முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் நம்மில் அனைவருக்கும் இருக்கும்? ஆனால் எந்த திட்டத்தில் முதலீடு செய்வது என்ற கேள்வி இருக்கும். பணம் சம்பாதிப்பதை விட, இன்றைய காலக்கட்டத்தில் அதனை சரியான முறையில் முதலீடு செய்வதே சரியான தேர்வாக இருக்கும்.
அப்படி முதலீடு செய்யும்போது அது பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். அதேசமயம் லாபகரமானதாகவும் இருக்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக குறைந்த முதலீட்டினை செய்யும் விதமாக இருக்க வேண்டும். அஞ்சலகத்தின் சிறுசேமிப்பு திட்டங்கள் என்பது சாமானியர்களும் முதலீடு செய்ய வேண்டும், சேமிக்க வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்ட திட்டங்கள் தான்.
அஞ்சலகத்தின் எந்த திட்டம்?
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருக்கும் திட்டம் அஞ்சலகத்தின் தொடர் வைப்பு நிதி திட்டமாகும்.
அஞ்சலகத்தின் தொடர் வைப்பு நிதி திட்டம் குறைந்த முதலீடு செய்வதன் மூலம், மிகப்பெரிய கார்ப்பஸினை உருவாக்க முடியும் எனலாம். இதனை 100 ரூபாயில் இருந்து கூட ஆரம்பிக்கலாம். அதிகபட்ச முதலீடு என்பது எதுவும் இல்லை.
5 ஆண்டுத் திட்டம்
இந்த திட்டத்தில் 5 ஆண்டுகளில் 2 லட்சத்திற்கும் அதிகமான கார்ப்பஸினை உருவாக்க முடியும். இந்த திட்டத்திற்கு வட்டி விகிதம் 5.8% ஆகும். இதில் கூட்டு வட்டி வழங்கப்படும். இந்த திட்டத்தில் முதிர்வு தொகையாக 2,10,000 ரூபாயாக முதிர்வு தொகையாக பெறலாம்.
கூட்டாக தொடங்கிக் கொள்ளலாம்
அஞ்சலகத்தில் இந்த திட்டத்தினை எங்கு வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளலாம். இதனை கூட்டாகவும் தொடங்கிக் கொள்ளலாம். அதிகபட்சம் மூன்று பேர் வரை இணைந்து கூட்டாக தொடர் வைப்பு நிதி கணக்கினைக் தொடங்கிக் கொள்ளலாம். இதனை குழந்தைகளை நாமினியாக கொண்டும் தொடங்கிக் கொள்ளலாம்.
யாரெல்லாம் தொடங்கலாம்?
இந்த திட்டம் மாத சம்பளதாரர்களுக்கும், சாமனிய மக்களுக்கும் ஏற்ற ஒரு முதலீட்டு திட்டமாகும். ஏனெனில் தங்களுடைய சம்பளத்தில், வருவாயில் சிறு தொகையை இந்த தொடர் வைப்பு நிதி திட்டத்தில் போட்டு வைக்கலாம். சம்பளதாரர்கள் மட்டும் அல்ல, வீட்டில் உள்ள பெண்கள், குறைந்த வருமானம் ஈட்டும் மக்களும் இந்த திட்டத்தின் மூலம் முதலீடு செய்ய முடியும். இதன் மூலம் கணிசமான லாபத்தினை ஈட்ட முடியும் எனலாம்.
கடன் கிடைக்கும்
இந்த திட்டத்தில் கடைசியாக ஏப்ரல் 1, 2020 அன்று வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் கடன் வசதியும் உண்டு. 12 தவணைகள் செலுத்தப்பட்ட பின்னர் அல்லது 1 வருடத்திற்கு பிறகு இந்த திட்டத்தினை இடையில் நிறுத்தி வைக்கப்பட்டாலும், முந்தைய தொகையில் 50% கடனாக பெறலாம். இந்த கடனை மாத தவணையாகவோ அல்லது மொத்தமாகவோ செலுத்தலாம். இதற்காக வட்டி விகிதம் பணம் வித்டிராவல் செய்யும் நாளில் இருந்து திரும்ப செலுத்தும் வரை செலுத்த வேண்டியிருக்கும். இதில் வட்டி விகிதம் ஆர்டி வட்டியோடு, கூடுதலாக 2% செலுத்த வேண்டியிருக்கும்.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications