ஒவ்வொரு நபரும் தங்கள் பணத்தை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்வது முக்கியம். இன்றெல்லாம் சேமிப்பு தொடர்பான விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்துவிட்டது. இதனால் எந்த திட்டத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று தேடத் தொடங்கி விட்டனர். இதன் விளைவாக மோசடிகளும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. ஏனெனில் சிலர் குறைந்த காலகட்டத்தில் அதிக வருமானம் பெற வேண்டும் என்று நினைக்கின்றனர். முதலீட்டின் தாரக மந்திரமே நீண்ட நாட்கள் முதலீடு செய்வதுதான். எந்த ஒரு திட்டமானாலும் நீண்ட நாட்கள் முதலீடு செய்வது லாபத்தை அதிகரிக்க உதவும்.
எனவே மக்களின் பணத்தை பாதுகாப்பாக பெற்று வருமானம் வழங்குவதற்காக அரசு எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறது. இதனால் எதில் முதலீடு செய்தால் நல்ல லாபம் ஈட்டலாம் என்று பலருக்கும் குழப்பம் ஏற்படுகிறது. இந்தப் பதிவில் 2 முக்கியமான திட்டங்களை ஒப்பிட்டுப் பார்த்து அதில் ரூ. 2 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்? என்று பார்ப்போம்.

ரூ.2 லட்ச ரூபாயை 2 ஆண்டுகளுக்கு மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டத்திலும், பிக்சட் டெபாசிட் திட்டத்திலும் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று பார்ப்போம்.
மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டம் (MSSC): இந்த திட்டம் ஒரு குறுகிய காலத்திட்டமாகும். MSSC திட்டத்தில் முதலீடு செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 31, 2025. இன்னும் தோராயமாக 40 நாட்கள் உள்ளன. இந்த திட்டத்தில் பெண்கள் 7.5 சதவீத வட்டியின் மூலம் பலன் பெறலாம். இது பெண்களுக்காக உருவாக்கப்பட்ட பிரத்தியேக திட்டமாகும்.
MSSC திட்டத்தின் முதிர்வு காலம் 2 ஆண்டுகள். இது தான் லாக்கின் காலம். இந்த காலகட்டத்திற்குள் நீங்கள் உங்கள் முதலீட்டை திரும்பப் பெற முடியாது. 2 ஆண்டுகளுக்கு ரூ.2 லட்சத்தை முதலீடு செய்தால் முதிர்ச்சியின் போது மொத்தமாக ரூ. 2,32,044 பெற்றுக் கொள்ளலாம். இதில் ரூ. 32,044 என்பது வட்டி வருமானம் ஆகும். போஸ்ட் ஆபீஸ் பிக்சட் டெபாசிட்டில் ரூ.2 லட்சத்தை முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்? என்று பார்ப்போம்.
போஸ்ட் ஆபீஸ் பிக்சட் டெபாசிட்: 2 வருட பிக்ஸட் டெபாசிட்டை தேர்வு செய்து ரூ.2 லட்சத்தை முதலீடு செய்தால் 7 சதவீத வருமானம் கிடைக்கும். அப்படியானால் முதிர்வு காலத்தில் ரூ.2,29,776 பெற்றுக் கொள்ளலாம். இதில் ரூ. 29,776 வட்டி வருமானமாகும். இந்த 2 திட்டங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் பெண்களுக்காக வழங்கப்படும் மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டத்திற்கு அதிக வட்டி வழங்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். இதைப் போலவே பிற திட்டங்களும் உள்ளன.
உதாரணமாக பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்ய சம்ரித்தி யோஜனா திட்டம், மூத்த குடிமக்களுக்கு மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் என எந்த திட்டத்தில் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். எனவே முதலீடு செய்வதற்கு முன்பு இது போன்ற ஒப்பிட்டு பதிவுகளை பார்த்தால் எந்த திட்டங்களுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். எந்த ஒரு முதலீட்டு முடிவும் எடுப்பதற்கு முன்பு தகவல் அறிந்து முடிவெடுங்கள்.
More From GoodReturns

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!



Click it and Unblock the Notifications