சேமிப்பு என்பது அனைவருக்குமே முக்கியமான ஒரு விஷயம். குறைந்த அளவு சேமித்தாலும் பிற்காலத்தில் ஏதோ ஒரு விஷயத்திற்காக அவை உதவலாம். சம்பளம் வந்தவுடன் காலி ஆகிவிடுகிறது.. இதில் எப்படி சேமிப்பது? என்று நீங்கள் கேட்பது கேட்கிறது. மொத்த தொகையை முதலீடு செய்யவோ அல்லது சேமிக்கவோ முடியாதவர்கள் சிறு தொகையை சேமித்து லாபம் பார்க்கும் வகையில் போஸ்ட் ஆபீஸ்களில் ரெக்கரிங் டெபாசிட் (RD) திட்டம் வழங்கப்படுகிறது. போஸ்ட் ஆபீஸ்களில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது. அவற்றில் RD திட்டமும் ஒன்று.
மொத்தமாக முதலீடு செய்யும் திட்டங்களும் உள்ளன. ஆனால் மாத சம்பளக்காரர்கள் குறைந்த தொகையை சேமிப்பதற்கு ரெக்கரிங் டெபாசிட் திட்டம் உதவிகரமானதாக இருக்கும். இந்த திட்டத்தில் மாதம் ரூ.2000 ரூபாயை முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்? என்பதைப் பார்ப்போம்.

தபால் அலுவலகம் RD திட்டம்: சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் தபால் அலுவலகங்களில் எண்ணற்ற திட்டங்கள் வழங்கப்படுகிறது. அப்படி ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ரெக்கரிங் டெபாசிட் திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும். இது உத்தரவாதத்துடன் வருமானம் தரக்கூடிய அரசாங்கத் திட்டமாகும். இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக மாதத்திற்கு 100 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்ச முதலீட்டு வரம்பு இல்லை. எனவே உங்களால் எவ்வளவு தொகையை முதலீடு செய்ய முடியுமோ அவ்வளவு முதலீடு செய்யலாம். RD திட்டம் தொடர் வைப்பு திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் RD திட்டத்தில் 2000 ரூபாய் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம்?: ஒவ்வொரு மாதமும் போஸ்ட் ஆபீஸ் RD திட்டத்தில் 2000 ரூபாயை முதலீடு செய்தால் வருடத்திற்கு 24,000 ரூபாயை முதலீடு செய்திருப்பீர்கள். தற்போது இந்தத் திட்டத்திற்கு 6.7 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. RD திட்டத்தின் முதிர்வுக் காலம் 5 ஆண்டுகள். தொடர்ச்சியாக 5 வருடங்களுக்கு ரூ. 2,000 முதலீடு செய்தால்.. ரூ.1,20,000 ரூபாயை முதலீடு செய்திருப்பீர்கள். இதற்கு வட்டி வருமானமாக ரூ.22,732 வழங்கப்படும். இதன் மூலம் ஐந்து ஆண்டுக்குப் பிறகு ரூ.1,42,732 பெற்றுக் கொள்ளலாம்.
யாரெல்லாம் RD திட்டத்தில் முதலீடு செய்யலாம்?: 18 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். கூட்டு கணக்கு தொடங்கி முதலீடு செய்யும் வசதியும் உள்ளது.
பணம் எப்போது செலுத்த வேண்டும்?: கணக்கு தொடங்கப்பட்ட தேதியைப் பொறுத்து மாதத்தின் 15-ஆம் தேதி அல்லது மாத இறுதியில் தொகையை செலுத்த வேண்டும். உதாரணமாக ஒருவர் 10-ஆம் தேதி RD கணக்கைத் தொடங்கியிருந்தால் 15-ஆம் தேதிக்குள் தொகையை வரவு வைக்க வேண்டும்.
அதுவே 20-ஆம் தேதி கணக்கு தொடங்கி இருந்தால் மாதக் கடைசி நாளுக்குள் பணம் செலுத்த வேண்டும். RD திட்டத்திற்கு கடன் வசதியும் வழங்கப்படுகிறது. 12 தவணைகளை தொடர்ந்து டெபாசிட் செய்த பிறகு முதலீட்டாளர்கள் தங்கள் கணக்கில் இருக்கும் தொகையில் 50 சதவீதம் வரை கடனாகப் பெற முடியும். கடனை மொத்தமாகவோ அல்லது மாதாந்திர தவணையாகவோ திருப்பிச் செலுத்தலாம். இந்த கடனுக்கு RD திட்டத்தின் வட்டி விகிதத்துடன் 2 சதவீத வட்டி சேர்த்து வசூலிக்கப்படும்.
RD திட்டத்தின் முதிர்வுக் காலம் 5 ஆண்டுகள். வேண்டுமானால் அதன் பிறகு 5 ஆண்டுகளுக்கு கணக்கை நீட்டிக்கலாம். கணக்கைத் தொடங்கும் போது என்ன வட்டி விகிதம் வழங்கப்பட்டதோ? அதே வட்டி விகிதம் நீட்டிக்கப்பட்ட கணக்குக்கும் தொடரும்.
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications