மாதம் மாதம் சிறு தொகையாவது சேமிப்பது என்பது மிகவும் முக்கியம். ஏனெனில் அடுத்து வரும் அவசர செலவுகள், எதிர்கால இலக்குகள் என பலவற்றுக்கும் சிறு சேமிப்பு என்பது அவசியமாகிறது. ஆனால் எல்லோராலும் மொத்தமாக முதலீடு செய்ய முடியாது. இது போன்ற சிறு முதலீட்டாளர்களுக்காகத்தான் போஸ்ட் ஆபீஸ்களில் தொடர் வைப்பு திட்டம் என்று சொல்லப்படும் ரெக்கர்ரிங் டெபாசிட்கள் வழங்கப்படுகிறது.
RD திட்டத்தில் மாதம் மாதம் உங்களால் இயன்ற அளவு தொகையை முதலீடு செய்யலாம். அதன் பிறகு முதிர்வு காலம் முடிந்து வட்டியும் அசலமாக பெற்றுக்கொள்ளலாம். இந்தப் பதிவில் மாதம் 15,000 ரூபாய் RD திட்டத்தில் சேமித்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்? என்பது குறித்து பார்ப்போம்.

போஸ்ட் ஆபீஸ் RD திட்டம் என்றால் என்ன?: போஸ்ட் ஆபீஸ் RD திட்டம் என்பது தொடர் வைப்புத் திட்டமாகும். இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை சேமிக்க வேண்டும். குறைந்தபட்சமாக 100 ரூபாய் முதல் கணக்கு தொடங்கலாம். இந்த திட்டம் தனிநபர்கள் தொடர்ந்து சேமிக்கவும், காலப்போக்கில் கணிசமான வட்டியைப் பெறவும் உதவுகிறது.
முதிர்வுக் காலம் போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். அதாவது தொடர்ந்து 60 மாதங்களுக்கு மாதம் மாதம் முதலீடு செய்ய வேண்டும். தற்போது RD திட்டத்திற்கு 6.7 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த வட்டியின் மூலம் உங்களுடைய வருமானம் காலப்போக்கில் வளரும்.
மாதம் ரூ. 15,000 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம்?: போஸ்ட் ஆபீஸ் RD திட்டத்தில் தொடர்ந்து மாதம் 15,000 ரூபாயை 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் 6.7 சதவீத வட்டு விகிதத்தில் மொத்தமாக 10 லட்ச ரூபாயை முதலீடு செய்திருப்பீர்கள். இதற்கு வட்டி வருமானமாக 1,70,492 ரூபாய் வழங்கப்படும். இதன் மூலம் மொத்த முதிர்வு தொகையாக 10,70,492 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம்.
போஸ்ட் ஆபீஸ் RD திட்டம் நம்பகமான திட்டமாகும். பங்குச்சந்தை முதலீடுகளைப் போல் அல்லாமல் சிறு தொகையை மாத மாதம் சேமிக்க வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு இந்த திட்டம் ஏற்றது. நீங்கள் மொத்தமாக 15,000 ரூபாயைத்தான் முதலீடு செய்ய வேண்டும் என்று கிடையாது. 100 ரூபாய் முதல் சேமிக்கலாம். உங்களின் வருமானத்திற்கு ஏற்ப சேமிப்பது பிற்காலத்தில் உங்களுக்கு உதவிகரமானதாக இருக்கும்.
எப்படி கணக்கு தொடங்குவது?: நீங்கள் அருகில் உள்ள போஸ்ட் ஆபீஸ் அலுவலகத்தை நேரில் பார்வையிடலாம் அல்லது ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்தியா போஸ்ட் வெப்சைட்டின் உள்நுழைந்து ரெக்கரிங் டெபாசிட் ஆப்ஷன் என்பதைத் தேர்ந்தெடுத்து அதன் பிறகு தேவையான விவரங்களை வழங்கி பேமென்ட் செலுத்தி கணக்கு தொடங்கலாம்.
தேவைப்படும் ஆவணங்கள்: பான் கார்டு, ஆதார் கார்டு போன்ற அடையாள ஆவணங்கள் இதற்கு தேவைப்படும்.
More From GoodReturns

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!



Click it and Unblock the Notifications