பெரிய நிதி இலக்குகளை நிறைவேற்ற துடிக்கும் சாமானியர்களுக்கு போஸ்ட் ஆபீஸ்களில் பல்வேறு திட்டங்கள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் வழங்கப்படும் ஒரு திட்டம் தான் ரெக்கரிங் டெபாசிட் என்ற சொல்லப்படும் RD திட்டம். பொதுவாகவே போஸ்ட் ஆபீஸ்களில் செய்யப்படும் முதலீடுகள் பாதுகாப்பாக இருக்கும் என்பது தான் பெரும்பாலான முதலீட்டாளர்களின் கருத்து. அதற்கேற்ப இங்கு வழங்கப்படும் வட்டி விகிதங்களும் அதிக வருமானத்தை பெற விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாக இருக்கிறது.
இங்கு பொது வருங்கால வைப்பு நிதி, செல்வமகள் சேமிப்பு திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், கிசான் விகாஸ் பத்திர போன்ற பல்வேறு திட்டங்கள் வழங்கப்படுகிறது. வங்கிகளைப் போலவே ரெக்கரிங் டெபாசிட் திட்டங்கள், பிக்சட் டெபாசிட் திட்டங்கள் போன்றவையும் வழங்கப்படுகிறது.

இங்கு மொத்தமாக முதலீடு செய்யப்படும் திட்டங்களும் உள்ளன. மாதம் மாதம் முதலீடு செய்யப்படும் திட்டங்களும் உள்ளன. மாத சம்பளக்காரர்கள் ரெக்கரிங் டெபாசிட் போன்ற திட்டங்களை தேர்ந்தெடுத்தால், மாதத்திற்கு ஒருமுறை முதலீடு செய்யலாம் இந்த பதிவில் ஒருவர் ஒரு நாளைக்கு 100 ரூபாய் வீதத்தில் சேமிக்க தொடங்கினால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பது குறித்து பார்ப்போம்.
தபால் அலுவலகத்தின் ரெக்கரிங் டெபாசிட் திட்டம் சிறு முதலீட்டாளர்களுக்கு ஏற்றது. இந்த திட்டத்தில் நாளொன்றுக்கு 100 ரூபாய் சேமித்தால்.. வெறும் 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான வருமானம் பெற முடியும்.
RD திட்டம் எவ்வாறு செயல்படுகிறது?: ஒரு முதலீட்டாளர் ஒவ்வொரு நாளும் 100 ரூபாய் என்ற வீதத்தில் மாதத்திற்கு 3000 ரூபாய் முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால் மாதத்திற்கு ரூ. 3000.. வருடத்திற்கு ரூ. 36,000 முதலீடு செய்யப்படுகிறது. இப்போது RD திட்டத்திற்கு 6.7 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
RD திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். வெறும் 5 ஆண்டுகளில் உங்களுடைய வருமானம் 2,14,097 ரூபாயாக அதிகரிக்கும். இதில் உங்களுடைய முதலீடு 1,80,000 மட்டுமே. மீதி இருக்கும் தொகை நீங்கள் பெற்ற வட்டி வருமானம் ஆகும். முதலீடு செய்வது தெரியாமலேயே அதிக தொகையை குவிக்க விரும்புபவர்கள் இந்த திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம்.
மேலே கூறப்பட்ட உதாரணத்தில் 100 ரூபாயை எடுத்துக் கொண்டோம். ஆனால் இந்த திட்டத்திற்கு அதிகபட்ச வரம்பு இல்லை. உங்களால் எவ்வளவு தொகை முடியுமோ அவ்வளவு முதலீடு செய்யலாம். ஆனால் மாதம் நீங்கள் செலுத்தக்கூடிய தொகை நிலையானதாக இருக்க வேண்டும்.சிறுக சிறுக சேமிக்க விரும்புபவர்களுக்கு இந்த திட்டம் ஏற்றது.
நீங்கள் எவ்வளவு முதலீடு செய்ய இருக்கிறீர்கள்? அதற்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும்? என்பதை ஆன்லைன் கால்குலேட்டரை பயன்படுத்தி தெரிந்து கொண்டு, அதன் பிறகு தகவல் அறிந்த முதலீட்டு முடிவுகளை எடுக்க முடியும்.
More From GoodReturns

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!



Click it and Unblock the Notifications