இந்திய அரசாங்கம் அனைத்து பிரிவினருக்கும் உதவும் வகையில். குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பலனளிக்கும் பல்வேறு அஞ்சல் அலுவலக திட்டங்களை வழங்குகிறது. இதற்கு சிறந்த வட்டி விகிதங்கள், வரிச் சலுகைகள் என பல்வேறு நன்மைகளும் கிடைக்கிறது. அப்படி அஞ்சல் அலுவலகங்களில் வழங்கப்படும் ஒரு சிறந்த திட்டம் தான் போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட். போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் குறைந்த ஆபத்தை கொண்ட முதலீட்டு திட்டம் ஆகும். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைப் போல் அல்லாமல் இந்த திட்டம் பாதுகாப்பான வருமானத்தை வழங்குகிறது.
வட்டி விகிதம்: போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் திட்டத்திற்கு 7.50 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. டைம் டெபாசிட் திட்டத்திற்கு வெவ்வேறு முதிர்வு காலங்கள் உள்ளது. உங்களுக்கு விருப்பமான திட்டத்தை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் இந்த திட்டத்திற்கு பிரிவு 80சி-யின் கீழ் ரூ.1.50 லட்சம் வரையிலான வரிச் சலுகைகள் வழங்கப்படுகிறது.

காலாண்டுக்கு ஒரு முறை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. டைம் டெபாசிட் திட்டத்தில் 1,000 ரூபாய் முதல் கணக்கு தொடங்கலாம். அதிகபட்ச வரம்பு இதற்கு இல்லை. நீங்கள் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் முதலீடு செய்ய முடியும்.
டைம் டெபாசிட் எப்படி வேலை செய்கிறது?: முதலீட்டாளர்கள் முழுத் தொகையையும் ஒரே நேரத்தில் டெபாசிட் செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தில் மொத்தமாக முதலீடு செய்ய வேண்டும். பிக்சட் டெபாசிட்களைப் போலவே ஒரு முறை தான் முதலீடு செய்ய முடியும். அதன் பிறகு காலாண்டுக்கு ஒரு முறை வட்டி வருமானம் வழங்கப்படும். 5 வருட முதிர்வுக் காலம் முடிந்ததும் வட்டி மற்றும் அசல் ஆகியவற்றை சேர்த்து பெற்றுக் கொள்ளலாம்.
டைம் டெபாசிட் திட்டத்தின் வெவ்வேறு வகைகள்:
1. 1 வருட டைம் டெபாசிட்: 6.9 %
2. 2 வருட டைம் டெபாசிட்: 7.0 %
3. 3 வருட டைம் டெபாசிட்: 7.1 %
4. 5 வருட டைம் டெபாசிட்: 7.5 %
ரூ45,000 வட்டி வருமானம் பெறுவது எப்படி?: 7.50 சதவீத வட்டி விகிதத்தில் 5 ஆண்டுகளுக்கு ரூ.1 லட்ச ரூபாயை முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் மொத்த முதலீட்டு காலத்திற்கும் வட்டி வருமானமாக 44,995 ரூபாய் கிடைக்கும். இதன் மூலம் மொத்த முதிர்வுத் தொகை 1,44,995 ரூபாயாக இருக்கும்.
விண்ணப்பிப்பதற்கான தகுதி: 18 வயதிற்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் டைம் டெபாசிட் கணக்கைத் தொடக்கலாம். இளம் முதலீட்டாளர்களுக்கு TD சிறந்த தேர்வாக இருக்கும். கூடுதலாக பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் சார்பாக தங்கள் குழந்தைகளின் பெயரிலும் கணக்குகளை திறக்கலாம்.
எப்படி விண்ணப்பிப்பது?: அருகில் உள்ள போஸ்ட் ஆபீஸ்-க்கு சென்று படிவத்தைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து, அதோடு நீங்கள் சேமிக்க விரும்பும் தொகையையும் சேர்த்து வழங்கவும்.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications