காலம் காலமாக முதலீடு என்ற உடன் பெரும்பாலானவர்கள் ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் RD எனப்படும் ரெக்கரிங் டெபாசிட் ஆகிய இரண்டு திட்டங்களை தான் தேர்வு செய்வார்கள். ஏனெனில் இவை கணிசமான லாபத்தை தருவதோடு நம்முடைய பணம் பாதுகாப்பாக நமக்கு திரும்ப கிடைப்பதையும் உறுதி செய்கின்றன. அப்படி மாதம் ரூ.100 முதலே முதலீடு செய்ய வழி வகை செய்யும் ஒரு போஸ்ட் ஆபிஸ் திட்டம் தான் போஸ்ட் ஆபிஸ் ரெக்கரிங் டெபாசிட்.
இந்த RD திட்டத்தில் நாம் சரியான முறையில் திட்டமிட்டு முதலீடு செய்தால் ஐந்து ஆண்டுகளில் 21 லட்சம் ரூபாயை பெற முடியும். அது எப்படி என்பது குறித்து தான் இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ள போகிறோம். அஞ்சல் நிலையங்களில் கிடைக்கக்கூடிய மிகச்சிறந்த சேமிப்புத் திட்டமாக RD திட்டங்கள் கருதப்படுகின்றன.

இந்தத் திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்கு ஆண்டுக்கு 6.7 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இதில் கிடைக்கக்கூடிய வட்டி தொகையானது ஒவ்வொரு காலண்டிற்கும் காம்பவுண்டிங் முறையில் கணக்கீடு செய்யப்படுகிறது. இதனால் நமக்கு முதிர்ச்சியின் போது அதிகபட்ச தொகையை பெற முடியும்.
அஞ்சல் நிலையங்களில் கிடைக்கக்கூடிய RD திட்டங்களை பொறுத்தவரை ஐந்தாண்டு காலம் முதிர்வு காலமாக வைக்கப்பட்டுள்ளது. அதாவது தொடர்ச்சியாக 5 ஆண்டு காலத்திற்கு நீங்கள் முதலீடு செய்தாக வேண்டும். தேவைப்படுபவர்கள் ஐந்தாண்டு காலம் முடிந்த பின்னர் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு கூட இந்த திட்டத்தை நீடித்துக் கொள்ளலாம். இதன்படி மாதத்திற்கு குறைந்தது 100 ரூபாய் முதல் அதிகபட்சமாக எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் முதலீடு செய்ய முடியும்.
இந்தத் திட்டத்தில் மாதம் தோறும் 30,000 ரூபாயை முதலீடு செய்தால் 5 ஆண்டுகால முடிவில் உங்களுக்கு 21 லட்சம் ரூபாய் கிடைத்துவிடும். அதாவது 5 ஆண்டுகளுக்கு மொத்தம் 60 மாதங்களுக்கு நீங்கள் இந்த திட்டத்தில் செய்த மொத்த முதலீடு 18 லட்சம் ரூபாய் ஆகும். உங்களுக்கு கிடைத்திருக்கும் வட்டி 3, 40,974 ரூபாய். எனவே ஐந்தாண்டு கால முடிவில் உங்களுக்கு மொத்தம் 21,40, 974 ரூபாய் கிடைக்கும்.
குழந்தைகளின் மேற்படிப்பு, திருமணம் உள்ளிட்ட செலவுகளுக்கு என திட்டமிட்டு பெற்றோர் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதன் மூலம் நமது பணம் பாதுகாப்பாக இருக்கிறது என்கிற நிம்மதியோடு , கணிசமான தொகையை வட்டியாகவும் பெற முடியும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications