அஞ்சலக முதலீட்டு திட்டங்களில் இன்றும் மக்கள் மத்தியில் மிக விருப்பமான முதலீட்டு திட்டங்களில் ஒன்றாக இருப்பது பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் ஆகும்.
நடுத்தர மக்களுக்கும்., சம்பளதாரர்களுக்கும் முதலீடு செய்ய ஏற்றதொரு திட்டமாகும். இதில் பங்கு சந்தை அபயாம் இல்லாத ஒரு முதலீட்டு திட்டமாகும். பங்கு சந்தையினை விட பாதுகாப்பான ஒரு திட்டம். முதிர்வு காலத்தில் நல்ல லாபகரமான ஒரு முதலீட்டு திட்டமாகும்.
இதன் மூலம் முதிர்வு காலத்தில் கணிசமான லாபத்தினை பெறலாம். இது பாதுகாப்பு மற்றும் சேமிப்பு என்ற இரண்டையும் பூர்த்தி செய்யும் ஒரு திட்டமாகும்.
பாதுகாப்பான வருமானம்
இது முதலீட்டாளார்களுக்கு கணிசமான நிரந்தர வருமானம் கொடுக்கும் ஒரு திட்டமாகவும் உள்ளது. இதில் தற்போதைய வட்டி விகிதம் 7.1% ஆகும். இந்த வருமானத்தினை சந்தை சரிந்தாலும் பெறலாம். மொத்தத்தில் முதலீட்டாளர்களின் முதலீட்டுக்கு பாதுகாப்பினையும், நிரந்தர வருமானமாகவும் உள்ளது. இது ஒரு 15 ஆண்டுகால திட்டமாகும். இதில் வரிச்சலுகையும் உண்டு.
நிரந்தர வருமானம் தரும் திட்டம்
இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் வட்டி பலன் ஆனது வாடிக்கையாளர்களின் பதிவு செய்யப்பட்ட வங்கிக் கணக்கிற்கு மட்டுமே கிடைக்கும். இந்த திட்டத்தினை குழந்தைகள் பெயரிலும் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலம் தொடங்கிக் கொள்ளலாம். இதற்கான வட்டி விகிதத்தினை அரசு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப காலாண்டிற்கு ஒரு முறை மாற்றம் செய்கிறது. இதன் தற்போதைய நிலவரப்படி வட்டி விகிதம் 7.1% ஆக உள்ளது.
கோடிஸ்வரர் ஆக முடியுமா?
இந்த திட்டத்தில் என் ஆர் ஐ-க்கள் இணைய முடியாது. ஒரு வேளை குழந்தையாக இருக்குபோது தொடங்கினால், முதிர்வு காலம் வரையில் தொடங்கிக் கொள்ளலாம். இதன் மூலம் முதிர்வு காலத்தில் 1 கோடி ரூபாயினை பெற முடியும்.
தினசரி 417 ரூபாயினை உங்களது வங்கிக் கணக்கில் 25 வருடங்களுக்கு முதலீடு செய்தால், அதன் முதிர்வு தொகையானது 1 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கலாம்.
எவ்வளவு முதலீடு?
பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் தினசரி 417 ரூபாய் முதலீடு செய்தால், மாதம் 12,500 ரூபாய் முதலீடு செய்வீர்கள். இதன் மூலம் 15 ஆண்டுகளில் 22.50 லட்சம் ரூபாய் முதலீடு செய்வீர்கள். வருட வட்டி விகிதம் 7.1% ஆக உள்ள நிலையில், அதனை கணக்கீடு செய்தால். உங்களின் வட்டி விகிதம் 18.18 லட்சம் கிடைக்கும். ஆக நித்தம் சேர்த்து, 40.68 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
ரூ.1 கோடி எப்படி சாத்தியம்?
இதே தொகையை 15 ஆண்டுகால முதிர்வுக்கு பிறகு இரண்டு முறை 5 - 5 ஆண்டு தொகுப்புகளுக்கு நீட்டித்தால் நீங்கள் மொத்தம் 37.50 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள். இதற்கு வட்டி விகிதம் 65.58 லட்சம் ரூபாயாக கிடைக்கும். இதனையும் மொத்தம் சேர்த்தால் 1.03 கோடி ரூபாயாகும்.
வரிச்சலுகை உண்டா?
இந்த திட்டத்தில் EEE வரிச் சலுகை கிடைக்கிறது. இந்த திட்டத்தில் 80 சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய்க்கு வரி சலுகை கிடைக்கிறது. இது தவிர இந்த முதிர்வு தொகைக்கு 100% வரி விலக்கு உண்டு.
எப்படி தொடங்குவது?
பொது வருங்கால வைப்பு நிதி கணக்கினை அஞ்சலகம், பொதுத்துறை வங்கிகள் மற்றும் சில முன்னணி தனியார் வங்கிகள் மூலமும் தொடங்கிக் கொள்ளலாம். தற்போது வங்கிகளின் ஆன்லைனிலேயே கூட தொடங்கிக் கொள்ளும் வசதிகள் வந்து விட்டது.
இடையில் பணம் எடுக்கலாமா?
பிபிஎஃப் கணக்கு தொடங்கப்பட்ட ஆண்டில் இருந்து 7வது நிதியாண்டில் உங்களது பிபிஎஃப் கணக்கில் இருந்து ஓரளவு தொகையினை பெறலாம். சில வங்கிகள் 5 ஆண்டுகளுக்கு பிறகும் பணம் எடுக்க அனுமதிக்கின்றன. அவ்வாறு எடுக்கப்படும் தொகையானது ஒரு நிதியாண்டில் ஒரு முறை மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படுகிறது. அதுவும் முந்தைய ஆண்டின் நிலுவையில் 50% மட்டும் எடுக்க அனுமதிக்கப்படுகிறது.
More From GoodReturns

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி



Click it and Unblock the Notifications