சென்னை: வருமான வரியை மிச்சப்படுத்த வேண்டும் என்பதற்காக மட்டுமே முதலீடு செய்யக்கூடாது நமது தேவை மற்றும் நமது வருங்கால திட்டங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டும்.
அந்த வகையில் நமது அஞ்சல் அலுவலகங்களில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் கிடைக்கின்றன. இதில் நல்ல லாபம் தரக்கூடிய ஆனால் வருமான வரிப் பிரிவு 80 சியின் கீழ் வரி விலக்கு தராத திட்டங்கள் இருக்கின்றன.
கிசான் விகாஸ் பத்ரா: இந்த திட்டம் அஞ்சல் அலுவலகத்தில் மட்டும் கிடைக்கும் ஒரு சிறு சேமிப்பு திட்டம் ஆகும். இதில் தற்போது கூட்டு வட்டி விகித முறையில் ஆண்டுக்கு 7.5% வட்டி கிடைக்கிறது. ஆனால் கிசான் விகாஸ் பத்திரத்தில் நாம் செய்யக்கூடிய முதலீடுகளை வருமான வரி சட்டத்தின் பிரிவு 80 சியின் கீழ் சுட்டிக்காட்டி வரிவிலக்கு பெற முடியாது.

போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டம்: வங்கிகள் வழங்கக்கூடிய ஃபிக்சட் டெபாசிட்டுகளைப் போன்ற ஒரு சேமிப்பு திட்டம் ஆகும். ஓராண்டு தொடங்கி 5 ஆண்டுகள் வரை இந்த திட்டத்தில் நாம் முதலீடு செய்ய முடியும்.
1 ஆண்டு டெபாசிட் -6.9% வட்டி
2 ஆண்டுகள் டெபாசிட் - 7.0% வட்டி
3 ஆண்டுகள் டெபாசிட் - 7.1% வட்டி
5 ஆண்டுகள் டெபாசிட் - 7.5% வட்டி
இதில் ஐந்தாண்டு டெபாசிட் திட்டத்திற்கு மட்டுமே வருமான வரி விலக்கு கிடைக்கும். மற்றவற்றுக்கு இந்த வரி விலக்கு கிடைக்காது. ஆனால் குறுகிய காலத்தில் நல்ல வட்டி தரக்கூடிய முதலீட்டு திட்டங்கள் இவை.
அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமான திட்டம் : ஓர் நிதியாண்டுக்கு 7.4% வட்டி தரக்கூடிய மிகச்சிறந்த ஒரு திட்டம் இது. 5 ஆண்டுகள் லாக் இன் கொண்டது. இந்த சேமிப்பு திட்டத்திற்கு மூலத்தில் பிடிக்கப்படும் வரி அதாவது டிடிஎஸ் பொருந்தாது. அதே வேளையில் இந்த திட்டத்தில் செய்யும் முதலீட்டுக்கு வரி விலக்கும் கிடைக்காது.
மகிளா சம்மன் பத்திரம்: பெண்களுக்கான ஒரு முதலீட்டு பத்திரம் தான் இது. மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் மூலம் ஆண்டுக்கு 7.5% வட்டியை நாம் பெற முடியும் . இரண்டு ஆண்டுகள் மட்டுமே லாக் இன் பீரியட் . எனவே இது ஒரு குறுகிய கால சேமிப்பு திட்டம் ஆகும்.
ஒரு வேளை, வருமான வரி சேமிப்புக்காக , முதலீடு செய்ய வேண்டும் என விரும்புபவர்கள் அஞ்சல் அலுவலகத்தின் கீழ் வழங்கக்கூடிய பின்வரும் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
பொது வருங்கால வைப்பு நிதி திட்டம், 5 ஆண்டுகள் தபால் நிலைய டெபாசிட் திட்டம், தேசிய சேமிப்பு சான்றிதழ், சுகன்யா சம்ருதி யோஜனா மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் ஆகிய ஐந்து திட்டங்களுக்கும் வருமான வரி சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வரி சலுகை பெற்றுக் கொள்ளலாம்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications