2025 ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு தான் வழங்கக்கூடிய கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 1.25% வரை குறைத்திருக்கிறது . இதன் காரணமாக வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு வழங்கக்கூடிய கடன்களுக்கான வட்டியை குறைத்து இருக்கின்றன. கடன் வாங்கியவர்களை பொறுத்தவரை இது நல்ல விஷயம்.
அதே வேளையில் வங்கிகள் தங்களுடைய டெபாசிட் திட்டங்களுக்கான வட்டிகளையும் இதற்கு நிகராக குறைத்துவிட்டன . இதனால் வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்து வட்டி வருமானம் பார்க்க நினைப்பவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு ஒரு மோசமான ஆண்டு என்றே கூறலாம். இந்த ஆண்டில் மட்டும் 1.25% வரை ரெப்போ வட்டி குறைக்கப்பட்டிருக்கிறது அதற்கு நிகராக பல்வேறு வங்கிகளும் தங்களுடைய வங்கிகளின் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டிகளை குறைத்துவிட்டன.

தற்போது மூன்றில் இருந்து நான்கு ஆண்டு காலத்திற்கு மேல் இருக்கக்கூடிய நிலையான வைப்பு தொகை திட்டங்களுக்கு மட்டுமே 6 சதவீதத்திற்கும் மேல் வட்டி என்பது கிடைக்கிறது. இந்த சூழலில் வங்கி டெபாசிட் திட்டங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி தபால் நிலையங்களில் கிடைக்கக்கூடிய டெபாசிட் திட்டங்கள் அதிக லாபம் தருபவையாக தற்போது மாறி இருக்கின்றன .
இந்தியாவில் பாதுகாப்பான , நம்பகமான முதலீடு , முதலுக்கு மோசம் தராத ஒரு முதலீடு என்றால் அஞ்சலக அலுவலகங்களில் வழங்கப்படும் முதலீட்டு திட்டங்கள் என்று தான் கூற வேண்டும். ஏனெனில் இங்கே நாம் செய்யக்கூடிய முதலீட்டுக்கு எவ்வளவு வட்டி கிடைக்கும் என்பது நமக்கு முன்கூட்டியே தெரியும், அதேபோல நம்முடைய பணமும் பாதுகாப்பாக இருக்கும். வங்கி டெபாசிட் திட்டங்களை விட தபால் நிலையங்களில் செய்யப்படும் டெபாசிட்களுக்கு அதிக வட்டி கிடைக்கிறது.
ஓய்வூதியதாரர்கள், பெரிய அளவில் ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களுக்கு தபால் நிலையங்களில் கிடைக்கக்கூடிய சேமிப்பு திட்டங்களும் முதலீட்டு திட்டங்களும் சிறந்த வாய்ப்புகளை வழங்குகின்றன. தபால் நிலைய திட்டங்களில் வட்டி விகிதம் என்பது மத்திய நிதி அமைச்சகத்தால் நியமனம் செய்யப்படுகிறது. பெரும்பாலும் இந்த வட்டி விகிதத்தை அரசு குறைப்பது கிடையாது.
தற்போது தபால் நிலையங்களில் வழங்கப்படும் டைம் டெபாசிட் திட்டங்களுக்கு 6.9% முதல் 7.5% வரை வட்டி கிடைக்கிறது. இது பெரும்பாலான வங்கிகள் வழங்கக்கூடிய வட்டியை விட அதிகம். நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி ஓராண்டு முதல் இரண்டு வரையிலான திட்டங்களுக்கு 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு 6.25% வட்டியும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 6.75 % வட்டியும் வழங்குகிறது. அதுவே போஸ்ட் ஆபீஸில் 6.9% வட்டி கிடைக்கிறது .
மூன்று ஆண்டுகள் வரையிலான சேமிப்பு திட்டங்களுக்கு 6.40 சதவீதம் வட்டி வழங்கிறது எஸ்பிஐ. இதுவே போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் திட்டங்களில் 7.1% வட்டி கிடைக்கிறது. 5 ஆண்டுகள் செய்யப்படும் டெபாசிட் திட்டங்களுக்கு அஞ்சல் அலுவலகங்களில் 7.5% வட்டி கிடைக்கிறது. ஆனால் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் 6.05 % தான் கிடைக்கிறது .
அந்த வகையில் பார்க்கும்போது வங்கிகளுடன் ஒப்பிடும்போது தபால் நிலையங்கள் சிறந்த வட்டி வருமானத்தை தருகின்றன. உதாரணமாக 2 லட்சம் ரூபாய் பணத்தை போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்தின் கீழ் நீங்கள் ஐந்தாண்டு காலத்திற்கு முதலீடு செய்யும்போது உங்களுக்கு ஐந்தாண்டுகளின் முடிவில் கூடுதலாக 89,999 ரூபாய் வட்டியாக கிடைக்கும். அதாவது 2, 89,990 ரூபாய் பணமாக கிடைக்கும் .
இது தவிர தபால் நிலைய டைம் டெபாசிட் திட்டங்களுக்கு வருமான வரி சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வரி சலுகைகளும் கிடைக்கும். வங்கிகளின் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டிகள் குறைக்கப்பட்டு வரக்கூடிய சூழலில் தங்களுடைய பணத்தை பாதுகாப்பான அதே வேளையில் நல்ல வருமானம் தரக்கூடிய திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என காத்திருப்பவர்கள் தபால் நிலைய டைம் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications