போஸ்ட் ஆபீஸ்களில் வழங்கப்படும் பிக்சட் டெபாசிட்களுக்கு தற்போது 6.9 சதவீதம் முதல் 7.5 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. பொதுவாகவே பிக்சட் டெபாசிட்கள் என்றால் முதலீட்டாளர்கள் நம்பி முதலீடு செய்வார்கள். அந்த அளவுக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் நற்பெயரை பெற்ற ஒரு திட்டம் என்றால் அது FD தான். இந்தப் பதிவில் ரூ. 2 லட்ச ரூபாயை 5 வருடங்களுக்கு முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்? என்பதை விரிவாகப் பார்ப்போம்.
போஸ்ட் ஆபீஸ்களில் FD கணக்கு திறக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள், குறைந்தபட்ச தொகையாக 1000 ரூபாயிலிருந்து தொடங்கலாம். மேலும் 100-இன் மடங்குகளில் முதலீடு செய்யலாம். அதாவது ரூ. 1300, ரூ. 1900 என்ற விகிதத்தில் முதலீடு செய்ய முடியும். ஆனால் ரூ. 1210, ரூ. 1420 என்றெல்லாம் முதலீடு செய்ய முடியாது.

போஸ்ட் ஆபீஸ்களில் FD திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்கள்:
1 வருடத்திற்கு - 6.9 % வட்டி
2 ஆண்டுகளுக்கு - 7.0 % வட்டி
3 ஆண்டுகளுக்கு - 7.1 % வட்டி
5 ஆண்டுகளுக்கு - 7.5 % வட்டி
ரூ. 2 லட்ச ரூபாயை FD திட்டத்தில் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?: நீங்கள் போஸ்ட் ஆபீஸ் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் ரூ.2 லட்ச ரூபாயை முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். 1 ஆண்டுக்கு 6.9 சதவீத வட்டி வழங்கப்பட்டால் 14,161 ரூபாய் வட்டி மட்டும் கிடைக்கும். அப்படியானால் முதிர்வு காலத்தில் 2,14,161 ரூபாயை பெறலாம்.
அதுவே ரூ. 2 லட்ச ரூபாயை 2 வருடங்களுக்கு போஸ்ட் ஆபீஸ் FD திட்டத்தில் முதலீடு செய்தால் 7.0 சதவீத வட்டி விகிதத்தில் 29,776 ரூபாய் வட்டி மட்டும் கிடைக்கும். அப்படியானால் முதிர்வு காலத்தில் 2,29,776. ரூபாய் பெறுவீர்கள்.
அதுவே 3 வருடங்களுக்கு ரூ. 2 லட்ச ரூபாயை போஸ்ட் ஆபீஸ் FD திட்டத்தில் முதலீடு செய்தால் 7.1 சதவீத வட்டி விகிதத்தில் 47,015 ரூபாய் வட்டி கிடைக்கும். முதிர்வு காலத்தில் 2,47,015 ரூபாய் வருமானம் பெறுவீர்கள்.
5 வருடங்களுக்கு ரூ. 2 லட்ச ரூபாயை போஸ்ட் ஆபீஸ் பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்கிறீர்கள் என்றால் 89,989 வட்டி கிடைக்கும். முதிர்வு காலத்தில் 2,89,989 ரூபாய் கிடைக்கும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள பிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்கள் நிலையானவை அல்ல. இவை மாறக்கூடிய ஒன்றே. ஆனால் தற்போது இந்த வட்டி விகிதங்களில் தான் பிக்சட் டெபாசிட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
புதிதாக இந்த திட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்பவர்களுக்கு எப்படி ரூ. 2 லட்ச ரூபாய்க்கு இவ்வளவு வட்டி கிடைக்கிறது என்ற குழப்பம் இருக்கும். இவற்றை தெரிந்து கொள்ள நீங்கள் ஆன்லைன் FD கால்குலேட்டர்களைப் பயன்படுத்தலாம். அதில் உங்கள் முதலீட்டுத் தொகை மற்றும் வட்டி விகிதம் ஆகியவற்றை கொடுத்தால் முதிர்வு காலத்தில் எவ்வளவு தொகை திரும்ப கிடைக்கும் என்பதை எளிதில் பார்க்க முடியும். இதனால் தகவல் அறிந்து முதலீட்டு முடிவை எடுக்கலாம்.


Click it and Unblock the Notifications