இந்திய போஸ்ட் ஆபீஸ் வழங்கும் ரெக்கரிங் டெபாசிட் திட்டம் என்பது நம்பகமான முதலீட்டு விருப்பமாகும். இந்தத் திட்டம் கூட்டு வட்டியின் நன்மைகளை வழங்குகிறது. பல்வேறு வருமான வரம்புகளில் இருக்கும் தனிநபர்களும் முதலீடு செய்வதற்கு ஏற்ப போஸ்ட் ஆபீஸ் RD திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். எனவே ஒருவர் 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து முதலீட்டு பழக்கத்தை கடைப்பிடித்து வந்தால் கணிசமான வட்டி வருமானத்துடன் அசல் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம். இந்தப் பதிவில் போஸ்ட் ஆபீஸ் RD திட்டத்தில் ரூ.5000 மற்றும் ரூ.6000 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்? என்பதைப் பார்ப்போம்.
RD திட்டத்திற்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 6.70% என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உங்கள் முதலீட்டுக்கு கூட்டு வட்டியின் நன்மைகள் கிடைப்பதால் வருமான வளர்ச்சிக்கு இது பெரிதும் உதவுகிறது.

RD திட்டத்தின் முக்கிய நன்மைகளில் ஒன்று, இதற்கு மொத்த முதலீடு செய்ய வேண்டும் என்ற தேவையில்லை. அதற்கு பதிலாக, நீங்கள் காலப்போக்கில் சிறிய தொகைகளை தவறாமல் முதலீடு செய்து வரலாம்.
முதலீட்டு விவரங்கள்: இந்த போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.100 முதல் முதலீடு செய்யலாம். மேலும் நீங்கள் முதலீடு செய்வதற்கு எந்த வித உச்ச வரம்பும் இல்லை. அதாவது எவ்வளவு வேண்டுமானாலும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப முதலீடு செய்யலாம்.
உங்களுடைய முதலீட்டுக்கு கூட்டு வட்டியின் நன்மை கிடைக்கிறது. கூட்டு வட்டி என்பது உங்களுடைய வட்டிக்கும் சேர்த்து வட்டி அளிப்பதை குறிக்கிறது.
5000 முதலீட்டுக்கு எவ்வளவு லாபம்?: நீங்கள் மாதம் மாதம் போஸ்ட் ஆபீஸ் RD திட்டத்தில் 5,000 ரூபாயை முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் 5 வருடத்திற்கு பிறகு மொத்தமாக 3,00,000 ரூபாயை முதலீடு செய்து இருப்பீர்கள். இந்த ஒட்டுமொத்த முதலீட்டு காலத்திற்கும் 6.7 சதவீத வட்டி வழங்கப்பட்டால், மொத்த முதலீட்டுக்கு 56,830 ரூபாய் வட்டி மட்டும் கிடைக்கும். அப்படியானால் முதிர்வு காலத்தில் 3,56,830 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம்.
அதிக வருமானம் பெற உங்கள் முதலீட்டை நீட்டிக்கவும்: போஸ்ட் ஆஃபீஸ் RD திட்டத்தின் மிகவும் முக்கியமான நன்மைகளில் ஒன்று, உங்கள் முதலீட்டை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் விருப்பமாகும். அவ்வாறு செய்ய நீங்கள் தேர்வு செய்தால், 10 வருட காலத்தின் முடிவில் உங்களின் மொத்த கார்பஸ் 8,54,272 ரூபாயாக இருக்கும்.
6000 முதலீட்டுக்கு எவ்வளவு லாபம்?: நீங்கள் மாதாமாதம் போஸ்ட் ஆபீஸ் RD திட்டத்தில் 6,000 ரூபாயை முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் 5 வருடத்திற்கு பிறகு மொத்தமாக 3,60,000 ரூபாயை முதலீடு செய்து இருப்பீர்கள். ஒட்டுமொத்த முதலீட்டு காலத்திற்கும் 6.7 சதவீத வட்டி வழங்கப்பட்டால், மொத்த முதலீட்டுக்கு 68,197 ரூபாய் வட்டி கிடைக்கும். முதிர்வு காலத்தில் 4,28,197 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம்.
உங்கள் முதலீட்டை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க நீங்கள் தேர்வுசெய்தால், 10 வருட காலத்தின் முடிவில் உங்களின் மொத்த கார்பஸ் 10,25,131 ரூபாயாக இருக்கும்.
எப்படி விண்ணப்பிப்பது?: போஸ்ட் ஆபீஸ் வாடி தினத்திற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகில் இருக்கும் தபால் அலுவலகங்களுக்கு செல்லலாம்.
More From GoodReturns

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications