மத்திய அரசு தபால் நிலையங்கள் வழியாகவே பல்வேறு முதலீட்டு திட்டங்களை நமக்கு வழங்குகின்றன . தபால் நிலையங்களில் கிடைக்கக்கூடிய இந்த முதலீட்டு திட்டங்களுக்கு வங்கிகளில் கிடைக்கக்கூடிய ஃபிக்சட் டெபாசிட்களை விட அதிகமான வட்டி விகிதம் கிடைக்கின்றன.
தபால் நிலையங்களில் நாம் செய்யக்கூடிய முதலீட்டு தொகைக்கு உத்தரவாதமான வருமானம் கிடைக்கும், நம்முடைய பணம் பாதுகாப்பாக இருக்கும். மக்கள் தங்கள் கைவசம் ஒரு கணிசமான பணம் இருக்கிறது. முதலுக்கு மோசம் போகாமல் அதனை ஓரிடத்தில் முதலீடு செய்ய வேண்டும் என எண்ணினால் கண்டிப்பாக தபால் நிலையங்கள் வழங்கக்கூடிய முதலீட்டு திட்டங்களை நம்பி கண்ணை மூடிக்கொண்டு பணத்தை முதலீடு செய்யலாம்.

வங்கிகளை விட அதிக வட்டி வருமானம் கிடைக்கிறது, நம்முடைய பணத்திற்கும் பாதுகாப்பு இருக்கிறது. அந்த வகையில் நம்முடைய தபால் நிலையங்களில் மாதாந்திர வருமானம் வழங்கக்கூடிய ஒரு முதலீட்டு திட்டம் தற்போது பலரிடமும் பிரபலமாகி வருகிறது. இதனை post office monthly income scheme என அழைக்கிறார்கள் . ஒரு கணிசமான தொகையை இதில் முதலீடு செய்து விட்டால் உங்களுக்கான வட்டி தொகை மாதம் தோறும் உங்களுடைய கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிடும் .
இது உங்களுக்கு மாதந்தோறும் ஒரு வருமானத்தை கொடுக்கும். நாட்டின் அனைத்து தபால் நிலையங்களிலும் இந்த மாதாந்திர வருமான திட்டம் கிடைக்கிறது. இந்தியாவை சேர்ந்த குடிமகன்கள் அனைவருமே இந்த திட்டத்தில் முதலீடு செய்து மாதம் தோறும் வருமானம் பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் பணத்தை முதலீடு செய்பவர்களுக்கு ஆண்டுக்கு 7.4 சதவீத வட்டி கிடைக்கிறது. வங்கிகள் கூட இந்த அளவிற்கு வட்டி வழங்குவதில்லை என்பதுதான் உண்மை.
18 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்கள் தபால் நிலையத்தில் கணக்கு தொடங்கிவிட்டு இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்யலாம். ஐந்தாண்டு காலம் இந்த திட்டத்தின் முதிர்வு காலமாக இருக்கும். இந்த ஐந்து ஆண்டுகளுக்கும் நீங்கள் முதலீடு செய்த பணத்திற்கு ஒரு ஆண்டுக்கான வட்டி என்பது கணக்கீடு செய்யப்பட்டு 12 மாதங்களுக்கும் பிரித்து உங்களுடைய தபால் நிலைய கணக்கில் மாதம் தோறும் வரவு வைக்கப்பட்டு விடும்.
மூன்று பெரியவர்கள் சேர்ந்து கூட ஜாயிண்ட் அக்கவுண்டாக இந்த திட்டத்தில் பணத்தை முதலீடு செய்யலாம். குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு தனிநபர் அதிகபட்சமாக 9 லட்சம் வரை முதலீடு செய்யலாம் . இதுவே ஜாயிண்ட் அக்கவுண்டாக இருந்தால் அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும் . மாதம் தோறும் வட்டி நம்முடைய கணக்கிற்கு வரவாக வந்து கொண்டே இருக்கும்.
இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம் 7.4% கீழ் பார்க்கும்போது உங்களுக்கு மாதம் தோறும் சராசரியாக 3,083 ரூபாய் வருமானமாக கிடைக்கும். இதுவே 9 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 5,500 ரூபாய் மாதாந்திர வருமானமாக கிடைக்கும் . 15 லட்சம் ரூபாயை ஜாயிண்ட் அக்கவுண்டில் முதலீடு செய்தால் மாதத்திற்கு 9,250 ரூபாய் வருமானமாக கிடைக்கும்.
எந்தவித ரிஸ்க்கும் இல்லாமல் நம்பிக்கையோடு உங்களுடைய பணத்தை முதலீடு செய்யலாம். தபால் நிலைய முதலீட்டு திட்டங்கள் குறிப்பாக ஓய்வூதியதாரர்களுக்கு மிகவும் பொருத்தமானதாகவும் அதிக ஆபத்தை விரும்பாத முதலீட்டாளர்களுக்கு கச்சிதமாகவும் இருக்கும்.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications