இந்தியாயாவில் உள்ள பெரும்பாலான முதலீட்டாளர்கள் பாதுகாப்பு மற்றும் உத்தரவாதமான வருமானத்தை தரும் முதலீட்டு திட்டங்களையே தேடுகின்றனர். அப்படிப்பட்ட முதலீட்டாளர்களுக்கு உதவும் வகையில் போஸ்ட் ஆபீஸ்களில் பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் வழங்கப்படுகின்றன. அவற்றில் மாதாந்திர சேமிப்புத் திட்டமும் ஒன்று. இதனை "Monthly Income Scheme" என்று கூறுவர். இந்தத் திட்டத்தில் மொத்தமாக குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து ஒவ்வொரு மாதமும் வட்டி வருமானத்தை பெறலாம்.
இந்தத் திட்டத்தில் பிக்சட் டெபாசிட்களைப் போலவே மொத்தமாக முதலீடு செய்ய வேண்டும். நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு மாதாந்திர வருமானத் திட்டத்தில் வட்டி வருமானம் கிடைக்கும்.

வட்டி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?: தனிநபராக இருந்தால் அதிகபட்சமாக ரூ.9 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்யலாம். கூட்டு கணக்கு வைத்திருப்பவர்கள் ரூ.15 லட்ச ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம். இந்த டெபாசிட் தொகைக்கான முதிர்வுக் காலம் 5 ஆண்டுகள். இந்த 5 ஆண்டுகளுக்கும் உங்களுக்கு வட்டி வருமானம் கிடைக்கும். நீங்கள் விருப்பப்பட்டால் மேலும் 5 ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தின் டெபாசிட் தொகையை நீட்டித்து வட்டி வருமானம் பெறலாம்.
வட்டி விகிதம்: தற்போது போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமானத் திட்டத்திற்கு 7.4 சதவீத வட்டி வருமானம் வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதம் காலாண்டுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படுகிறது. ஆனால் கடந்த 2 காலாண்டுகளாக வட்டி விகிதங்களில் எந்த வித மாற்றமும் இல்லாமல் சீராக இருந்து வருகிறது.
எவ்வளவு வருமானம் கிடைக்கும்?: போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமானத் திட்டத்தில் ஒரு நபர் ரூ.9 லட்சத்தை மொத்தமாக முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். 7.4 சதவீத வட்டி விகிதத்தில் வருமானமாக ரூ.5,500 கிடைக்கும். இதன் விளைவாக முதிர்வு காலம் மொத்தத்திற்கும் 3,33,000 ரூபாய் வட்டி வருமானம் கிடைத்திக்கும்.
அதுவே கணவன் மனைவி என இரண்டு பேர் அல்லது உங்களுக்கு தெரிந்த இருவர் சேர்ந்து கூட்டுக்கணக்கை தொடங்கி ரூ.15 லட்சத்தை மொத்தமாக முதலீடு செய்தால் 7.4 சதவீத வட்டி விகிதத்தில் மாதம் மாதம் ரூ.9,250 வருமானம் கிடைக்கும். இந்த வருமானம் தொடர்ந்து 5 வருடங்களுக்கு வழங்கப்படும். இந்த தொகை உங்கள் போஸ்ட் ஆபீஸ் சேவிங்ஸ் அக்கவுண்டில் வரவு வைக்கப்படும். ஆனால் ரூ.15 லட்சத்திற்கும் மேல் ஒருவரால் முதலீடு செய்ய முடியாது. மேலும் முதலீட்டில் டிடிஎஸ் இல்லாவிட்டாலும், நீங்கள் பெறும் வட்டிக்கு வரி விதிக்கப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தில் முதிர்வுக் காலத்திற்கு முன்பே நீங்கள் பணத்தை எடுக்க வேண்டும் என்றால், 1 வருடத்திற்குப் பிறகு நீங்கள் அவ்வாறு செய்யலாம். இருப்பினும், முன்கூட்டியே திரும்பப் பெறுதல் அபராதத்திற்கு உட்பட்டது. குறிப்பாக, 1 முதல் 3 ஆண்டுகளுக்குள் நீங்கள் உங்கள் பணத்தை திரும்பப் பெற்றால், டெபாசிட் தொகையில் 2% அபராதம் கழிக்கப்படும்.
உத்தரவாதமான மாதாந்திர வருவாயை வழங்கும் பாதுகாப்பான முதலீட்டை நாடுபவர்களுக்கு அஞ்சல் அலுவலக MIS திட்டம் ஒரு சிறந்தத் தேர்வு. போட்டி வட்டி விகிதம் மற்றும் அரசாங்க ஆதரவுடன், சேமிப்பாளர்கள் தங்கள் நிதியை பாதுகாப்பாக அதிகரிக்க இந்தத் திட்டம் உதவுகிறது.
More From GoodReturns

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!



Click it and Unblock the Notifications