பல்வேறு முதலீட்டு திட்டங்கள் சந்தையில் இருந்தாலும் சிறு தொகையை மாதம் மாதம் முதலீடு செய்ய வேண்டும் என்று எண்ணுபவர்கள் போஸ்ட் ஆபீஸ்களில் வழங்கப்படும் RD திட்டத்தை தேர்வு செய்கின்றனர். மொத்தமாக முதலீடு செய்ய முடியாதவர்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்தப் பதிவில் RD திட்டத்தில் மாதம்தோறும் ரூ.5000 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று பார்ப்போம்.
வட்டி விகிதம்: தற்போது போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்திற்கு 6.7 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. குழந்தைகள், பெரியவர்கள் என எந்த வயதினர் வேண்டுமானாலும் RD கணக்கைத் தொடங்கலாம். RD திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். தேவைப்பட்டால் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொள்ளலாம்.

குறைந்தபட்ச முதலீடு: குறைந்தபட்ச முதலீடாக ரூ.100 முதல் RD கணக்கைத் தொடங்கலாம். அதிகபட்ச வரம்பு இதற்கு இல்லை. நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் தனி நபர்கள் ஒற்றை அல்லது கூட்டு கணக்கைத் தொடங்கலாம். பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கணக்கு தொடங்கலாம். இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். தேவைப்பட்டால் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்துக் கொள்ளலாம். 3 ஆண்டுகளுக்குப் பிறகு கணக்கை முன்கூட்டியே முடிக்கும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
போஸ்ட் ஆபீஸ் RD கணக்கில் மாதம் ரூ.10,000 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம்?: போஸ்ட் ஆபீஸ் RD கணக்கில் மாதம் ரூ.10,000 முதலீடு செய்தால் 5 வருடத்திற்கு மொத்தமாக ரூ.6 லட்சம் முதலீடு செய்திருப்பீர்கள். இதற்கு 6.7 சதவீத வட்டி விகிதம் வழங்கப்பட்டால், 5 ஆண்டுகள் கழித்து வட்டியாக 1,13,659 ரூபாய் கிடைக்கும். இதன் மூலம் மொத்த வருமானம் ரூ.7,13,659 ஆக இருக்கும்
போஸ்ட் ஆபீஸ் RD கணக்கில் மாதம் ரூ.5,000 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம்?: போஸ்ட் ஆபீஸ் RD கணக்கில் மாதம் ரூ.5,000 முதலீடு செய்தால் 5 வருடத்திற்கு மொத்தமாக ரூ.3 லட்சம் முதலீடு செய்திருப்பீர்கள். இதற்கு 6.7 சதவீத வட்டி விகிதம் வழங்கப்பட்டால், 5 ஆண்டுகள் கழித்து வட்டியாக 56,830 ரூபாய் கிடைக்கும். இதன் மூலம் மொத்த வருமானம் ரூ.3,56,830 ஆக இருக்கும்.
12 டெபாசிட் செய்த பிறகு, டெபாசிட் தொகையில் 50 சதவீத வரை கடனாகப் பெற்றுக் கொள்ள முடியும்.கடனை மொத்தமாகவோ அல்லது மாதாந்திர தவணையாகவோ திருப்பிச் செலுத்தலாம். இந்த கடனுக்கு RD திட்டத்தின் வட்டி விகிதத்துடன் 2 சதவீத வட்டி சேர்த்து வசூலிக்கப்படும்.


Click it and Unblock the Notifications