பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீட்டு திட்டத்தை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்குத் தான் இந்தப் பதிவு. தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS) உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இந்தத் திட்டத்தில் உங்கள் மனைவியுடன் சேர்ந்து முதலீடு செய்வதன் மூலம் உத்தரவாதமான வட்டி வருமானத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த மாத வருமானம் நீங்கள் செய்யும் முதலீட்டை பொருத்து மாறுபடும்.
அதாவது நீங்கள் POMIS திட்டத்தில் 2 லட்ச ரூபாயை மொத்தமாக முதலீடு செய்தால் அதற்கென்று தனி வட்டி வருமானம் கிடைக்கும். அதுவே அதற்கு மேற்பட்ட தொகைக்கு நீங்கள் செய்யும் முதலீட்டிற்கு ஏற்றார் போல் வட்டி கிடைக்கும். இந்தப் பதிவில் உங்கள் மனைவியுடன் சேர்ந்து கூட்டுக் கணக்காக பணத்தை டெபாசிட் செய்யும்போது போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமான திட்டத்தில் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

மாதாந்திர வருமானம் பெற ஒருமுறை முதலீடு: போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமானத் திட்டத்தில் உங்களால் கூட்டுக் கணக்கையும் திறக்க முடியும். அதேபோல ஒற்றைக் கணக்கையும் திறந்து கொள்ளலாம். கூட்டுக் கணக்கில் 3 பேர் வரை இருக்கலாம். இதில் சிறந்த அம்சம் என்னவென்றால்.. நீங்கள் இந்த திட்டத்தில் ஒரே ஒருமுறை மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். அதன் பின்பு 5 ஆண்டுகளுக்கு அதாவது இந்த திட்டம் முதிர்ச்சியடையும் வரை உங்களுக்கு அதிலிருந்து வட்டி வருமானம் வழங்கப்படும். தற்போது POMIS திட்டத்திற்கு 7.4 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
மாதாந்திர வருமானம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?: தனிநபர் கணக்கு வைத்திருப்பவர்கள் அதிகபட்சமாக 9 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். கூட்டு கணக்கு வைத்திருப்பவர்கள் 15 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம். இந்த டெபாசிட் தொகைக்கான முதிர்வுக்காலம் 5 ஆண்டுகள். 5 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்த அசல் தொகையையும் நீங்கள் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் அல்லது நீங்கள் விருப்பப்பட்டால் மேலும் 5 ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தின் டெபாசிட் தொகையை நீட்டித்துக் கொள்ளலாம்.
இந்த 5 ஆண்டு கால கட்டத்திற்குள் மாதம் மாதம் நீங்கள் டெபாசிட் செய்த தொகைக்கு ஏற்ப உங்களுக்கு வட்டி வருமானம் வழங்கப்படும். ஆனால் அதிகபட்ச வரம்பு என்பது தனிநபர் கணக்குக்கு 9 லட்சம் மற்றும் கூட்டு கணக்குக்கு 15 லட்சம். இதைத் தாண்டி ஒருவரால் டெபாசிட் செய்ய முடியாது. இந்த வரம்பிற்குள் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் டெபாசிட் செய்து கொள்ளலாம். அந்த தொகைக்கு நீங்கள் டெபாசிட் செய்யும் அளவை பொறுத்து வட்டி வழங்கப்படும்.
நீங்களும் உங்கள் மனைவியும் கூட்டு கணக்கை திறந்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும்?: போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமானத் திட்டத்தில் ஒரு திருமணமான ஜோடி ரூ.15 லட்சத்தை மொத்தமாக முதலீடு செய்தால் 7.4 சதவீத வட்டு விகிதத்தில் ஆண்டுக்கு 1,11,000 ரூபாய் வருமானமாக கிடைக்கும்.
அப்படியானால் மாத மாதம் 9,250 ரூபாய் கிடைக்கும். இந்தத் தொகை உங்கள் போஸ்ட் ஆபீஸ் சேவிங்ஸ் அக்கவுண்டில் வரவு வைக்கப்படும். இது அதிகபட்சமான டெபாசிட் தொகையான 15 லட்சத்திற்கு வழங்கப்படும் மாதாந்திர வருமானம். இதற்கு கீழ் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் நீங்கள் முதலீடு செய்து கொள்ளலாம். அதற்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமானால் ஆன்லைன் கால்குலேட்டர்களை பயன்படுத்தலாம்.
7.4 சதவீத வட்டி விகிதம் மற்றும் நீங்கள் எவ்வளவு தொகை முதலீடு செய்ய இருக்கிறீர்கள் என்ற விவரங்களை என்டர் செய்யும் போது ஆன்லைன் கால்குலேட்டரில் மாத வருமானம் எவ்வளவு கிடைக்கும் என்பது தெளிவாக தெரிந்து விடும்.
POMIS திட்டம் மூன்று பேர் வரை கூட்டுக் கணக்கைத் திறக்க அனுமதிக்கிறது. கிடைக்கும் வருமானம் கணக்கு வைத்திருப்பவர்களிடையே சமமாக பிரித்து வழங்கப்படுகிறது. நீங்கள் எந்த நேரத்திலும் ஒரு கணக்கை கூட்டுக் கணக்காகவோ அல்லது கூட்டுக் கணக்கை தனிநபர் கணக்காகவோ மாற்றலாம். கூட்டுக் கணக்கில் மாற்றங்களைச் செய்ய, கணக்கு வைத்திருப்பவர்களிடமிருந்து கூட்டு விண்ணப்பம் தேவை.
முன்கூட்டியே கணக்கை மூடுதல்: இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். இருப்பினும் முன்கூட்டியே கணக்கை மூடுவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் டெபாசிட் செய்யப்பட்ட நாளிலிருந்து 1 வருடம் கழித்து நீங்கள் பணத்தை எடுக்கலாம். அதற்கு முன்னர் எடுக்க முடியாது. 1 முதல் 3 ஆண்டுகளுக்குள் நீங்கள் மொத்த பணத்தையும் திரும்ப பெற்றால் டெபாசிட் தொகையில் 2 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். அதுவே 3 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து தொகையும் திரும்ப பெற்றால் டெபாசிட் தொகையில் 1 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.
கணக்கைத் திறப்பதற்கான தகுதி: எந்தவொரு இந்திய குடிமகனும், வயது வந்தோ அல்லது சிறியவரோ, POMIS கணக்கைத் திறக்கலாம். பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் ஒரு மைனர் பெயரில் ஒரு கணக்கைத் திறக்கலாம், மேலும் குழந்தைக்கு 10 வயது ஆனதும், அவர்கள் தாமாக கணக்கை இயக்கலாம். POMIS கணக்கைத் திறக்க, நீங்கள் அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்கை வைத்திருக்க வேண்டும் மற்றும் ஆதார் அட்டை அல்லது பான் கார்டு போன்ற அடையாளச் சான்றினை வழங்க வேண்டும்.
More From GoodReturns

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!



Click it and Unblock the Notifications