்பது பழமொழி, ஆனால் இந்த காலத்தில் கூரை வீடானாலும் சொந்த வீடு என்பது இன்றைய பழமொழி. ஏனெனில் சொந்த வீட்டில் வாழ்வது என்பது அப்படி தனி நிம்மதி, மகிழ்ச்சி.
ஆக இப்படி தங்களுக்கு நிம்மதியையும் சந்தோஷத்தினையும் தரும் சொந்த வீடு கனவு என்பது, பலருக்கு எட்டாக்கனியாகவே உள்ளது.
வீட்டுக்கடன் சலுகைகள்
ஆனால் இன்றைய காலகட்டத்தில் அது மிக எளிது.சொந்தமாக வீடுகட்டவோ அல்லது வீடு வாங்கவோ இங்கு பல வழிகள் உண்டு. குறிப்பாக ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பல சலுகைகளை வாரி வழங்குகின்றன. இன்றைய காலகட்டத்தில் வங்கிகளில் வட்டி விகிதமும் மிக குறைவாக உள்ளது. அதிலும் பெண்கள் பெயரில் வாங்கும்போது கூடுதல் சலுகைகள் உண்டு. அதிலும் ஒரு சில வங்கிகள் வீட்டுக்கடனுக்கென தனி சலுகைகளை வழங்குகின்றன.
பஞ்சாப் நேஷனல் ஹவுஸிங் பைனான்ஸின் சலுகை
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது பஞ்சாப் நேஷனல் ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனம், என்ன சலுகையை வழங்குகிறது என்று தான். அதிலும் குறிப்பாக மாத சம்பளதாரர்களுக்கு என்ன சலுகை வாருங்கள் பார்க்கலாம். பஞ்சாப் நேஷனல் ஹவுஸிங் பைனான்ஸ் Unnati Home Loan என்ற சலுகையை வழங்கி வருகிறது. இந்த சலுகை மூலம் 35 லட்சம் ரூபாய் வரையில் வீட்டுக்கடன் வழங்குகிறது.
Array
இந்த உன்னாட்டி ஹோம் லோனில், சம்பளதாரர்கள் அவர்களின் சொத்தின் சந்தை மதிப்பில் 90% கடனாக பெற்றுக் கொள்ளலாம். இதே சுயதொழில் செய்பவர்கள் சந்தை மதிப்பில் 80% கடனாக பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் கடன் டயர் 1 நகரங்களில் 8 லட்சம் ரூபாயாகும். இதே டயர் 2 நகரங்களில் 6 லட்சம் ரூபாய் வரையிலும் பெற்றுக் கொள்ளலாம்.
கனவை அடைய நல்ல வழி
இது குறித்து பிஎன்பி ஹவுஸிங் பைனான்ஸின் நிர்வாக இயக்குனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹர்தயல் பிரசாத் கூறுகையில், கனவு வீட்டின் இலக்கை இந்த சலுகை மூலம் எளிதாக அடையலாம். இது விரைவான வலி. இது நடுத்தர மற்றும் வருமானம் குறைந்த வர்த்தகத்தினருக்கு சிறந்த அம்சமாக அமையும். இது உண்மையில் வீடு கட்ட நினைபோருக்கு ஒரு உந்துதலை கொடுக்கும்.
என்ன சிறப்பம்சம்
சம்பளதாரர்கள் மற்றும் சுயதொழில் செய்வோருக்கு ஏற்றவாறு கடன் தொகையை கட்டிக் கொள்ள அனுமதிக்கிறது. குறிப்பாக சம்பளதாரர்களுக்கு சொத்தின் சந்தை மதிப்பில் 90% கடன் வாங்கிக் கொள்ளலாம். வட்டி வீதம் வருடத்திற்கு 10.75% ஆகும். எளிமையான ஆவணங்கள் மற்றும் விரைவான ஒப்புதல்கள் என பல சலுகைகளை இந்த திட்டத்தில் வழங்குகிறது. ஆக நிச்சயம் உங்கள் கனவு இல்லத்தினை வாங்கவோ கட்டவோ, இது ஒரு சரியான வாய்ப்பாக அமையலாம்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications