தபால் நிலையங்களில் வழங்கப்படும் பல்வேறு முதலீட்டு திட்டங்கள், பாதுகாப்பானவை மற்றும் நல்ல லாபம் தரக்கூடியவை. அந்த வகையில் சூப்பரான ஒரு தபால்நிலைய சேமிப்பு திட்டம் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்..
தேசிய சேமிப்பு தொடர் வைப்புக் கணக்கு (National Savings Recurring Deposit Account) திட்டம் நமது முதலீடுக்கு ஆண்டுக்கு 6.7 சதவிகிதம் வட்டி தருகிறது. கூட்டு வட்டி முறை கணக்கிடப்படுவதால் இந்த திட்டம் முதலீட்டாளர்களுக்கு சிறந்த லாபத்தை தரக்கூடியது.

தனிநபராகவோ அல்லது கூட்டாக இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். குறைந்தபட்சம் 100 ரூபாயில் இருந்து முதலீட்டை தொடங்கலாம்.
எவ்வளவு கிடைக்கும் : இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 6.7 % வட்டி கிடைக்கும்.
லாக் இன் காலம் : இந்த சேமிப்பு திட்டத்தின் லாக் இன் காலம் 60 மாதங்கள் அல்லது ஐந்து ஆண்டுகள்
குறைந்தபட்ச முதலீட்டு தொகை : இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 100 ரூபாயில் இருந்து முதலீடு செய்யலாம். அதிகபட்ச தொகை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
யாரெல்லாம் முதலீடு செய்யலாம்: இந்த திட்டத்தில் தனிநபர் அல்லது 3 நபர்கள் வரை கூட்டாக கணக்கு தொடங்க முடியும். சிறார்களின் பெயரில் அவரின் பாதுகாவலர் கணக்கு தொடங்கலாம்.
அட்வான்ஸ் டெபாசிட்: இந்த திட்டத்தில் அட்வான்ஸ் டெபாசிட் என்ற விருப்பமும் வழங்கப்படுகிறது. அதாவது ஐந்து ஆண்டுகளுக்கான முதலீட்டை மொத்தமாக ஒரே முறை அட்வான்ஸ் முறையில் டெபாசிட் செய்யலாம்.
லோன் வசதி உண்டு : இந்த திட்டத்தில் முதலீட்டை தொடங்கி 12 தவணைகளை செலுத்தியவர்கள் லோன் பெற்றுக் கொள்ளலாம்.
முதிர்வு காலம்: இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
உதாரணம்: இந்த கணக்கில் பூர்ணிமா என்பவர் மாதத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்கிறார் என வைத்துக் கொள்வோம். அவருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை கணக்கீடு செய்யலாம்.
முதலீட்டு தொகை = 25,000
ஓர் ஆண்டுக்கு (12 தவணை) = 3,00,000
5 ஆண்டுகள் = 15,00,000
கிடைக்கும் வட்டி = 2,84,146
5 ஆண்டுகளில் கிடைக்கும் தொகை = 17,84,146
எனவே இந்த திட்டத்தில் பூர்ணிமாவுக்கு முதலீட்டு தொகை போக கூடுதலாக 2.84 லட்சம் வட்டி என்பது லாபமாக கிடைக்கிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications