இன்றெல்லாம் முதலீடு பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருவதைக் காண முடிகிறது. சிலர் SIP முதலீடுகள், தங்கம் வாங்குவது, பங்குச்சந்தை முதலீடுகள் என பல்வேறு திசைகளை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளனர். ஆனால் இன்னமும் பாதுகாப்பான முதலீடு என்று வரும்போது போஸ்ட் ஆபீஸ் முதலீடுகளையே பலரும் நம்பி இருக்கின்றனர். அப்படி இங்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது. இதில் மாத வருமானம் தருவதற்காகவே பல்வேறு திட்டங்கள் உள்ளது.
வயதான காலத்தில் பிறரை நம்பி வாழாமல் மாத வருமானம் பெறுவதற்காக அரசு அடல் பென்ஷன் யோஜனா, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் என பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. இது போன்ற திட்டங்களைப் போலவே போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமான திட்டத்தின் (MIS) மூலமாகவும் பயன்பெறலாம். இந்த திட்டத்தில் மொத்தமாக ஒரு தொகையை முதலீடு செய்து தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மாத வருமானம் பெற முடியும். இந்த பதிவில் மாதம் ரூ.5500 வருமானம் பெற எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்? என்ற விவரங்கள் குறித்து பார்ப்போம்.

முதலீடு: MIS திட்டம் தபால் அலுவலகத்தில் வழங்கப்படும் சிறுசேமிப்புத் திட்டமாகும். இதில் முதலீடு செய்த பிறகு தொடர்ந்து 5 வருடங்களுக்கு உங்களுக்கு மாத வருமானம் வரத் தொடங்கும். MIS திட்டத்தில் தனி நபர்கள் மொத்தமாக ரூ.9 லட்சம் வரையில் முதலீடு செய்யலாம். கூட்டுக்கணக்காக இருந்தால் ரூ. 15 லட்சம் வரையில் முதலீடு செய்ய முடியும்.
தற்போது மாதாந்திர வருமானத் திட்டத்திற்கு 7.4 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. அதிகபட்ச தொகையை செலுத்த முடியாதவர்கள் 1,000 ரூபாய் முதலீடு செய்து போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமான திட்டத்தை தொடங்கலாம். இதுதான் குறைந்தபட்ச முதலீட்டு வரம்பாகும்.
MIS திட்டத்தில் கணக்கு தொடங்க அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு செல்லலாம். உங்களுக்கு கிடைக்கும் மாத வருமானம் என்பது நீங்கள் முதலீடு செய்யும் தொகையைப் பொருத்தது. உதாரணமாக தனி நபர்கள் ரூ.9 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம் என்று முன்பே பார்த்தோம். அதிகபட்ச தொகையை முதலீடு செய்யும் பட்சத்தில் உங்களுக்கு வருமானமும் அதிகரிக்கும். நீங்கள் எவ்வளவு முதலீடு செய்ய இருக்கிறீர்கள்? அதற்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும்? என்பதை ஆன்லைனில் கால்குலேட்டர்களை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம். போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமான திட்டத்தின் வருமானம் எவ்வளவு கிடைக்கும்? என்பதை தெரிந்து கொள்வதற்காகவே ஆன்லைனில் பிரத்யேக கால்குலேட்டர்கள் உள்ளன.
மாதம் பென்ஷனாக ரூ.5,500 பெறுவது எப்படி?: ஒவ்வொரு மாதமும் பென்சனாக ரூ.5.500 பெறுவதற்கு மொத்தமாக ரூ.9 லட்சம் ரூபாயை முதலீடு செய்ய வேண்டும். இதற்கு 7.4% வட்டி விகிதத்தில் மாத வருமானமாக 5,550 ரூபாய் கிடைக்கும். இந்தத் தொகையானது உங்களின் போஸ்ட் ஆபீஸ் சேவிங்ஸ் அக்கவுண்டில் வரவு வைக்கப்படும். இதற்கும் வங்கிகளில் வழங்குவதைப் போலவே டிஜிட்டல் பேங்கிங் மற்றும் ஏடிஎம் கார்டுகள் வழங்கப்படுகிறது. தேவைப்படும் நேரங்களில் நீங்கள் பணத்தை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். 5 வருட காலம் முடிந்த பிறகு மொத்தமாக நீங்கள் முதலீடு செய்த தொகையை திரும்பப் பெறலாம்.
தகுதி: 18 வயதை பூர்த்தி அடைந்த யார் வேண்டுமானாலும் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். அஞ்சல் அலுவலக திட்டத்தின் முதிர்வு காலத்திற்கு முன்பு அதாவது மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் நீங்கள் பணத்தை எடுத்தால், உங்களின் மொத்த பணத்தில் 1 சதவீதம் அபராதம் கழிக்கப்பட்டு தொகை திருப்பித் தரப்படும்.
More From GoodReturns

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!



Click it and Unblock the Notifications