தபால் அலுவலகங்களில் எண்ணற்ற சேமிப்பு திட்டங்கள் வழங்கப்படுகிறது. இன்றைய இளைஞர்களிடையே முதலீடு பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. தங்கள் சம்பளத்தை ஏதோ ஒரு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைக்கின்றனர். அதற்கு போஸ்ட் ஆபிஸ் திட்டங்களில் பாதுகாப்பாக உங்களுடைய வருமானத்தை முதலீடு செய்யலாம்.
அனைவராலும் ஒட்டுமொத்தமாக பிக்சட் டெபாசிட்களைப் போல முதலீடு செய்ய முடியாது. அதற்காக கொண்டுவரப்பட்ட ஒரு திட்டம்தான் RD என்று சொல்லப்படுகிற ரெக்கரிங் டெபாசிட். எனவே ஒட்டு மொத்தமாக முதலீடு செய்ய முடியாதவர்களும் RD திட்டத்தைப் பயன்படுத்தி பலன் பெற முடியும்.

வட்டி விகிதம்: போஸ்ட் ஆபீஸ் திட்டத்திற்கு தற்போது 6.7 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. எனவே மாதம் மாதம் RD திட்டத்தில் ஒரு சிறு தொகையை முதலீடு செய்து உங்களால் லாபம் பெற முடியும்.
முதலீடு: முதலீட்டு தொகையை கேட்டால் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். ஏனெனில் மாதம் 100 ரூபாய் முதல் உங்களால் கணக்கு தொடங்க முடியும். அதிகபட்ச வரம்பு இதற்கு இல்லை. உங்களால் எவ்வளவு முடியுமோ? அவ்வளவு முதலீடு செய்யலாம். போஸ்ட் ஆபீஸ் RD திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். ஒவ்வொரு திட்டத்திற்கும் இந்த லாக்கின் காலம் என்பது மாறுபடும்.
இந்தத் திட்டத்தை பொறுத்தவரையில் 5 ஆண்டுகள் தான் லாக்கின் காலம். 5 ஆண்டுகள் வரை மாதம் மாதம் ஒரு சிறு தொகையை வரவு வைக்க வேண்டும். இதற்கு வட்டி வருமானமும் வழங்கப்படும். இந்த பதிவில் ஒருவர் மாதம் 2,800 ரூபாயை RD திட்டத்தில் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்? என்று பார்ப்போம்.
ரூ.2,800 முதலீட்டுக்கு எவ்வளவு லாபம்?: ஒருவர் மாதம் ரூ. 2,800 என்ற வீதத்தில் RD திட்டத்தில் முதலீடு செய்து வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால் 5 வருடங்களுக்கு அதாவது 60 மாதங்களுக்கு ரூ. 1,68,000-த்தை முதலீடு செய்திருப்பார். இதற்கு 6.7 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது என்று வைத்துக் கொண்டால் மொத்தமாக 5 ஆண்டுகளுக்கும் சேர்த்து 31,824 ரூபாய் வட்டி கிடைக்கும். இதன் மூலம் முதிர்வில் உங்களுடைய அசல் மற்றும் வட்டி ஆகிய இரண்டையும் சேர்த்து 1,99,824 ரூபாயை பெறலாம்.
இன்றெல்லாம் குழு கடன் பெறுவது அதிகரித்துவிட்டது. குழு கடன்களை பெற்று அதன் பிறகு அதிலிருந்து 2 முதல் 3 ஆண்டுகள் வரை தொடர்ந்து செலுத்தி வருகின்றனர். இதற்கான வட்டியை கணக்கிட்டு பார்த்தாலே.. தற்போது RD கணக்கிற்கு கிடைத்த வட்டி வருமானத்தை நெருங்கும். எனவே நிதி தேவைகள் இருக்கும் பட்சத்தில் அதற்கு முன்னரே திட்டமிட்டு இது போன்ற RD கணக்கை தொடங்கி வைத்தால் எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும்.
தபால் அலுவலக RD கணக்கின் நன்மைகள்: இதில் கண்டிப்பாக உங்களுக்கு நிலையான வருமானம் கிடைக்கும். உங்கள் பணம் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும். அதோடு இந்த திட்டத்திற்கு கூட்டு வட்டி வழங்கப்படுகிறது. மாதம் 100 ரூபாய் என்ற குறைந்தபட்ச முதலீடு இருப்பதால் சாமானியர்களும் தங்கள் நிதி தேவைகளை பூர்த்தி செய்ய இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications