போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் முதலீட்டாளர்களுக்கு வழங்கும் நன்மை குறித்த பல்வேறு பதிவுகளில் பார்த்தோம். இந்தப் பதிவிலும் ஒரு போஸ்ட் ஆபீஸ் திட்டத்தை பற்றி தான் பார்க்கவுள்ளோம். பெரும்பாலும் போஸ்ட் ஆபீஸ் திட்டங்களை மக்கள் நாடுவதற்கு காரணம் அரசாங்கத் திட்டங்கள் என்பதால் தங்களுடைய வருமானம் பாதுகாக்கப்படும் என்ற காரணத்திற்காக மட்டுமே. மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறுகிய காலத்தில் நிறைந்த வருமானத்தை வழங்கினாலும், அவற்றின் அபாயம் சற்று அதிகமாகவே உள்ளது. இதன் காரணமாக பழமைவாத முதலீட்டாளர்களின் விருப்ப தேர்வு தபால் அலுவலக திட்டங்கள் தான்.
இந்த பதிவில் போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் 5000 ரூபாய் முதலீடு செய்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பது குறித்து பார்ப்போம்.

ரெக்கர்ரிங் டெபாசிட் என்று சொல்லப்படுகிற RD திட்டம் மாதம் மாதம் முதலீடு செய்ய ஏற்ற திட்டம் ஆகும். அனைவராலும் ஒட்டுமொத்தமாக முதலீடு செய்ய முடியாது. சிறு தொகையாக முதலீடு செய்ய விரும்பும் நபர்கள் RD திட்டத்தை தேர்வு செய்யலாம். இந்த திட்டத்திற்கு தற்போது 6.7 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. RD திட்டம் எளிதாக வருமானம் பெற உதவுவதோடு.. கடன் பெரும் அம்சத்தோடு வருகிறது.
போஸ்ட் ஆபீஸ் RD திட்டத்தில் 5,000 ரூபாய் சேமித்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?: போஸ்ட் ஆபீஸ் RD திட்டத்தில் மாதமாதம் 5,000 ரூபாய் என்ற வீதத்தில் டெபாசிட் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் 5 வருடம் கழித்து மொத்தமாக 3 லட்ச ரூபாயை முதலீடு செய்திருப்பீர்கள். போஸ்ட் ஆபீஸ் RD திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள்.
போஸ்ட் ஆபீஸ்களில் வழங்கப்படும் வெவ்வேறு திட்டங்களுக்கும் வெவ்வேறு முதிர்வு காலம் உண்டு. அந்த குறிப்பிட்ட காலம் வரை நீங்கள் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். RD திட்டத்திற்கு மாதம் மாதம் பணம் செலுத்த வேண்டும். மாத சம்பளக்காரர்களுக்கு இந்த திட்டம் ஏற்றது. தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு 5000 என்ற விதத்தில் முதலீடு செய்தால் 6.7 சதவீத வட்டி விகிதத்தில் வட்டி வருமானமாக 56,830 ரூபாய் கிடைக்கும். இதன் மூலம் 5 வருடம் கழித்து மொத்த முதிர்வு தொகையாக 3,56,830 ரூபாயாக பெற்றுக்கொள்ளலாம்.
அதுவே உங்களுடைய முதலீட்டை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்தால் லாபம் இன்னும் அதிகரிக்கும். அப்படியானால் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 5000 செலுத்த வேண்டும். இப்படி செய்தால் முதல் 5 ஆண்டுகளுக்கு ரூ.3 லட்சமும், இன்னொரு 5 ஆண்டுகளுக்கு ரூ.3 லட்சம் என ரூ.6 லட்சத்தை முதலீடு செய்திருப்பீர்கள்.
இதற்கு வருமானமாக 2,54,272 ரூபாய் கிடைக்கும். இதன் மூலம் மொத்த முதிர்வு தொகை 8,54,272 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். தபால் அலுவலக RD திட்டத்திற்கு கடன் வசதியும் வழங்கப்படுகிறது. கணக்கு வைத்திருப்பவர்கள் 1 வருடத்திற்கு பிறகு நீங்கள் டெபாசிட் செய்த தொகையில் 50 சதவீதம் வரை கடன் பெறலாம். கடனுக்கான வட்டி விகிதம் RD திட்டத்திற்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை விட 2 சதவீதம் அதிகம். ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால் இந்த கடனைப் பயன்படுத்தி பலனடையலாம்.
குறைந்தபட்ச முதலீடு: நீங்கள் மாதம் 5000 தான் முதலீடு செய்ய வேண்டும் என்றெல்லாம் கிடையாது. உங்களால் இயன்ற தொகையை முதலீடு செய்யலாம். 100 ரூபாய் முதல் கணக்கு தொடங்க முடியும். அதிகபட்ச வரம்பு இந்தத் திட்டத்திற்கு கிடையாது. நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications