அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் என்பது மக்கள் பெரிதும் விரும்பக் கூடிய நம்பிக்கையான திட்டமாக பார்க்கப்படுகின்றன. கடந்த பட்ஜெட் 2023ல் அஞ்சலகத்தின் மாதாந்திர வருவாய் திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் போன்ற சில பிரபலமான அஞ்சல் அலுவலக திட்டங்களில் சில முக்கிய மாற்றங்களைச் செய்தார்.
அஞ்சலகத்தின் மாதாந்திர வருவாய் திட்டத்தில் மாத மாதம் வருமானம் கிடைக்கும் ஒரு திட்டமாகும். இந்த திட்டத்தில் மாத மாத வருமானமாகவோ அல்லது லம்ப்சம் தொல்கையாகவும் கிடைக்கும்.
மாதாந்திர வருவாய் திட்டம்
அஞ்சலகத்தின் மாதாந்திர வருவாய் திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக பட்ஜெட்டுக்கு முன்பு வரையில் 9 லட்சம் ரூபயாக இருந்தது. இது பட்ஜெட்டில் 15 லட்சம் ரூபாயாக அதிகரித்தது. இதன் வட்டி விகிதம் 7.10% ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் மாதம் மாதம் பென்சன் தொகை போல வருமானம் கிடைக்கும்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்
அஞ்சலகத்தின் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் என்பது முதிர்யோகளுக்கான ஒரு பாதுகாப்பான சேமிப்பு திட்டம். இந்த திட்டத்தில் தற்போது வட்டி விகிதம் 8% ஆக வழங்கப்படுகின்றது. இந்த திட்டத்தில் முன்னதாக 15 லட்சம் ரூபாயாக அதிகபட்சம் முதலீடு செய்யலாம் என இலக்கு இருந்தது. இது தற்போது 30 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சுகன்யா சம்ரிதி யோஜனா
பெண் குழந்தைகளுக்காக பிரத்யேகமான ஒரு முதலீட்டு திட்டம் தான் சுகன்யா சம்ரிதி யோஜனா. இந்த திட்டத்தில் 250 ரூபாயில் இருந்து, 1.5 லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தி,ல் 7.6% வரையில் வட்டி விகிதம் வழங்கப்படும். இந்த திட்டத்தில் பிறந்த பெண் குழந்தை முதல் கொண்டு சேமிப்பு கணக்கினை தொடங்கிக் கொள்ளலாம்.
கிசான் விகாஸ் பத்திரம்
அஞ்சலக திட்டங்களில் இன்றும் மக்கள் விரும்பும் திட்டங்களில் ஒன்று கிசான் விகாஸ் பத்திரம் ஆகும். இந்த திட்டத்தில் வட்டி விகிதம் 7.2% வரையில் வழங்கப்படுகின்றது. இதி;ல் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் கொண்டு முதலீடு செய்து கொள்ளலாம். இதில் நீங்கள் முதலீடு செய்யும் தொகையானது 120 மாதங்களில் இரட்டிப்பாகும்.
தேசிய சேமிப்பு பத்திரம்
தேசிய சேமிப்பு பத்திரம் திட்டமானது அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் முக்கியமான ஒன்று. இந்த திட்டத்தில் தற்போது வட்டி விகிதம் 7% ஆக வழங்கப்படுகின்றது. இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாயில் இருந்து முதலீடு செய்து கொள்ளலாம். அதிகபட்ச வரம்பு என்பது இல்லை. இதன் முதலீட்டு காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
வட்டி அதிகம்
பொதுவாகவே அஞ்சலக திட்டங்களில் பாதுகாப்பு என்பது அதிகம். சந்தை அபாயம் என்பது கிடையாது. வட்டி விகிதம் என்பது அதிகம் எனலாம். அதோடு முதலீட்டாளர்களுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு திட்டமாகவும் உள்ளது. பொதுவாக அஞ்சலக திட்டங்களில் வட்டி விகிதம் என்பது சற்றே அதிகம். ஆக மற்ற திட்டங்களை காட்டிலும் இது சிறந்த முதலிடாக பார்க்கப்படுகிறது. குறைந்த தொகையில் இருந்தே கூட முதலீடு செய்யலாம் என்பதால், சாமானியர்களும் பயனடையும் திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அனைத்து தரப்பு மக்களும் எளிதில் அணுகும் விதமாகவும் உள்ளது.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications