ஒரு முறை முதலீடு.. மாத மாத வருமானம்.. அஞ்சலகத்தின் அருமையான திட்டம்.. எப்படி இணைவது.. !

இந்தியாவினை பொறுத்தவரையில் பல ஆயிரம் முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், இன்றும் மக்களிடத்தில் முக்கிய அம்சம் பெறுவது அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் தான்.

ஏனெனில் முதலீட்டுக்கு பங்கமில்லாத, பாதுகாப்பான கணிசமான வருவாய் தரக்கூடிய முதலீட்டு திட்டங்களாக பார்க்கப்படுகிறது.

பொதுவாக நம்மில் பலருக்கும் இருக்கும் ஆசை என்றால் அது, இன்று கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. வயதான காலத்திலாவது நன்றாக இருக்க வேண்டும் என்பது தான். அதிலும் மாதாமாதம் அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் பென்சன் தொகைபோல பென்ஷன் கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைப்போம். அந்த வகையில் நாம் இன்று பார்க்ககூடிய திட்டம் அஞ்சலகத்தின் மாதாந்திர வருமானம் தரும் சேமிப்பு திட்டம் தான்.

எவ்வளவு முதலீடு?

எவ்வளவு முதலீடு?

அஞ்சலத்தின் இந்த திட்டத்தில் ஒரு முறை முதலீடு செய்வதன் மூலம் மாதாந்திர வருவாய் பெற முடியும் என்பதால், ஒரு பாதுகாப்பான, வயதானவர்களுக்கு ஏற்ற ஒரு முதலீடாக பார்க்கப்படுகிறது. ஒரு தனிநபர் இந்த திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 1,500 ரூபாய் முதல் 4.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.

கூட்டு கணக்காகவும் தொடங்கலாம்?

கூட்டு கணக்காகவும் தொடங்கலாம்?

இந்த திட்டத்தினை தனிநபர் அல்லது கூட்டு சேமிப்பு திட்டமாகவும் தொடங்கிக் கொள்ள முடியும்.

கூட்டு சேமிப்பு திட்டத்தில் அதிகபட்சமாக 9 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும். கூட்டு கணக்கு வைத்திருப்பவர்கள் செய்யும் முதலீடு அவர்களுக்கு சமமான பங்கு இருப்பதாக கருதப்படும்.

முதிர்வு காலம்

முதிர்வு காலம்

இந்த மாதாந்திர வருமான திட்டத்தில் 5 ஆண்டுகள் முதிர்வு காலமாகும். முதிர்வுகாலம் முடிந்த பின்னரும் நீட்டித்துக் கொள்ளலாம். ஆக 5 வருட திட்டம் தான், இதில் ஒய்வுகாலத்திற்கு எப்படி வருமானம் பெறுவது என யோசிக்க வேண்டாம். இது வயதானவர்களுக்கு மாதாந்திர வருமானமாக அமையும்.

வட்டி எவ்வளவு?

வட்டி எவ்வளவு?

அஞ்சலகத்தின் இந்த மாத வருவாய் திட்டத்திற்கு தற்போதைய வட்டி விகிதம் ஆண்டுக்கு 6.6% என்ற விகிதத்தில் உள்ளது. இதில் கூட்டு வட்டி கிடையாது சிம்பிள் (Simple interest ) தான்.
நீங்கள் அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டத்தினை தொடங்கிய தேதியிலிருந்து, ஒரு மாதம் நிறைவு பெற்ற பிறகு வட்டி வழங்கப்படும்.
அதேபோல அந்த முதலீட்டு தொகை முதிர்ச்சி அடையும் வரை இந்த வட்டி தொகை வழங்கப்படும்.
வட்டி தொகையை நீங்கள் மாதந்தோறும் எடுக்காவிட்டாலும், வட்டித் தொகைக்கு கூடுதல் வட்டி வழங்கப்படாது.

வட்டி ஆரம்பம்

வட்டி ஆரம்பம்


ஆரம்பத்தில் எப்படியோ- திட்டம் முழுவதும் அப்படி தான்?

அதே போல இந்த திட்டத்திற்கு அரசு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப வட்டி விகிதத்தினை மாற்றும் எனினும் உங்களுக்கு அதில் ஏதும் பிரச்சனை இருக்காது. நீங்கள் இணையும்போது 6.6% வட்டி விகிதம் எனில் அதே வட்டி விகிதம் தான் இறுதி வரையில் தொடரும். ஆக உங்களுக்கு வட்ட குறைந்தால், வருமானம் குறையுமே என்ற கவலை வேண்டாம்.

வட்டி எப்படி பெறுவது?

வட்டி எப்படி பெறுவது?

இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் வட்டியினை உங்களது அஞ்சலக சேமிப்பு கணக்கில் கிரெடிட் செய்து கொள்ளலாம். அல்லது வங்கி கணக்கில் ஆகும்படியும் செய்து கொள்ளலாம்.

அதோடு இதில் கிடைக்கும் வட்டி விகிதத்தினை தொடர் வைப்பு நிதி திட்டமாகவும் தொடர்ந்து கொள்ளலாம். ஆக உங்களது முதலீடானது இந்த திட்டத்தில் இருமுறையில் பெருகும். ஆக குழந்தைகளின் எதிர்கால கல்வி செலவினங்களுக்காகவும் இந்த திட்டத்தினை தொடங்கிக் கொள்ளலாம்.

கூடுதல் முதலீடு?

கூடுதல் முதலீடு?

இந்த திட்டத்தின் கீழ் கூடுதலாக செலுத்தப்படும் வைப்பு தொகைக்கு, சாதாரண அஞ்சல் சேமிப்பு கணக்கு வட்டி விகிதத்தின் அடிப்படையிலேயே வட்டி வழங்கப்படும்.
இந்த கணக்கினை இந்தியாவின் எந்த மூலைக்கும் நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். அதோடு ஜாயிண்ட் அக்கவுண்ட்டாக தொடங்குகிறீர்கள் எனில், மூன்று பேர் வரையில் இணைந்து தொடங்கிக் கொள்ளலாம்.

குழந்தைகளுக்கு முதலீடு

குழந்தைகளுக்கு முதலீடு

இந்த மாதாந்திர சேமிப்பு திட்டத்தினை குழந்தைகளுக்கு தொடங்குகிறீர்கள் எனில், அதிகபட்சமாக 3 லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்து கொள்ளலாம்.18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் பாதுகாவலரின் துணையுடன் தொடங்கிக் கொள்ளலாம். இதே பெரியவர்கள் 4.5 லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்து கொள்ளலாம்.

இடையில் கணக்கினை முடித்துக் கொள்ளலாமா?

இடையில் கணக்கினை முடித்துக் கொள்ளலாமா?

இதன் முதிர்வு காலம் 5 ஆண்டுகளாகும். எனினும் இடையில், அதாவது 1 ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை மூடப்பட்டால் 2% வரை தொகை கழிக்கப்படும். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு எனில் 1% கழிக்கப்படும். அஞ்சலத்தின் இந்த சேமிப்பு திட்டத்தில் இணைய நீங்கள் அஞ்சலக சேமிப்பு கணக்கினை வைத்திருக்க வேண்டும்.

MIS திட்டத்தில் எப்படி இணைவது?

MIS திட்டத்தில் எப்படி இணைவது?

அதெல்லாம் சரி இந்த திட்டத்தில் எப்படி இணையலாம்? இந்த மாதாந்திர சேமிப்பு திட்டத்தில் இணைய, இணையதளத்தில் சென்று பார்மினை டவுன்லோடு செய்து, அதனை பூர்த்தி செய்து பின்னர், அதனுடன் அடையாள ஆவணம், முகவரி ஆவணம், 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள் வைத்துக் கொடுக்க வேண்டும். அஞ்சலகத்தின் இந்த கணக்கினை தொடங்க குறைந்தபட்ச இருப்பானது 1,000 ரூபாயாகும்.

நாமினி வசதி உண்டா?

நாமினி வசதி உண்டா?

அஞ்சலகத்தின் இந்த திட்டத்தில் நாமினி வசதியும் உண்டு. ஆக உங்களுக்கு பிறகு உங்கள் குடும்பத்தினர் இந்த சலுகையினை பெறுமாறு செய்து கொள்ளலாம்.
அதேபோல உங்களது முதலீட்டுக்கு கிடைக்கும் வட்டி வருமானமாக கருதப்பட்டு, அதற்கு நீங்கள் வரி செலுத்த வேண்டியிருக்கும். வரி சலுகை எதுவும் கிடைக்காது.

எத்தனை ஆண்டுகளில் இரட்டிப்பு

எத்தனை ஆண்டுகளில் இரட்டிப்பு

அஞ்சலகத்தில் வழங்கப்படும் இந்த மாத வருமான திட்டத்தில், தற்போது வட்டி விகிதம், 6.6% வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் உங்கள் தொகையானது 10.91 ஆண்டுகளில் இருமடங்காக மாறும். இந்த திட்டத்திலும் காலாண்டுக்கு ஒரு முறை வட்டி விகிதம் மாறுபடும்.

எவ்வளவு தொகைக்கு எவ்வளவு கிடைக்கும்?

எவ்வளவு தொகைக்கு எவ்வளவு கிடைக்கும்?

ரூ.1 லட்சம் முதலீடு - மாதம் 550 ரூபாய் வட்டி கிடைக்கும்.

ரூ.2 லட்சம் முதலீடு - மாதம் 1,100 ரூபாய் வட்டி கிடைக்கும்.
ரூ.3 லட்சம் முதலீடு - மாதம் 1,650 ரூபாய் வட்டி கிடைக்கும்.
ரூ.4 லட்சம் முதலீடு - மாதம் 2,200 ரூபாய் வட்டி கிடைக்கும்.
ரூ.4.5 லட்சம் முதலீடு - மாதம் 2,475 ரூபாய் வட்டி கிடைக்கும்.
ரூ.9 லட்சம் முதலீடு - மாதம் 4,950 ரூபாய் வட்டி கிடைக்கும்.

எப்படி சாத்தியம்?

எப்படி சாத்தியம்?

நீங்கள் தனிநபர் கணக்கு வைத்திருப்பவர் என்றால் 4.5 லட்சம் முதலீடு செய்வதன் மூலம், ஆண்டிற்கு 29,700 ரூபாய் வட்டியாக உங்களால் பெற முடியும்.
இதே ஜாய்ண்ட் அக்கவுண்ட் எனில் 9 லட்சம் முதலீடு செய்வதன் மூலம், 59,400 ரூபாய் வட்டியாக பெற முடியும்.
இதை நீங்கள் மாதாந்திர வருவாயாக கணக்கிடும் போது, மாதம்தோறும் 4,950 ரூபாய் வருமானம் கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+