மக்கள் பணத்தை சேமிக்கவும் முதலீடு செய்யவும் வங்கிகளை விட வட்டி அதிகம். இதில் 80சி பிரிவின் கீழ் வரி சலுகையும் கிடைக்கும். வட்டியோடு வரி சலுகையும் கிடைப்பதால் இது தான் சரியான ஆப்சன் எனலாம்.
அஞ்சலகத்தின் சேமிப்பு திட்டத்தின் நோக்கம் பணத்தை சேமிக்க மக்களை ஊக்குவிப்பதாகும். இதனால் தான் வங்கிகளை விட அதிக வட்டி விகிதங்கள் மற்றும் வரி விலக்கையும் அளிக்கின்றது.
அந்த வகையில் நாம் இன்று நாம் பார்க்கவிருக்கும் திட்டம் அஞ்சலகத்தின் தொடர் வைப்பு நிதி திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் நாம் மாத மாதம் முதலீடு செய்து கொள்ள முடியும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகளாகும்.
தொடர் வைப்பு நிதி உச்ச வரம்பு
இந்த திட்டத்தின் மூலம் நம்மால் இயன்ற தொகையை முதலீடு செய்து கொள்ளலாம். இதன் மூலம் வங்கி வட்டியினை அதிக வருமானத்தினை பெற்றுக் கொள்ளலாம். அஞ்சலகத்தின் இந்த தொடர் வைப்பு நிதி திட்டத்தில் 100 ரூபாயில் இருந்து முதலீடு செய்து கொள்ளலாம். அதிகபட்ச தொகை எதுவும் வரம்பு கிடையாது. இந்த திட்டத்தில் வட்டி விகிதம் 5.8% கிடைக்கும்.
எஸ்ஐபி மூலம் முதலீடு
இந்த திட்டத்தின் மூலம் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் போல முதலீடு செய்து கொள்ளலாம் என்பதால் கீழ்தட்டு மக்கள், நடுத்தர மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டத்தில் ஒருவர் எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளலாம். இருவர் இணைந்தும் தொடங்கிக் கொள்ளலாம். இதே 10 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் தாங்களே இந்த கணக்கினை நிர்வகிக்கலாம்.
5 ஆண்டுக்கு பிறகு எப்படி?
இதன் மூலம் முதிர்வுக்கு பிறகு ஒரு கணிசமான தொகையினை பெற முடியும். ஆக உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஒரு கணிசமான தொகையினை பெற முடியும்.
இந்த திட்டத்தில் அதிகபட்சமாக வட்டி விகிதம் 5.8% வட்டி கொடுக்கப்படுகின்றது. இதில் மாதம் 5000 ரூபாய் முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். இதன் மூலம் 5 வருடத்தில் 3 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள். உங்களது வருமானம் 48,740 ரூபாயாகும். இதன் மூலம் மொத்தம் 3,48,740 ரூபாயினை முதிர்வு தொகையாக பெறலாம்.
எஸ்ஐபி முதலீடு செய்தால்?
இந்த திட்டத்தில் மியூச்சுவல் ஃபண்டின் எஸ்ஐபி மூலம் முதலீடு செய்தால், 12% வருமானம் கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம். இதில் மாதம் 5000 ரூபாய் முதலீடு செய்து கொள்ளலாம். இதற்கு வருமானம் 12% என வைத்துக் கொள்வோம். இதன் மூலம் 5 ஆண்டுகள் கழித்து முதிர்வு தொகையாக 4,12,432 ரூபாயாக அதிகரிக்கலாம். இதன் மூலம் 5 ஆண்டுகளில் 3 லட்சம் ரூபாய் முதலீடு செய்யலாம். இதில் வட்டி வருவாயாக 1,12,432 ரூபாயாக இருக்கும். ஆக மொத்தம் 5 ஆண்டுகள் கழித்து 4,12,432 ரூபாயாக இருக்கலாம்.
எது பெஸ்ட்?
அஞ்சலக திட்டத்துட ன் ஒப்பிடும்போது எஸ் ஐ பியில் வருவாய் அதிகம் என்றாலும், அஞ்சலக திட்டத்தில் நிரந்தர வருமானம் ஆகும். அது பாதுகாப்பான ஒன்று. அதில் சந்தை அபாயம் என்பது இல்லை. ஆனால் மியூச்சுவல் ஃபண்டுகள் அப்படி இல்லை. இதில் சந்தை அபாயம் உண்டு. ஆக சந்தையின் நிலவரத்திற்கு ஏற்ப நீங்கள் தேர்வு செய்யும் ஃபண்டுகள் மாற்றம் இருக்கலாம். இதில் வருமானம் அதிகம் என்றாலும், ரிஸ்கும் உண்டு.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!



Click it and Unblock the Notifications