மாதம்தோறும் சிறு தொகையை முதலீடு செய்ய விரும்பும் நபர்களுக்கு, போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட் (RD) ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இந்தத் திட்டத்தின் மூலம் பணத்தை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் முதலீடு செய்து சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு உட்படாமல் உத்தரவாதமான வருமானத்தைப் பெற முடியும். இந்தத் திட்டம் 5 ஆண்டுகளில் 6.7 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்தப் பதிவில், மாதந்தோறும் ரூ.2,000, ரூ.3,000 மற்றும் ரூ.5,000 முதலீடு செய்வதன் மூலம் எவ்வளவு வருமானம் பெறலாம் என்பதை விரிவாகப் பார்ப்போம்.
மாதம் 5,000 ரூபாய் முதலீடு: 5 ஆண்டுகளில் மாதம் 5,000 ரூபாய் முதலீடு செய்து வந்தால், 5 ஆண்டுகளுக்குத் பிறகு மொத்தம் 3,00,000 ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள். 6.7 சதவீத வட்டி விகிதத்தில், ரூ. 56,830 வட்டி மட்டும் கிடைக்கும். இதன் விளைவாக 5 ஆண்டுக்குப் பிறகு ரூ 3,56,830 பெறலாம்.

மாதம் 3,000 ரூபாய் முதலீடு: மாதந்தோறும் ரூ. 3,000 முதலீடு செய்வதன் மூலம், 5 ஆண்டுகளில் ரூ.1,80,000 முதலீடு செய்திருப்பீர்கள். இதன் மூலம் உங்களுக்கு வட்டியாக ரூ. 34,097 கிடைக்கும். 5 ஆண்டுகள் கழித்து மொத்தம் ரூ. 2,14,097 கிடைக்கும்.
மாதம் 2,000 ரூபாய் முதலீடு: மாதம் ரூ.2,000 ரூபாயை 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்திருந்தால் மொத்தம் ரூ.1,20,000 முதலீடு செய்திருப்பீர்கள். அதே வட்டி விகிதத்தில், நீங்கள் முதிர்வு காலத்தில் ரூ. 1,42,732 பெறுவீர்கள். இதில் வட்டியாக ரூ.22,732 கிடைக்கும்.
வட்டி விகிதங்கள்: அக்டோபர் 1, 2023-ஆம் ஆண்டிலிருந்து நிதியமைச்சகம், சில சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை காலாண்டுக்கு ஒரு முறை மாற்றியமைக்கும். அந்த வகையில் சமீபத்தில் கூட போன காலாண்டில் என்ன வட்டி விகிதங்கள் இருந்ததோ, அதே வட்டி விகிதங்களை இந்த காலாண்டிற்கும் நிர்ணயித்துள்ளது. அனால் RD கணக்கிற்கு மட்டும் 5-ஆண்டு காலம் முழுவதும் தொடக்க விகிதத்தில் வட்டி விகிதம் இருக்கும்.
சந்தை அபாயங்களுக்கு உட்படாமல் சீரான வருமானத்தை போஸ்ட் ஆபீஸ் RD கணக்குகள் வழங்குகின்றன. இன்றளவும் பழமைவாத முதலீட்டாளர்களுக்கு FD மற்றும் RD திட்டங்களே விருப்பமான தேர்வாக உள்ளது.
தபால் நிலைய RD திட்டம் என்பது, சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் மற்றும் எதிர்காலத் தேவைகளுக்காக பணத்தைச் சேமிக்கும் நம்பகமான முதலீட்டுத் திட்டமாகும். இது இந்திய தபால் துறையால் வழங்கப்படும் சிறந்த முதலீட்டு திட்டங்களில் ஒன்றாகும். RD கணக்கைத் திறக்க அருகில் உள்ள தபால் நிலையங்களுக்குச் செல்லலாம்.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?



Click it and Unblock the Notifications