இந்தியாவில் இந்த பண்டிகை காலத்தில் கார் வாங்க இதுவே சிறந்த நேரம். இந்த காலகட்டத்தில், பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்கள் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்குகின்றன.
வரும் நாட்களில் நிறைய பண்டிகை காலங்கள் உள்ளதால், மக்கள் அதிக அளவில் ஷாப்பிங் செய்ய திட்டமிட்டுள்ளனர். இவர்களில் பலர் பண்டிகைக் காலத்தில் புதிய கார் வாங்கவும் திட்டமிட்டு இருப்பார்கள். நீங்களும் இந்த சீசனில் கார் வாங்க நினைக்கிறீர்கள் என்றால், இந்த தகவல் உங்களுக்கு மிகவும் முக்கியமானது.

பண்டிகைக் காலத்தில் புதிய கார்களை வாங்க விரும்புவோருக்கு வங்கிகள் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்குகின்றன. சில வங்கிகள் செயலாக்கக் கட்டணத்தை வசூலிப்பதில்லை. இந்த பண்டிகை காலங்களில் கடன் தேவை அதிகமாக இருப்பதால் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களும் கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தில் கார் கடன்களை வழங்குகின்றன. சில மாடல்களுக்கு 100 சதவீதம் நிதி வழங்க தயாராக உள்ளது. ஆனால் எந்த வங்கியில் குறைந்த வட்டி விகிதம் உள்ளது என்பது பலருக்கு தெரியாது.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா:கார் கடனுக்கான வட்டி விகிதம் 8.70 சதவீதம் முதல் 10.45 சதவீதம் வரை உள்ளது. ரூ. 5 லட்சம் கார் கடன் 5 ஆண்டுகள் வரை இருக்கும். ஒவ்வொரு மாதமும் இஎம்ஐ ரூ. 10,307 முதல் ரூ. 10,735 செலுத்த வேண்டும். மேலும், இந்த வங்கி கடனுக்கு எந்த செயலாக்கக் கட்டணமும் வசூலிக்காது.
பஞ்சாப் நேஷனல் வங்கி:கார் கடனுக்கான வட்டி விகிதம் 8.75 சதவீதம் முதல் 10.65 சதவீதம் வரை உள்ளது. ரூ. 5 லட்சம் கடன் இஎம்ஐ ரூ. 10,319 முதல் ரூ. 10,772 செலுத்த வேண்டும். செயலாக்க கட்டணம் 0.25 சதவீதம் ஆக இருக்கும்.
பாங்க் ஆப் பரோடா:கார் கடன் வட்டி விகிதம் 8.95 சதவீதம் முதல் 12.70 சதவீதம் வரை இருக்கும். இஎம்ஐ ரூ. 10,367 முதல் ரூ. 11,300 செலுத்த வேண்டும். செயலாக்க கட்டணம் ரூ. 750 வரை இருக்கும்.
UCO வங்கி: கார் கடனுக்கான வட்டி விகிதம் 8.45 சதவீதம் முதல் 10.55 சதவீதம் வரை இஎம்ஐ ரூ. 10,246 முதல் ரூ. 10,759 செலுத்த வேண்டும். செயலாக்க கட்டணம் தேவையில்லை.
கனரா வங்கி:கார் கடன் வட்டி விகிதம் 8.70 சதவீதம் முதல் 12.70 சதவீதம் வரை உள்ளது. இஎம்ஐ ரூ. 10,307 முதல் ரூ. 11,300 செலுத்த வேண்டும். செயலாக்க கட்டணம் தேவையில்லை.
பேங்க் ஆஃப் இந்தியா:இந்த கார் கடனுக்கான வங்கியின் வட்டி விகிதங்கள் 8.85 சதவீதம் முதல் 12.10 சதவீதம் வரை இருக்கும். இஎம்ஐ ரூ. 10,343 முதல் ரூ. 11,148 வரை செயலாக்க கட்டணம் 0.25 சதவீதம் ஆகும்.
மேலும், மற்ற வங்கிகளில் கார் கடன் வட்டி விகிதம் 8.7 சதவீதம் முதல் 13 சதவீதம் வரை உள்ளது.


Click it and Unblock the Notifications