மாதச் சம்பளக்காரர்களே.. ரூ.3,500 முதலீட்டில் ரூ.2,50,000 வருமானம்! மத்திய அரசு அள்ளிக் கொடுக்கும் ஆஃபர்!

ஒவ்வொரு மாதமும் சிரமமின்றி வாடகை கொடுக்க வேண்டும் என்பதற்காக, மாதத்தின் முதல் நாளிலிருந்து சிலர் சேமிக்கத் தொடங்கி விடுவார்கள். சிறுக சிறுக சேர்த்து வைப்பதால் ஒவ்வொரு மாதத்தின் 1-ஆம் தேதியும் வாடகை செலுத்துவது சுலபமாகிவிடும். இதே கான்செப்ட்டை சேமிப்புக்கும் பயன்படுத்தலாம். தினசரி அடிப்படையில் சிறுக சிறுக சேமித்து வைத்தால் அதை மாதத்தின் முதல் நாள் போஸ்ட் ஆபீஸ் RD திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

சிறு துளி பெருவெள்ளம் என்பதற்கு ஏற்ப இன்று நீங்கள் போடும் முதலீடு நாளை நீங்கள் எதிர்பாராத நேரத்தில் கை கொடுக்கும். இந்தப் பதிவில் ரூ.3,500 முதலீடு செய்து ரூ.2 லட்சம் பெறுவது எப்படி என்பதை தான் பார்க்க போகிறோம்.

தொடர் வைப்பு நிதி என்று சொல்லப்படுகிற ரெக்கர்ரிங் டெபாசிட் சாமானியர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். எல்லோராலும் FD டெபாசிட் செய்ய முடியாது. FD பற்றி உங்களுக்கே தெரியும். மொத்தமாக முதலீடு செய்ய வேண்டும். இதைச் செய்ய முடியாதவர்கள் இந்த தொடர் வைப்பு நிதி திட்டத்தை பயன்படுத்தலாம். போஸ்ட் ஆபீஸ், பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் அனைத்திலும் RD திட்டங்கள் வழங்கப்படுகிறது.

மாதச் சம்பளக்காரர்களே.. ரூ.3,500 முதலீட்டில் ரூ.2,50,000 வருமானம்! அரசு அள்ளிக் கொடுக்கும் ஆஃபர்!

குறிப்பாக மாத சம்பளக்காரர்களுக்கு இந்த திட்டம் ஏற்றது. ஒவ்வொரு மாதமும் சேமிக்க தொடங்கினால் சேர்த்து வைத்ததே தெரியாமல் பிற்காலத்தில் பணம் உங்களை வந்தடையும். அப்போது ஏற்படுகிற மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒருமுறை போஸ்ட் ஆபீஸில் வழங்கப்படும் ரெக்கர்ரிங் டெபாசிட் திட்டத்திற்கு வட்டி விகிதம் மாற்றியமைக்கப்படும். இந்த காலாண்டுக்கு 6.7 சதவீதமாக இருக்கிறது.

RD திட்டத்திற்கு கிடைக்கும் வட்டி காலாண்டுக்கு ஒருமுறை உங்கள் அக்கவுண்டில் வரவு வைக்கப்படும். இதன் முக்கிய நன்மையே RD திட்டத்திற்கு கிடைக்கும் கூட்டு வட்டி தான். உதாரணமாக நீங்கள் முதலில் முதலீடு செய்ய தொடங்குவீர்கள். அதற்கு பெயரளவு வட்டி கிடைக்கும். அதன் பிறகு உங்களுடைய முதலீடு, வட்டி ஆகிய இரண்டிற்க்கும் சேர்த்து வட்டி கிடைக்கும். மறுமுறை வட்டி வரும்போதும் அப்படித்தான். இதே செயல்முறை முதிர்வு காலம் முடியும் வரை தொடரும். இதையே கூட்டு வட்டி என்கிறோம்.

முன்பே கூறியது போல் மொத்தமாக முதலீடு செய்ய முடியாதவர்களுக்காக தான் இந்த திட்டம். RD திட்டத்தின் கீழ் அக்கவுண்ட் திறப்பவர்கள் ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்ய வேண்டும். போஸ்ட் ஆபீஸில் வழங்கப்படும் RD திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள்.இந்த ஐந்து ஆண்டுகளுக்கும் உங்கள் சேமிப்பை எடுக்க முடியாது.

அதேபோல் 5 ஆண்டுகளுக்கும் நீங்கள் தொடர்ந்து ஒரே தொகையை தான் முதலீடு செய்ய முடியும். எனவே அக்கவுண்ட் திறக்கும்போது எவ்வளவு தொகையை நீங்கள் தீர்மானிக்கிறீர்களோ? அதே தொகை தான் 5 வருடம் வரை செலுத்த வேண்டும்.

ரூ.2 லட்சம் பெறுவது எப்படி?: ஒரு நபர் போஸ்ட் ஆபீஸ் RD திட்டத்தில் 5 ஆண்டுக்கு மாதம் ரூ.3500 முதலீடு செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதாவது 60 மாதங்கள் சீராக சேமிக்க வேண்டும். இந்த 60 மாதங்களுக்கும் சேர்த்து மொத்தமாக ரூ.2,10,000 ரூபாயை சேமித்திருப்பார். தற்போதய வட்டி விகிதத்தின் படி 6.7 சதவீதம் வட்டி கிடைத்தால், முதலீட்டுக்கு கிடைக்கும் வட்டி மட்டும் 39,000 ரூபாயாக இருக்கும். இதனால் முதிர்வு காலத்தில், 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 2,49,000 ரூபாயை எடுத்துக் கொள்ளலாம்.

மாதம் மாதம் ஈஎம்ஐ செலுத்துவதற்கு சேமிப்பதை போல அல்லது வாடகை செலுத்துவதற்கு சேமிப்பதை போல பணத்தை எடுத்துப் போட்டால் போதும். அதை மாதத்தின் முதல் நாளன்று RD திட்டத்தில் வரவு வைக்கலாம். இப்படியே செய்து வர எந்தவித சிக்கலும் இன்றி 5 ஆண்டுக்குப் பிறகு வருமானம் பெற முடியும். நீங்கள் இதே தொகை தான் முதலீடு செய்ய வேண்டும் என்றில்லை. தொகையை நீங்களே தீர்மானிக்கலாம். குறைந்தபட்சம் 100 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+