போஸ்ட் ஆபீஸ்களில் எண்ணற்ற சேமிப்புத் திட்டங்கள் வழங்கப்படுகின்றன. அவற்றில் பிக்சட் டெபாசிட் திட்டம் மற்றும் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டமும் அடங்கும். இந்த 2 திட்டங்களுமே நீண்ட காலமாக மக்களால் நம்பி தேர்ந்தெடுக்கப்படும் முதலீட்டு திட்டங்களாகும். இவ்விரு திட்டங்களில் ரூ.1 லட்சத்தை முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்? என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
பிக்சட் டெபாசிட் (Fixed Deposit) திட்டத்திற்கு தற்போது 7.5 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC) திட்டத்திற்கு தற்போது 7.7 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
பிக்சட் டெபாசிட் மற்றும் தேசிய சேமிப்புச் சான்றிதழ் ஆகிய இரண்டு திட்டங்களுமே போஸ்ட் ஆபீஸ்களால் வழங்கப்படும் பாதுகாப்பான முதலீட்டு திட்டங்கள் தான். போஸ்ட் ஆபீஸ் FD என்றும், போஸ்ட் ஆபீஸ் டேர்ம் டெபாசிட் என்றும் பிக்சட் டெபாசிட் அழைக்கப்படுகிறது. 1 ஆண்டு, 2 ஆண்டு, 3 ஆண்டு மற்றும் 5 ஆண்டு என பல்வேறு விருப்பங்களை வழங்குகிறது.
அதே சமயம் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்திற்கான முதிர்வுக் காலம் 5 ஆண்டுகள். சிலர் வட்டி விகிதம் அதிகமாக இருந்தால் அதற்கு வருமானம் அதிகமாக இருக்கும் என்று நினைத்துக் கொள்கின்றனர். NSC திட்டம் அதிக வட்டி விகிதத்தை கொண்டிருந்தாலும் பிக்சட் டெபாசிட்கள், NSC திட்டத்தினை விட சற்று அதிக வருமானத்தை வழங்குகிறது.

வட்டி எப்படி கணக்கிடப்படுகிறது?: முதலீடு செய்யும்போது மக்கள் பெரும்பாலும் அதிக வட்டி விகிதம் அதிக லாபத்திற்கு உத்தரவாதம் தரும் என்று கருதுகின்றனர். ஆனால் அப்படி கிடையாது. வட்டி கணக்கிடும் முறை ஒவ்வொரு திட்டத்தை பொருத்தும் மாறுபடுகிறது.
பிக்சட் டெபாசிட் கணக்கீடு: ரூ.1 லட்ச ரூபாயை 5 ஆண்டு பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்கிறீர்கள், இந்த ஒட்டுமொத்த முதலீட்டு காலத்திற்கும் 7.5% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் ஒவ்வொரு காலாண்டிற்கும் வட்டி விகிதம் 1.875 சதவீதமாக இருக்கும்.
உதாரணமாக ஆரம்பத்தில் ரூ.1 லட்ச ரூபாயை நீங்கள் முதலீடு செய்யும் போது முதல் 3 மாதங்களுக்கு 1.875% வட்டி விகிதத்தில், உங்களுக்கு வருமானமாக ரூ.1875 ரூபாய் கிடைக்கும். அடுத்த காலாண்டில் இந்த புதிய தொகைக்கு வட்டி கணக்கிடப்படுகிறது. இதே போல செயல்முறை மீண்டும் மீண்டும் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது. 5 ஆண்டு கால முடிவில் முதிர்வுத் தொகை தோராயமாக ரூ.1,44,995 ரூபாயாக இருக்கும்.
தேசிய சேமிப்புச் சான்றிதழ் கணக்கீடு: தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்திற்கு 7.7 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இதன்படி முதல் ஆண்டில் வருமானமாக ரூ.7,700 கிடைக்கும். மேலும் இந்த தொகை தொடர்ந்து 5 வருடங்களுக்கு கிடைக்கிறது. இதன் மூலம் நீங்கள் 1,44,903 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம்.
NSC அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது. இருப்பினும் பிக்சட் டெபாசிட்கள் காலாண்டுக்கு ஒருமுறை கூட்டு வட்டி விகிதத்தை வழங்குவதால் NSC திட்டம் வழங்கும் ரூ.1,44,903 ரூபாய் உடன் ஒப்பிடுகையில் பிக்சட் டெபாசிட்களுக்கு ரூ.1,44,995 ரூபாய் வருமானம் கிடைக்கிறது, இந்த வேறுபாடு உங்களுக்கு குறைவாக தோன்றலாம். ஆனால் அதிக அளவிலான தொகையை முதலீடு செய்யும் போது இந்த சிறு தொகையும் பெரிய அளவிலான வருமானத்தை பெற்று தரும்.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications