சென்னை: பொன்மகன் சேமிப்பு திட்டம் திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015 ஆம் வருடம் தமிழக அரசால் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் ஆண் குழந்தைகளுக்கு மட்டுமே பயன்படும் பிரத்யேக திட்டம் ஆகும். இதற்கு விண்ணப்பிக்க தமிழ்நாட்டில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.
மக்கள் வசதியாகப் பணத்தைச் சேமிக்கவும், அவர்களின் சேமிப்பில் வட்டியைப் பெறவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. காலப்போக்கில் தங்கள் சேமிப்பை அதிகரிக்க எளிய மற்றும் பாதுகாப்பான வழியை விரும்பும் நபர்களுக்கு இந்த திட்டம் குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும். பொன்மகன் திட்டத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பணத்தை டெபாசிட் செய்யலாம் மற்றும் வட்டி திரட்டலின் கூடுதல் பலனுடன் தங்கள் சேமிப்பை அதிகரிக்கலாம்.

நிதி நிர்வாகத்தின் நம்பகமான மற்றும் அணுகக்கூடிய வழிமுறைகளைத் தேடுபவர்களிடையே இது ஒரு பிரபலமான தேர்வாகும். இந்த திட்டத்தின் கீழ் குறைந்தது ரூ.500 முதல் ரூ.1,50,000 வரை சேமிப்பு தொகையாக செலுத்தலாம். ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான நிதியாண்டை கணக்கில் கொண்டு பணம் செலுத்த வேண்டும். இதில் 8.1% இன்டெரெஸ்ட் வழங்கப்படும். இந்த வட்டி விகிதமானது ஆண்டுக்கு ஆண்டு மாறுபடலாம். எனவே அருகில் உள்ள தபால் நிலையத்தை அணுகவும். இந்த திட்டத்தில் 8.1 சதவிகித வட்டியில் குறைந்தபட்ச ஆரம்ப வைப்புத்தொகை ரூ. 500 வைத்து மாதம் செலுத்தினால் 15 வருடத்திற்கு 90 ஆயிரம் செலுத்துவீர்கள். இதற்கு 1.83 லட்சம் உங்களுக்கு முதிர்வு கிடைக்கும்.
பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்திற்கு யாரெல்லாம் தகுதி ஆனவர்கள்: இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்ய 10 வயதிற்கு மேல் இருந்தால் அவர்களின் பெயரிலோ அல்லது 10 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு ஜாயிண்ட் அக்கௌன்ட் மூலமாகவோ தொடங்கலாம். அதாவது பெற்றோர் பெயரும் குழந்தையின் பெயரும் சேர்த்து அக்கௌன்ட் ஓபன் செய்யலாம். இந்த திட்டத்தில் சேமிக்க எந்த வயது வரம்பும் இல்லை. இதற்காக அக்கௌன்ட் ஓபன் செய்ய விரும்பும் பெற்றோர் அருகில் இருக்கும் தபால் நிலையங்களில் ஓபன் செய்து கொள்ளலாம்.
பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்திற்கு தேவைப்படும் ஆவணங்கள்: இதற்கு குழந்தையின் பிறப்பு சான்றிதழ், புகைப்படம். பெற்றோர்களுடைய பான், ஆதார் மற்றும் சரியான முகவரி ஆகியவை தேவைப்படும்.
இந்த திட்டத்தின் சேமிப்பு காலம் 15 வருடங்கள். கணக்கு தொடங்கப்பட்டது முதல் 7 ஆவது ஆண்டில் 50% தொகையைப் பெற்றுக்கொள்ளலாம். 15 ஆண்டுகள் முடிவுற்ற பின் கணக்கினை முடித்து கொள்ளலாம். சிலருக்கு முன்னதாகவே பணம் தேவைப்பட்டால், கணக்கு தொடங்கிய நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்கு பின் பணத்தை எடுத்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் உங்கள் சேமிப்பு கணக்கில் நீங்கள் போடும் பணத்திற்கு எவ்வித வடியும் நீங்கள் செலுத்த தேவையில்லை. எனவேய, உரிய காரணத்தினை கூறும் பட்சத்தில் நீங்கள், முன்னதாகவே பணத்தைப் பெறலாம். section 80சி இன் கீழ் இந்த திட்டத்தில் செலுத்தும் தொகைக்கு வருமான வரி விலக்கு வழங்கப்படுவதுடன், வட்டிக்கு வரி விலக்கும் அளிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications