சேமிப்பு பழக்கம் பிற்காலத்தில் ஏற்படும் செலவுகளை ஈடுகட்ட கண்டிப்பாகக் கை கொடுக்கும். இன்றெல்லாம் பல திட்டங்கள் போஸ்ட் ஆபீஸ்களிலேயே வழங்கப்படுகிறது. பெரும்பாலான மக்கள் போஸ்ட் ஆபீஸ் திட்டங்களை தேர்ந்தெடுப்பதற்கான காரணம் இங்கு செய்யப்படும் முதலீடுகள் பாதுகாப்பாகவும் அதேசமயம் உத்தரவாதமான வருமானத்தையும் வழங்கும் என்பதனால் தான். அரசாங்கத் திட்டம் என்பதால் மக்கள் எந்த வித பயமுமின்றி முதலீடு செய்கின்றனர்.
இன்றும் அப்படிப்பட்ட ஒரு திட்டத்தை பற்றி தான் பார்க்கவுள்ளோம். இந்தத் திட்டத்தில் வெறும் 100 ரூபாய் சேமிப்பதன் மூலம் ரூ. 2 லட்சத்திற்கும் அதிகமான வருமானம் பெற முடியும். அது என்ன திட்டம்? அதற்கு எத்தனை ஆண்டுகள் சேமிக்க வேண்டும்? என்பது குறித்து பார்ப்போம்.

போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட்: பிக்சட் டெபாசிட்களுக்கு மொத்தமாக முதலீடு செய்ய வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் சாமானியர்களால் மொத்தமாக முதலீடு செய்ய முடியாது. தற்போது இந்தியாவில் வசிக்கும் பெரும்பாலானோர் மாத சம்பளக்காரர்களாகத்தான் இருக்கின்றனர். இது போன்ற நபர்களுக்கும் மொத்தமாக முதலீடு செய்வது என்பது இயலாத காரியம்.
அப்படி இருக்கையில் மாதம் மாதம் குறிப்பிட்ட தொகையை போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட் என்று சொல்லப்படும் RD திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் நீங்கள் நிலையான தொகையை முதலீடு செய்ய வேண்டும். அதாவது இந்த மாதம் கணக்கு தொடங்கி குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்கிறீர்கள் என்றால் மறு மாதமும் அதே தொகையைத் தான் முதலீடு செய்ய முடியும்.
100 ரூபாய் முதலீட்டுக்கு எவ்வளவு வருமானம்?: ஒரு முதலீட்டாளர் தினமும் 100 ரூபாய் சேமிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். தினமும் 100 ரூபாய் சேமித்தால் மாதத்திற்கு 3,000 ரூபாய். இந்த 3,000 ரூபாயை மாதா மாதம் போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். உங்களுடைய சேமிப்புக்கு கணிசமான வட்டி வருமானமும் கிடைக்கும்.
RD திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். நீங்கள் செய்யும் முதலீட்டை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு செய்ய வேண்டும். 5 ஆண்டுகளுக்கும் மாதம் ரூ.3,000 முதலீடு செய்து வந்தால் சேமிப்பதே தெரியாமல் சேமிக்கலாம். தற்போது RD திட்டத்திற்கு 6.7% வட்டி வழங்கப்படுகிறது. 5 ஆண்டுகள் கழித்து பார்த்தால் ரூ.1,80,000 ரூபாயை முதலீடு செய்திருப்பீர்கள். இதற்கு 6.7 சதவீத வட்டி கிடைத்தால் ரூ.34,097 கிடைக்கும். முதிர்வு காலத்தில் உங்களுடைய சேமிப்பையும் வட்டியையும் சேர்த்து ரூ.2,14,097 பெறலாம்.
இது போன்ற திட்டங்கள் உண்டியலில் நீங்கள் எப்படி சேமிக்கிறீர்களோ? அதைப்போலவே செயல்படும். ஆனால் என்ன உண்டியலில் நீங்கள் சேமிக்கும் தொகைக்கு வட்டி கிடைக்காது. ஆனால் போஸ்ட் ஆபீஸில் முதலீடு செய்தால் வட்டியும் சேர்த்து பெறலாம். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைப் போல சந்தை அபாயங்களுக்கு உட்படாமல் இருப்பதால் நிலையான வருமானத்தை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஏற்ற திட்டமாக இது இருக்கும்.
RD திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால் கடன் வசதி. 12 மாதம் டெபாசிட் செய்த பிறகு உங்கள் டெபாசிட் தொகையில் 50 சதவீதம் வரை கடனாகப் பெறலாம். இந்த கடனை நீங்கள் மொத்தமாக திருப்பிச் செலுத்தலாம் அல்லது தவணை முறையில் திருப்பி செலுத்தலாம். ஆனால் கடனுக்கான வட்டி RD திட்டத்தின் வட்டியை விட 2 சதவீதம் அதிகமாகும்.
உதாரணமாக RD திட்டத்திற்கான வட்டி 6.7 சதவீதம் என்று முன்பே பார்த்தோம். அப்படியானால் கடனுக்கான வட்டி 8.7 சதவீதமாக இருக்கும். அவசரகால நிதி தேவைப்படும்போது RD திட்டம் ஏற்கனவே செய்யப்பட்டிருந்தால் அதிலிருந்து கடன் பெறலாம்.
அதேபோல RD திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். தேவைப்பட்டால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நீட்டிக்கலாம். நீட்டிக்கப்பட்ட கணக்கை எப்போது வேண்டுமானாலும் மூடலாம். எத்தனை ஆண்டுகளில் கணக்கு முடித்திருக்கிறீர்கள் என்பதன் அடிப்படையில் வட்டி கணக்கிடப்படும். மேலும் கூடுதல் மாதங்களுக்கு அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்கிற்கு எவ்வளவு வட்டி விகிதம் வழங்கப்படுகிறதோ? அந்த வட்டி விகிதம் வழங்கப்படும். தற்போது 4 சதவீதம் வழங்கப்படுகிறது. முன்கூட்டியே கணக்கை மூட 3 ஆண்டுகளுக்குப் பிறகு விண்ணப்பிக்கலாம். ஆனால் 5 ஆண்டுகளுக்கு ஒரு நாள் முன்பே கணக்கு மூடப்பட்டாலும் வட்டி சேமிப்பு கணக்கு விகிதத்தில் மட்டுமே இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications