டெல்லி: நமது அஞ்சல் அலுவலகங்களில் பல்வேறு முதலீட்டு திட்டங்கள் வழங்கப்படுவதை போலவே ஆயுள் காப்பீடு திட்டங்களும் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் அஞ்சல் அலுவலகங்களில் ஆயுள் காப்பீடு திட்டத்தை எடுத்துக் கொண்ட பாலிசிதாரர்களுக்கு மத்திய அரசு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அஞ்சல் அலுவலகங்களில் 6 வகையான ஆயுள் காப்பீட்டு திட்டங்கள் வழங்கப்படுகின்றன. சுரக்சா எனப்படும் முழு ஆயுள் காப்பீடு திட்டம், சுவிதா எனப்படும் மாற்றக்கூடிய முழு ஆயுள் காப்பீடு உத்தரவாதம், சந்தோஷ் எனப்படும் எண்டோவ்மெண்ட் திட்டம், யுகல் சுரக்ஸா எனப்படும் ஜாயிண்ட் ஆயுள் காப்பீடு, சுமங்கல் எனப்படும் ஏண்டிசிபேட்டட் எண்டோவ்மெண்ட் திட்டம், பால் ஜீவன் பீமா எனப்படும் குழந்தைகள் திட்டம் ஆகிய 6 திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.

இந்த 6 திட்டங்களுக்கும் மத்திய அரசு போனஸை அறிவித்துள்ளது. இது ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வந்திருக்கிறது. மார்ச் 13ஆம் தேதியிட்டு மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அஞ்சல் அலுவலக ஆயுள் காப்பீடு விதிகள் அடிப்படையில் போனஸ் அறிவிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஆயுள் காப்பீட்டில் உத்திரவாதம் அளிக்கப்பட்ட தொகையில் ஒவ்வொரு 1,000 ரூபாய்க்கும் 60 ரூபாய் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. எண்டோமென்ட் திட்டங்களில் , அதாவது குழந்தைகளுக்கான பாலிசிகள் உட்பட, உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு 1,000 ரூபாய்க்கும் 48 ரூபாய் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏண்டிசிபேட்டட் எண்டோவ்மெண்ட் இன்சூரன்ஸ் திட்டங்களில் ஒவ்வொரு 1,000 ரூபாய்க்கும் 45 ரூபாய் போனஸ் வழங்கப்பட்டுள்ளது. கன்வர்டபிள் முழு ஆயுள் காப்பீடு திட்டத்தில், எண்டோவ்மெண்ட் திட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ள போனஸ் விகிதம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெர்மினல் போனஸ் என ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு 10,000 ரூபாய்க்கும் 20 ரூபாய் டெர்மினல் போனஸ் வழங்கப்பட்டுள்ளது.
போஸ்டர் லைஃப் இன்சூரன்ஸ் சேவைகள் 1884ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டன. அஞ்சலக துறை ஊழியர்களுக்கு என இது கொண்டு வரப்பட்டது.
2017ஆம் ஆண்டுக்கு பின்னர்,இது பொதுமக்களுக்கும் என விரிவுபடுத்தப்பட்டது. மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள் போன்றவர்களும், மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் ஊழியர்கள் இதில் ஆயுள் காப்பீட்டை பெறலாம்.
story written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications