தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று தமிழ்நாட்டில் கோலாகலமான நடைபெற்று வருகிறது. தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக இந்த பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. வீடுகள் தோறும் மக்கள் பொங்கல் வைத்து ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறி பொங்கலை வரவேற்பார்கள். அந்த வகையில் இன்று விசேஷமான அமையும்.
தை பிறந்தால் வழிபிறக்கும் என்பார்கள் அப்படி இந்த தை மாதத்தில் 3 ஆண்டுகளுக்கும் முன் செய்யப்பட்ட முதலீடு ஒன்று இன்று அதிக வருமானத்தை கொடுத்துள்ளது. ஆம், நாம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் குறித்து தெரிந்துகொள்ள இருக்கிறோம். 2022 ஆம் ஆண்டில் அதாவது கடந்த 3 ஆண்டுகளில் இதே நாளில் முதலீடு செய்யப்பட்ட தொகை ஆனது இன்று அதிக லாபத்தை அளித்திருக்கும். அந்த வகையில், அதிக வருமானம் ஈட்டிய முதல் 5 மிட்-கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் என்ன என்பதை பார்க்கலாம்.

டாப்-5 மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்: கடந்த 3 ஆண்டுகளில் மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் நல்ல வருமானத்தை அளித்துள்ளன. சில ஃபண்டுகள் சராசரியாக ஆண்டுக்கு 32% வரை லாபத்தைப் பெற்றுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் சிறப்பாகச் செயல்பட்டன. இந்த ஃபண்டுகள் ஆண்டுக்கு சராசரியாக 32% வரை வருமானம் அளிப்பதன் மூலம் முதலீட்டாளர்களின் செல்வத்தை அதிகரித்துள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் அதிக வருமானம் தந்த மிட் கேப் பிரிவில் முதல் 5 மியூச்சுவல் ஃபண்டுகளைப் பார்த்தால், மோதிலால் ஓஸ்வால் மிட்கேப் ஃபண்ட் முதலிடம் பிடித்துள்ளது.
இருப்பினும், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ஆபத்து நிறைந்தது. முந்தைய ஆண்டுகளின் வருமானம் எதிர்கால வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்காது. இருப்பினும், முந்தைய ஆண்டுகளின் வருமானம் அந்தந்த மியூச்சுவல் ஃபண்டுகளின் செயல்திறனைக் குறிக்கிறது. எனவே, மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு முன், கடந்த சில ஆண்டுகளின் வருமானத்தைப் பார்ப்பது நல்லது.
கடந்த 3 ஆண்டுகளில் அதிக வருமானம் ஈட்டிய முதல் 5 மிட்கேப் ஃபண்டுகள்:மிட்கேப் மியூச்சுவல் ஃபண்ட் பிரிவில் மோதிலால் ஓஸ்வால் மிட்கேப் ஃபண்ட் முதலிடத்தில் உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் 32.41 சதவீத வருமானத்தை அளித்துள்ளது.
எச்டிஎஃப்சி மிட்கேப் ஃபண்ட் ஆப்பர்சுனிட்டி ஃபண்ட்: கடந்த மூன்று ஆண்டுகளில் 26.17% வருமானம் கொடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது.
நிப்பான் இந்தியா குரோத் ஃபண்ட்: மூன்றாவது இடத்தில் உள்ளது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் 24.14 சதவீத வருமானத்தை அளித்துள்ளது.
எடல்வைஸ் மிட்கேப் ஃபண்ட்: கடந்த மூன்று ஆண்டுகளில் சராசரியாக 24.04% லாபம் கொடுத்து இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
இன்வெஸ்கோ இந்தியா மிட்கேப் ஃபண்ட்: கடந்த மூன்று ஆண்டுகளில் 23.17% வருமானத்துடன் டாப்-5ல் உள்ளது.


Click it and Unblock the Notifications