பாதுகாப்பான முறையில் தங்களுடைய வருமானத்தை அதிகரிக்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு போஸ்ட் ஆபீஸ்களில் எண்ணற்ற நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. அவற்றில் சில திட்டங்களுக்கு மொத்தமாக முதலீடு செய்ய வேண்டும். சில திட்டங்களுக்கு மாதம் மாதம் முதலீடு செய்யலாம். தங்களின் வருமானத்திற்கு ஏற்ப முதலீட்டாளர்கள் ஏதேனும் ஒரு திட்டத்தை தேர்வு செய்யலாம். இந்த பதிவில் மொத்தமாக 5 லட்ச ரூபாயை முதலீடு செய்தால் ரூ.15 லட்சம் வருமானம் வழங்கும் ஒரு திட்டம் குறித்து தான் பார்க்கவுள்ளோம்.
வீட்டில் ஒரு குழந்தை பிறந்து விட்டால் உடனே அந்த குழந்தைக்காக சேமிக்க வேண்டும் என்று பலர் யோசிக்கின்றனர். இதன் காரணமாக சிலர் குழந்தை பிறந்த உடனே எந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம் என்று தேடத் தொடங்கி விடுகின்றனர். சிலர் குழந்தைகளின் பெயரில் PPF, சுகன்ய சம்ரித்தி யோஜனா போன்ற திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். சிலர் குழந்தையின் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்ய வேறு எந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம் என்று யோசிக்கின்றனர். அப்படி யோசிப்பவர்களுக்கு தபால் அலுவலகங்களில் வழங்கப்படும் "டேர்ம் டெபாசிட் திட்டம்" உதவிகரமானதாக இருக்கும்.

டேர்ம் டெபாசிட் திட்டத்தை ஃபிக்சட் டெபாசிட் என்றும் கூறுவர். வங்கிகளை விட தபால் அலுவலகங்களில் 5 வருட ஃபிக்சட் டெபாசிட்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் உங்களுடைய முதலீடு 3 மடங்காக உயரும். அதாவது ரூ.5 லட்சத்தை முதலீடு செய்தால் 15 லட்சத்திற்கும் மேல் சம்பாதிக்கலாம். இது எப்படி சாத்தியம்? அதற்கு எவ்வளவு நாட்கள் முதலீடு செய்ய வேண்டும்? என்பதை பார்ப்போம்.
ரூ.5 லச்சத்தை ரூ.15 லட்சமாக மாற்ற நீங்கள் முதலில் 5 ஆண்டுகளுக்கு போஸ்ட் ஆபீஸ் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் ரூ.5 லட்ச ரூபாயை முதலீடு செய்ய வேண்டும். தபால் அலுவலகங்களில் தற்போது 5 வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது. அப்படியானால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு வட்டி வருமானமாக உங்களுக்கு 2,24,974 ரூபாய் கிடைக்கும். இதன் மூலம் மொத்த முதிர்வு தொகை ரூ.7,24,974-ஆக இருக்கும்.
அதன் பிறகு இந்த முதிர்வு தொகையை திரும்ப பெறாமல் மேலும் 10 ஆண்டுக்கு நீட்டிக்கும் பட்சத்தில் மொத்தமாக 10,24,149 ரூபாய் வட்டி வருமானம் கிடைக்கும். PPF திட்டத்தின் முதிர்வுக் காலம் 15 ஆண்டுகள். 5 ஆண்டு FD திட்டத்தை 15 ஆண்டுக்கு நீட்டிக்கும் பட்சத்தில் உங்களுடைய வருமானம் 3 மடங்காக மாறும். ரூ. 10,24,149 வட்டியுடன், ரூ.5 லட்சம் அசலையும் சேர்த்து 15,24,149 ரூபாய் வருமானம் பெறலாம்.
குழந்தைக்காக சேமிக்க விரும்புவார்கள் இந்த திட்டத்தையும் பயன்படுத்தி பலன் பெறலாம். குழந்தை பிறந்தவுடன் சேமிக்க தொடங்கினால் 15 வருடங்களுக்குப் பிறகு அவர்களுடைய உயர்கல்விக்கு உதவிகரமானதாக இருக்கும் வகையில் 15 லட்சம் ரூபாய் உங்கள் கையில் இருக்கும். ஆனால் இந்த 15 லட்சம் வருமானம் பெறுவதற்கு 5 வருட FD திட்டத்தை 2 முறை நீட்டிக்க வேண்டும். தபால் அலுவலகங்களில் வெவ்வேறு கால வரையறைகளுடன் FD திட்டங்கள் வழங்கப்படுகின்றன. 1 வருடம் FD திட்டத்தை 6 மாதங்கள் வரை நீட்டிக்கலாம். 2 வருட FD திட்டத்தை 12 மாதங்களுக்கு நீட்டிக்கலாம். 3 மற்றும் 5 வருட FD திட்டத்தை முதிர்வு காலத்திற்கு முன்பு 18 மாதங்களுக்குள் தபால் அலுவலகத்தில் தெரிவித்து அதன் பிறகு நீட்டிக்க வேண்டும்.
தபால் அலுவலகங்களில் வெவ்வேறு காலங்களுக்கு வெவ்வேறு வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
1 வருட FD கணக்கு - 6.9% ஆண்டு வட்டி
2 வருட FD கணக்கு - 7.0% ஆண்டு வட்டி
3 வருட FD கணக்கு - 7.1% ஆண்டு வட்டி
4 வருட FD கணக்கு - 7.5% ஆண்டு வட்டி
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications