தபால் அலுவலகங்களில் நாட்டு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்கள் வழங்கப்படுகிறது. இந்த திட்டங்களின் மூலம் ஒரு சிறு தொகையை முதலீடு செய்தாலும் பிற்காலத்தில் நல்ல வருமானம் பார்க்க முடியும். அப்படி தபால் அலுவலகங்களில் வழங்கப்படும் ஒரு அற்புதமான திட்டம் தான் ரெக்கரிங் டெபாசிட் என்று சொல்லப்படுகிற RD. இந்த திட்டத்தில் தினமும் 50 ரூபாய் சேமிப்பதன் மூலம் நீங்களும் கோடீஸ்வரராகலாம்.
போஸ்ட் ஆபீஸ்களில் பல திட்டங்கள் வழங்கப்படுகிறது. அதில் சில திட்டங்களுக்கு நீங்கள் மொத்தமாக முதலீடு செய்ய வேண்டும். உதாரணமாக பொது வருங்கால வைப்பு நிதி, செல்வமகள் சேமிப்பு திட்டம், கிசான் விகாஸ் பத்ரா போன்ற திட்டங்களுக்கு நீங்கள் மொத்தமாக முதலீடு செய்ய வேண்டும். சில திட்டங்களுக்கு வருடத்திற்கு ஒருமுறை முதலீடு செய்ய வேண்டும். இது போன்ற முதலீடுகள் அனைவராலும் செய்யக்கூடியவையாக இருக்காது. ஏனெனில் தினசரி சம்பளமும் பெறுபவர்கள், மாதாந்திர வருமானம் பெறுபவர்கள் செலவுகளை ஈடுகட்ட முடியாத நிலையில் RD திட்டங்கள் அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

RD திட்டத்தில் மாதா மாதம் முதலீடு செய்யும் போது சேமிப்பதே தெரியாமல் சேமிக்க முடியும். அதுவும் சிறு தொகையை தினசரி அடிப்படையில் சேமித்து வைத்து அதை ஒவ்வொரு மாதமும் வரவு வைத்து வந்தால் பிற்காலத்தில் ஏதோ ஒரு செலவுக்கு அந்த தொகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். RD டெபாசிட் திட்டங்கள் சிறு முதலீடாளர்களுக்கு ஏற்றது.
நாள் ஒன்றுக்கு 50 ரூபாய் சேமித்தால் எவ்வளவு லாபம்?: ஒரு முதலீட்டாளர் போஸ்ட் ஆபீஸ் RD திட்டத்தில் மாதம் ரூ.1,500 என்ற வீதத்தில் சேமிக்க தொடங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். இதற்கு 6.7% வட்டி வழங்கப்படுகிறது. அப்படியானால் 5 ஆண்டுகளில் 90,000 ரூபாயை முதலீடு செய்திருப்பார். 6.7% வட்டி விகிதத்தில் 17,050 ரூபாய் வட்டி வருமானம் கிடைக்கும். அப்படியானால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு 1,07,050 ரூபாயைப் பெற்றுக் கொள்ளலாம்.
குறைந்தபட்ச முதலீடு: RD திட்டத்தில் குறைந்தபட்சமாக மாதத்திற்கு 100 ரூபாய் முதல் செலுத்தி வரலாம். அதிகபட்ச வரம்பு இதற்கு இல்லை. எனவே உங்களால் எவ்வளவு முடிகிறதோ? அவ்வளவு தொகையை முதலீடு செய்யலாம். உங்களுடைய முதலீட்டுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும்? என்பதை ஆன்லைன் கால்குலேட்டர்களைப் பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம். சிறு தொகையை சேமிக்க வேண்டும் என்று விரும்பும் நபர்களுக்கு இது போன்ற திட்டங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்தத் திட்டம் சேமிப்பு பழக்கத்தை பெறவும், உங்கள் நிதி இலக்குகளை அடையவும் கண்டிப்பாக உதவிகரமானதாக இருக்கும். அதோடு பாதுகாப்பான, அதேசமயம் உத்தரவாதமான வருமானம் பெற விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இந்த திட்டம் ஏற்றது.
More From GoodReturns

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!



Click it and Unblock the Notifications