இந்தியாவில் கொரோனா பரவலுக்கு மத்தியில் பணப்புழக்கத்தினை அதிகரிக்கவும், பொருளாதாரத்தினை மீட்டு எடுக்கவும் இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து ரெப்போ விகிதத்தினை குறைவாகவே வைத்துள்ளது.
இதற்கிடையில் வங்கிகளும் வட்டி விகிதத்தினை குறைவாகவே வைத்துள்ளது. இது பெரியளவில் மாற்றம் செய்யப்படவில்லை.
இன்றைய நெருக்கடியான காலகட்டத்தில், சந்தை அபாயங்களால் பாதிக்கப்படாத முதலீடு எனில் அது பிக்ஸட் டெபாசிட் தான்.
மிக பாதுகாப்பானது
குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு மிக முக்கிய திட்டமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் வட்டி விகிதம் குறைவாக இருந்தாலும், முதலீடு பாதுகாப்பாக உள்ளது. இதுவே முதலீட்டாளார்களுக்கு மிகப்பெரிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இதனால் வட்டி குறைவாக இருந்தாலும், இன்றளவிலும் மக்கள் பெருமளவில் நாடுவது இதனைத் தான்,
வட்டி விகிதம் மாற்றம்
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது பஞ்சாப் நேஷனல் வங்கியில் வட்டி விகிதம் பற்றித் தான். பழைய விகிதம் எவ்வளவு? புதிய விகிதம் என்ன? இதனால் மக்களுக்கு சாதகம் என்ன? பாதகம் என்ன? வாருங்கள் பார்க்கலாம். பிஎன்பியில் பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எப்போது அமல்
முன்னதாக இந்த வட்டி விகிதம் 3% முதல் 5.25% வரை இருந்தது. இது 7 நாள் முதல் 10 வருடம் வரையிலான முதிர்வு காலம் உள்ளது. ஆனால் இந்த விகிதங்கள் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளன. தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ள இந்த வட்டி விகிதமானது மே 1, 2021 முதல் அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வட்டி விகிதம்
பஞ்சாப் வங்கியில் 2 கோடி ரூபாய்க்குள்ளான வைப்பு நிதிக்கு, பொதுமக்களுக்கான வட்டி விகிதம்
7 - 14 நாட்கள் - 3%
15 - 29 நாட்கள் - 3%
30 - 45 நாட்கள் - 3%
46 - 90 நாட்கள் - 3.25%
91 - 179 நாட்கள் - 4%
180 - 270 நாட்கள் - 4.4%
271 நாட்கள் முதல் 1 வருடத்திற்குள் - 4.5%
1 வருடத்திற்கு - 5.10%
1 வருடத்திற்கு மேல் - 2 வருடத்திற்குள் - 5.10%
2 வருடத்திற்கு மேல் - 3 வருடத்திற்குள் - 5.10%
3 வருடத்திற்கு மேல் - 5 வருடத்திற்குள் - 5.25%
5 வருடத்திற்கு மேல் - 10 வருடத்திற்குள் - 5.25%
மூத்த குடிமக்களுக்கு என்ன விகிதம்?
மூத்த குடிமக்களுக்கு கூடுதலான 0.5% விகிதம் வழக்கம்போல தொடரும். 7 நாட்கள் முதல் - 10 வருடம் வரையிலான இந்த டெபாசிட்களுக்கு 35% முதல் 5.75% வரை வட்டி விகிதம் கொடுக்கப்படுகிறது. இந்த மாதத்தில் ஆக்ஸிஸ் வங்கி, ஐடிஎஃப்சி வங்கி, கோடக் மகேந்திரா வங்கி உள்ளிட்ட சில வங்கிகளும் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications