ஆபத்தான முதலீட்டு திட்டங்களை விரும்பாத முதலீட்டாளர்களுக்கு போஸ்ட் ஆபீஸ்களில் எண்ணற்ற திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இவை பாதுகாப்பானதாகவும் அதே சமயத்தில் நிலையான வருமானத்தை வழங்கவும் அரசாங்கத்தால் வழங்கப்படும் திட்டங்களாகும். குறிப்பாக போஸ்ட் ஆபீஸ்களில் பிக்சட் டெபாசிட், ரெக்கரிங் டெபாசிட் ஆகியவை மக்களிடையே மிகவும் பிரபலம். மொத்தமாக முதலீடு செய்ய முடியாதவர்களும் போஸ்ட் ஆபிஸ்களில் வழங்கப்படும் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்து காலப்போக்கில் தங்களுடைய செல்வத்தை வளர்க்கலாம்.
தபால் அலுவலக RD திட்டம் எவ்வாறு செயல்படுகிறது?: அஞ்சல் அலுவலக RD திட்டம் தனிநபர்களை 5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் நிலையான தொகையை டெபாசிட் செய்ய அனுமதிக்கிறது. முதிர்வுக் காலம் முடிந்ததும் தனிநபர் மொத்தமாக தங்களுடைய முதலீடு மற்றும் வட்டியை சேர்த்து பெற்றுக் கொள்ளலாம்.

தபால் அலுவலக RD-இன் முக்கிய அம்சங்கள்: குறைந்தபட்சமாக 100 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். தற்போது ரெக்கரிங் டெபாசிட் திட்டத்திற்கு ஆண்டுக்கு 5.8 சதவீதம் முதல் 6.8 சதவீதம் வரை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
போஸ்ட் ஆபீஸ் சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை அரசாங்கம் காலாண்டுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கும். இந்த போஸ்ட் ஆபீஸ் RD திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். இது ஒவ்வொரு திட்டத்திற்கும் ஏற்ப மாறுபடும். உதாரணமாக PPF திட்டத்திற்கு 15 ஆண்டுகள், சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்திற்கு 21 ஆண்டுகள் என ஒவ்வொரு திட்டத்திற்கும் ஏற்ப இந்த முதிர்வு காலம் மாறுபடும்.
முன்கூட்டியே திரும்ப பெறுதல்: ஒரு வருடத்திற்கு பிறகு நீங்கள் பணத்தை திரும்ப பெற அனுமதிக்கப்படுவீர்கள். ஆனால் அதற்கு சில நிபந்தனைகள் உண்டு.
தபால் அலுவலக RD கால்குலேட்டரைப் பயன்படுத்துங்கள்: வருமானத்தை கைமுறையாகக் கணக்கிடுவது சவாலாக இருக்கும். ஏனெனில் RD திட்டத்திற்கு கூட்டு வட்டி வழங்கப்படுகிறது. எனவே போஸ்ட் ஆபீஸ் RD கால்குலேட்டரைப் பயன்படுத்தினால் நீங்கள் எவ்வளவு முதலீடு செய்ய இருக்கிறீர்கள்? முதிர்வுக் காலம் முடிந்ததும் அதற்கு எவ்வளவு வட்டி விகிதம் வழங்கப்படும் என்ற சரியான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
5000 முதலீட்டுக்கு எவ்வளவு லாபம்?: நீங்கள் போஸ்ட் ஆபீஸ் RD திட்டத்தில் தொடர்ந்து 5,000 ரூபாயை முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். 6.7 சதவீத வட்டி விகிதத்தில் 5 ஆண்டுக்குப் பிறகு உங்களுக்கு நீங்கள் ரூ.3 லட்ச ரூபாயை முதலீடு செய்திருப்பீர்கள். அதற்கு வட்டியாக 56,830 ரூபாய் கிடைக்கும். இதன் மூலம் மொத்த முதிர்வு தொகையாக 3,56,830 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications