மாதம் ரூ.5000 வருமானம் வேண்டுமா..அஞ்சலகத்தோட MIS திட்டம் தான் சரியான சாய்ஸ்..!

பொதுவாக நம்மில் பலருக்கும் இருக்கும் ஆசை என்றால் அது, இன்று கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. வயதான காலத்திலாவது நன்றாக இருக்க வேண்டும் என்பது தான். மாத மாதம் அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் பென்ஷன் தொகைபோல பென்ஷன் கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைப்போம்.

அந்த வகையில் நாம் இன்று பார்க்ககூடிய திட்டம் அஞ்சலகத்தின் மாதாந்திர வருமானம் தரும் சேமிப்பு திட்டமாகும்.

இந்த திட்டத்தின் புதிய வட்டி விகிதத்தின் அடிப்படையில் எவ்வளவு வருமானம் கிடைக்கும். யாரெல்லாம் முதலீடு செய்யலாம்? எப்படி முதலீடு செய்வது? வாருங்கள் பார்க்கலாம்.

ஒரு முறை முதலீடு

ஒரு முறை முதலீடு

அஞ்சலகத்தின் மாதாந்திர வருமானத் திட்டத்தில் ஒரே ஒரு முறை முதலீடு செய்வதன் மூலம் மாத மாதம் வருமானம் பெற முடியும். இதனால் இது வயதானவர்களுக்கு ஏற்ற ஒரு பாதுகாப்பான ஒரு முதலீடாக பார்க்கப்படுகிறது. இது வயதான காலகட்டத்தில் நிதி ரீதியிலாக ஒரு பாதிப்பினை கொடுக்கிறது.

எவ்வளவு முதலீடு?

எவ்வளவு முதலீடு?

ஒரு தனிநபர் இந்த திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதல் 4.5 லட்சம் வரை டெபாசிட் செய்து கொள்ளலாம். இதனை கூட்டு கணக்காகவும் தொடங்கிக் கொள்ளலாம். இந்த திட்டத்தினை தனிநபர் அல்லது கூட்டு சேமிப்பு திட்டமாகவும் தொடங்கிக் கொள்ள முடியும். கூட்டு சேமிப்பு திட்டத்தில் அதிகபட்சமாக 9 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும்.

யாரெல்லாம் முதலீடு செய்யலாம்?

யாரெல்லாம் முதலீடு செய்யலாம்?

இதனை தனி நபராகவும், கூட்டாகவும் சேர்ந்து முதலீடு செய்யலாம். இதனை குழந்தைகள் பெயரில் பாதுகாவலர் துணையுடன் தொடங்கிக் கொள்ளலாம். 10 வயதிற்கு மேலான குழந்தைகள் அவர்களாகவே இந்த கணக்கினை நிர்வகித்து கொள்ள முடியும்.

முதிர்வு காலம்

முதிர்வு காலம்

இந்த மாதாந்திர வருமான திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகளாகும். இதனை முதிர்வுகாலம் முடிந்த பின்னரும் நீட்டித்துக் கொள்ளலாம். இது வயதானவர்களுக்கு மாதாந்திர வருமானமாக இருப்பதால், வயதானவர்கள் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை.

வட்டி எவ்வளவு?

வட்டி எவ்வளவு?

அஞ்சலகத்தின் இந்த மாத வருவாய் திட்டத்திற்கு தற்போதைய வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.1% என்ற விகிதத்தில் உள்ளது. இதில் கூட்டு வட்டி கிடையாது. சிம்பிள் (Simple interest ) வட்டி தான். நீங்கள் அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டத்தினை தொடங்கிய தேதியிலிருந்து, ஒரு மாதம் நிறைவு பெற்ற பிறகு வட்டி வழங்க ஆரம்பிக்கப்படும்.

ஒரே வட்டி?

ஒரே வட்டி?

முதிர்வு காலம் வரை இந்த வட்டி தொகை வழங்கப்படும். வட்டி தொகையை நீங்கள் மாதந்தோறும் எடுக்காவிட்டாலும், வட்டித் தொகைக்கு கூடுதல் வட்டி வழங்கப்படாது. வட்டி ஆரம்பத்தில் எப்படியோ- திட்டம் முதிர்வு வரையிலும் கிடைகும். அதே போல இந்த திட்டத்திற்கு அரசு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப வட்டி விகிதத்தினை மாற்றினாலும் அதில் ஏதும் பிரச்சனை இருக்காது.

வட்டி குறைந்தால், வருமானம் குறையுமே ?

வட்டி குறைந்தால், வருமானம் குறையுமே ?

நீங்கள் இந்த திட்டத்தில் இணையும்போது 7.1% வட்டி விகிதம் எனில், அதே வட்டி விகிதம் தான் இறுதி வரையில் தொடரும். ஆக உங்களுக்கு வட்டி குறைந்தால், வருமானம் குறையுமே என்ற கவலை வேண்டாம். இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் வட்டியினை, உங்களது அஞ்சலக சேமிப்பு கணக்கில் கிரெடிட் செய்து கொள்ளலாம். அல்லது வங்கி கணக்கில் ஆகும்படியும் செய்து கொள்ளலாம்.

கூடுதல் முதலீடு?

கூடுதல் முதலீடு?

இதில் கிடைக்கும் வட்டி விகிதத்தினை தொடர் வைப்பு நிதி திட்டமாகவும் தொடர்ந்து கொள்ளலாம். ஆக உங்களது முதலீடானது இந்த திட்டத்தில் இருமுறையில் பெருகும். ஆக இது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உதவும். இந்த திட்டத்தின் கீழ் கூடுதலாக செலுத்தப்படும் வைப்பு தொகைக்கு, சாதாரண அஞ்சல் சேமிப்பு கணக்கு வட்டி விகிதத்தின் அடிப்படையிலேயே வட்டி வழங்கப்படும்.

இடையில் முடித்துக் கொள்ளலாமா?

இடையில் முடித்துக் கொள்ளலாமா?

இதன் முதிர்வு காலம் 5 ஆண்டுகளாகும். எனினும் இடையில் அதாவது 1 ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை மூடப்பட்டால் 2% வரை தொகை கழிக்கப்படும்.

மூன்று ஆண்டுகளுக்கு பிறகு எனில் 1% கழிக்கப்படும். அஞ்சலத்தின் இந்த சேமிப்பு திட்டத்தில் இணைய நீங்கள் அஞ்சலக சேமிப்பு கணக்கினை வைத்திருக்க வேண்டும்.

 

 நாமினி வசதி உண்டா?

நாமினி வசதி உண்டா?

அஞ்சலகத்தின் இந்த திட்டத்தில் நாமினி வசதி உண்டு. ஆக உங்களுக்கு பிறகு உங்கள் குடும்பத்தினர் இந்த சலுகையினை பெறுமாறு செய்து கொள்ளலாம். அதேபோல உங்களது முதலீட்டுக்கு கிடைக்கும் வட்டி வருமானமாக கருதப்பட்டு, அதற்கு நீங்கள் வரி செலுத்த வேண்டியிருக்கும்.

மாத வருமானம்?

மாத வருமானம்?

  • ரூ.1 லட்சம் முதலீடு - மாதம் 592 ரூபாய் வட்டி கிடைக்கும்.
  • ரூ.2 லட்சம் முதலீடு - மாதம் 1,183 ரூபாய் வட்டி கிடைக்கும்.
  • ரூ.3 லட்சம் முதலீடு - மாதம் 1,775 ரூபாய் வட்டி கிடைக்கும்.
  • ரூ.4 லட்சம் முதலீடு - மாதம் 2,367 ரூபாய் வட்டி கிடைக்கும்.
  • ரூ.4.5 லட்சம் முதலீடு - மாதம் 2,662 ரூபாய் வட்டி கிடைக்கும்.
  • ரூ.9 லட்சம் முதலீடு - மாதம் 5364 ரூபாய் வட்டி கிடைக்கும்.
வரி சலுகை இருக்கா?

வரி சலுகை இருக்கா?

அஞ்சலகத்தின் இந்த திட்டத்தில் 80சியின் கீழ் வரி விலக்கு கிடைக்கும். டிடிஎஸ் பிடித்தம் இல்லை. எனினும் வட்டி வருமானமாக கருத்தப்பட்டு இதற்கு வருமானம் கிடைக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+