நாட்டில் பணவீக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே வேலைக்கு செல்லும் பட்சத்தில் மாத வரவு செலவுகளை சமாளிப்பது இந்தியக் குடும்பங்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. இதனால் பலர் வேலைக்குச் சென்று கொண்டே பகுதி நேரமாக மற்றொரு வேலையை நாடுகின்றனர். ஆனால் நீங்கள் எந்த வித வேலையையும் செய்யாமலேயே மாதம் மாதம் வருமானம் தரக்கூடிய ஒரு திட்டம் உள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அப்படி ஒரு திட்டத்தை போஸ்ட் ஆபீஸ் வழங்குகிறது. இந்தப் பதிவில் அது குறித்த விவரங்களை விரிவாகப் பார்ப்போம்.
போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமான திட்டம்: போஸ்ட் ஆபீஸ்களில் பல திட்டங்கள் வழங்கப்படுகிறது. அவற்றில் மாதம் வருமானம் தருவதற்காக கொண்டுவரப்பட்ட திட்டம் தான் MIS என்று சொல்லப்படுகிற போஸ்ட் ஆபீஸ் மன்த்லி இன்கம் ஸ்கீம் (Post Office Monthly Income Scheme). இந்தத் திட்டத்தில் ஒரு நபர் பிக்சட் டெபாசிட்களில் எப்படி முதலீடு செய்யப்படுகிறதோ? அதே போல ஒரு முறை முதலீடு செய்ய வேண்டும். அதன் பிறகு முதலீடு செய்யப்பட்ட தொகைக்கு ஏற்றார் போல் மாதம் மாதம் வட்டி வருமானத்தை பெறலாம். வட்டி வழங்கும்போது அசல் தொகைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

தொடர்ந்து 5 வருடங்களுக்கு வட்டி வருமானம் கிடைக்கும். ஏனெனில் MIS திட்டத்தின் முதிர்வுக் காலம் 5 ஆண்டுகள். வட்டி வருமானத்தைப் பெற்றுக் கொண்டு 5 வருட கால முடிவில் அசல் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம்.
MIS திட்டத்தின் வட்டி விகிதங்கள்: தற்போது போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமானத் திட்டத்திற்கு 7.4 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது இந்த வட்டி வருமானம் உங்களுடைய போஸ்ட் ஆபீஸ் சேவிங்ஸ் அக்கவுண்டில் மாதம் மாதம் வரவு வைக்கப்படும். ஆனால் நீங்கள் முதலீடு செய்யும் தொகையை பொறுத்துதான் வருமானம் கிடைக்கும். அதிக வருமானம் கிடைக்க வேண்டும் என்றால், அதற்கு சற்று அதிகமாக முதலீடு செய்ய வேண்டும். ஆனால் இது ஒரு முறை செய்யக்கூடிய முதலீடு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?: குறைந்தபட்சமாக ஒரு நபர் ஆயிரம் ரூ.1,000 முதலீட்டில் கணக்கு தொடங்கலாம். தனி நபராக இருந்தால் அதிகபட்சமாக ரூ.9 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்யலாம். அதற்கு மேல் முதலீடு செய்ய முடியாது. அதுவே கூட்டுக் கணக்கைத் திறந்தால் ரூ.15 லட்சம் முதலீடு செய்யலாம்.
மைனர்கள், மனநிலை சரியில்லாதவர்கள் அல்லது 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சார்பாக பாதுகாவலர்கள் கணக்கு தொடங்கலாம். கணக்கை தொடங்கிய நாளிலிருந்து ஒரு மாதம் முடிந்தவுடன் வட்டி செலுத்தப்படும். ஒருவர் முன்கூட்டியே கணக்கை மூடலாம். ஆனால் அப்படி செய்யும் பட்சத்தில் அதற்கு அபராதம் அசல் தொகையில் கழிக்கப்படும்.
ஆனால் டெபாசிட் செய்பவரின் வட்டி வருமானத்திற்கு வரி விதிக்கப்படும். 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டம் பிரிவு 80சி-இன் கீழ் அஞ்சல் அலுவலக MIS திட்டத்திற்கு வரிச்சலுகைகள் கிடையாது.
தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தில் ரூ.5000 வருமானம் பெற எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?: இந்த திட்டத்தில் ரூ.5000 வருமானம் பெற, ஒருவர் 8,11,000-த்தை மொத்தமாக முதலீடு செய்ய வேண்டும். அப்படி செய்தால் 7.4 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.5,001 கிடைக்கும். 5 வருடங்கள் முடிந்த பின்னர் டெபாசிட் செய்த அசல் தொகையை பெறலாம். ஆனால் இதற்கு வழங்கப்படும் வட்டி வருமானத்திற்கு வரி விதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பாதுகாப்பான முறையில் மாத வருமானம் பெற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும், மொத்தமாக ஒரு தொகையை கையில் வைத்துக்கொண்டு பாதுகாப்பான இடத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் MIS திட்டம் ஏற்றது.
More From GoodReturns

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications