பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீட்டை தேடும் நடுத்தர வர்க்கத்தினருக்கு போஸ்ட் ஆபீஸ்களில் திறப்பு திட்டங்கள் வழங்கப்படுகிறது. சுகன்யா சம்ரித்தி யோஜனா, பொது வருங்கால வைப்பு நிதி, RD, FD, மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் என பல திட்டங்கள் உள்ளன. அதில் மொத்தமாக முதலீடு செய்ய விரும்புபவர்களுக்காக கொண்டுவரப்பட்ட ஒரு திட்டம் தான் பிக்சட் டெபாசிட். இந்த திட்டத்தில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை மொத்தமாக முதலீடு செய்ய வேண்டும். அதற்கு நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதம் வழங்கப்படும்.
பிக்சட் டெபாசிட் என்று சொல்லப்படுகிற FD திட்டத்தை சரியாகப் பயன்படுத்தினால் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக வட்டி வருமானம் பெறலாம். இந்த பதிவில் உங்களுக்கு ரூ.2 லட்சம் வட்டி வேண்டுமானால் அதற்கு எவ்வளவு சேமிக்க வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.

போஸ்ட் ஆபீஸ்களில் வெவ்வேறு காலகட்டங்களின் அடிப்படையில் FD வழங்கப்படுகிறது. 1 வருடம், 2 வருடம், 3 வருடம், 5 வருடம். இந்த ஒவ்வொரு காலக்கெடுவுக்கும் வட்டி விகிதமும் மாறுபடும்.
1 வருட பிக்சட் டெபாசிட்: இதற்கு 6.90 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
2 வருட பிக்சட் டெபாசிட்: இதற்கு 7.00 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
3 வருட பிக்சட் டெபாசிட்: இதற்கு 7.10 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
5 வருட பிக்சட் டெபாசிட்: இதற்கு 7.50 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
இதில் 5 வருட பிக்சட் டெபாசிட்டுக்கு வருமானவரிச் சட்டத்தின் பிரிவு 80சி-யின் கீழ் வரிச் சலுகைகள் வழங்கப்படுகிறது.
போஸ்ட் ஆபீஸ் FD திட்டத்தை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?: போஸ்ட் ஆபீஸ் ஃபிக்சட் டெபாசிட் திட்டம் நிலையான வருமானத்தை வழங்குகிறது. உங்கள் பணம் கூட்டு வட்டி முறையில் வளரும். கூட்டு வட்டி உலகின் எட்டாவது அதிசயம் என்று கூற கேட்டிருப்போம். அதாவது உங்களுடைய வட்டி வருமானத்திற்கும் சேர்த்து மறு வருடம் வட்டி வழங்கப்படும். இதனால் உங்களுடைய முதலீடுக்கு சீக்கிரம் நல்ல வருமானம் கிடைக்கும்.
எப்படி ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக வட்டி சம்பாதிப்பது?: ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக வட்டி வருமானம் பெற விரும்பினால்.. நீங்கள் 5 ஆண்டு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும். இதற்கு மேலே கூறியது போல் 7.5 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.5 லட்சத்தை மொத்தமாக முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொண்டால்.. 5 ஆண்டுகளுக்குப் பிறகு வட்டி வருமானமாக ரூ. 2,24,974 ரூபாயை பெறலாம்.
வட்டி மற்றும் அசல் ஆகிய இரண்டையும் சேர்த்து ரூ.7,24,974 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். 5 ஆண்டுகளில் முடிவில் உங்கள் முதலீடு ரூ.7 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும். இது உங்களுக்கு பாதுகாப்பான மற்றும் லாபகரமான வருமானத்தை வழங்கும். அஞ்சல் அலுவலக பிக்சட் டெபாசிட்கள் ஆபத்து இல்லாத.. அதே சமயம் அதிக வருமானம் வழங்கக்கூடிய நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏற்ற திட்டமாகும். உத்தரவாதமான வருமானம் வரிச் சலுகைகள் போன்ற சிறப்பு அம்சங்களால் இந்த திட்டம் உங்களுடைய எதிர்கால நிதி இலக்குகளை அடைய உதவிகரமானதாக இருக்கும்.
More From GoodReturns

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்



Click it and Unblock the Notifications