வங்கிகளில் வழங்கப்படும் FD-களைப் போலவே தபால் அலுவலகத்திலும் பிக்சட் டெபாசிட்கள் வழங்கப்படுகின்றன. போஸ்ட் ஆஃபீஸ் டைம் டெபாசிட்கள் (Time Deposit) என அழைக்கப்படும் இந்த முதலீடுகள் பல்வேறு தவணைக்கால விருப்பங்களை முதலீட்டாளர்களுக்கு வழங்குகின்றன. லாபத்தை அதிகரிக்க விரும்பும் முதலீட்டாளர்கள் 5 வருட FD-களில் முதலீடு செய்யலாம். அதன் பின்னர் மீண்டும் 5 ஆண்டுகளுக்கு முதலீட்டை நீட்டித்தால் உங்களுடைய 10 வருட முதலீட்டு காலத்தில் உங்கள் முதலீட்டை மிஞ்சும் அளவுக்கு வட்டியைப் பெறலாம். இந்தப் பதிவில் ரூ.1,00,000 முதல் ரூ.5,00,000 வரையிலான முதலீடுகளுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.
ரூ. 5,00,000 பிக்சட் டெபாசிட் முதலீட்டின் வருமானம்: போஸ்ட் ஆஃபீஸ் 5 வருட கால பிக்சட் டெபாசிட்களுக்கு 7.5 வட்டி விகிதத்தை வழங்குகிறது. 10 ஆண்டுகளுக்கு ரூ.5,00,000 முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் ரூ. 5,51,175 வட்டியாகப் பெறுவீர்கள். அப்படியானால் மொத்த முதிர்வுத் தொகை ரூ.10,51,175 ஆக இருக்கும்.

ரூ. 4,00,000 பிக்சட் டெபாசிட் முதலீட்டின் வருமானம்: போஸ்ட் ஆஃபீஸ் 5 வருட கால பிக்சட் டெபாசிட்களுக்கு 7.5 வட்டி விகிதத்தை வழங்குகிறது. 10 ஆண்டுகளுக்கு ரூ.4,00,000 முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் ரூ. 4,40,940 வட்டியாகப் பெறுவீர்கள். அப்படியானால் மொத்த முதிர்வுத் தொகை ரூ.8,40,940 ஆக இருக்கும்.
ரூ. 3,00,000 பிக்சட் டெபாசிட் முதலீட்டின் வருமானம்: 10 ஆண்டுகளுக்கு போஸ்ட் ஆஃபீஸ் FD-களில் ரூ.3,00,000 முதலீடு செய்தால் ரூ.3,30,705 வட்டி கிடைக்கும், இதன் விளைவாக ரூ.6,30,705 முதிர்வுத் தொகை கிடைக்கும்.
ரூ. 2,00,000 பிக்சட் டெபாசிட் முதலீட்டின் வருமானம்: ரூ.2,00,000 ரூபாயை 10 ஆண்டுகளுக்கு போஸ்ட் ஆஃபீஸ் FD-களில் முதலீடு செய்தால் ரூ. 2,20,470 வட்டி கிடைக்கும். இதன் மூலம் மொத்த முதிர்வுத் தொகை ரூ. 4,20,470 ஆக இருக்கும்.
ரூ. 1,00,000 பிக்சட் டெபாசிட் முதலீட்டின் வருமானம்: 10 ஆண்டுகளுக்கு ரூ.1,00,000 முதலீடு செய்வதன் மூலம், வட்டியாக ரூ.1,10,235 பெறுவீர்கள். இதன் மூலம் முதிர்வுத் தொகை ரூ.2,10,235 ரூபாய் கிடைக்கும்.
பொதுவாகவே போஸ்ட் ஆபீஸ்களில் வழங்கப்படும் பிக்சட் டெபாசிட் முதலீடுகள் பல்வேறு தவணை காலங்களின் அடிப்படையில் மாறுபடும். போஸ்ட் ஆபீஸ்களில் 5 வருடம், 2 வருடம் மற்றும் 1 வருடம் என தவணைக் காலங்களுக்கு ஏற்ப வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. எந்த ஒரு முதலீடும் அதிக வருமானத்தை தர வேண்டும் என்றால் அதற்கு நீண்ட காலம் சேமிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications