வருமான வளர்ச்சிக்கு கண்டிப்பாக முதலீடு அவசியம். அதிக அளவில் வருமானத்தைப் பார்க்க அதிக அளவில் தான் முதலீடு செய்ய வேண்டும் என்றெல்லாம் கிடையாது. ஏனெனில் 500 ரூபாய் என்ற சிறிய தொகையில் தொடங்கினாலும் காலப்போக்கில் கணிசமான பலன்களைப் பெற முடியும். உங்கள் வருமானத்திற்கு ஏற்ப தொடர்ந்து முதலீடு செய்தாலே போதுமானது. அதன் பிறகு உங்கள் பங்களிப்புகளை படிப்படியாக அதிகரித்துக் கொள்ளலாம். இது போன்ற சிறிய முதலீடும் பிற்காலத்தில் உங்களுக்கு நல்ல வருமானத்தை பெற்று தரும். இந்தப் பதிவில் 500 ரூபாய்க்கு குறைவாக தொடங்கும் சில போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் பற்றியும் அவற்றில் கிடைக்கும் வருமானம் பற்றியும் பார்ப்போம்.
பொது வருங்கால வைப்பு நிதி (PPF): பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது ஒரு நீண்ட கால முதலீட்டு திட்டமாகும். இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். PPF திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக ஆண்டுக்கு ரூ. 500 முதல் முதலீடு செய்யலாம்.

அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். முதிர்வுக்குப் பிறகு 5 வருடங்களுக்கு கணக்கை நீட்டிக்க முடியும். எனவே இந்த PPF திட்டத்தில் மாதந்தோறும் ரூ. 500 முதலீடு செய்வதன் மூலம், ஆண்டுக்கு ரூ.6,000 டெபாசிட் செய்வீர்கள். தற்போதைய 7.1% வட்டி விகிதத்தில், உங்கள் முதலீடு 15 ஆண்டுகளில் ரூ.1,62,728 ஆக இருக்கும். உங்கள் முதலீட்டை 20 ஆண்டுகளுக்கு நீட்டித்தால், ரூ.2,66,332 ரூபாய் பெறலாம். அதுவே 25 ஆண்டுகளுக்குப் நீட்டித்தால் ரூ.4,12,321 ரூபாய் பெற்றுக்கொள்ளலாம்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY): பெண் குழந்தைகள் இருக்கும் பெற்றோர்களுக்கு, சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) ஒரு சிறந்த முதலீட்டுத் தேர்வாகும். இந்தத் திட்டத்தில் 1 ஆண்டுக்கு குறைந்தபட்சமாக ரூ. 250 முதல் அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.
SSY திட்டத்திற்கு 8.2% வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் 21 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியடையும். ஆனால் 15 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். SSY திட்டத்தில் மாதந்தோறும் ரூ.500 முதலீடு செய்வதன் மூலம், 15 ஆண்டுகளில் ரூ.90,000 முதலீடு செய்திருப்பீர்கள். முதிர்ச்சியின் போது, 8.2% வட்டி விகிதத்தில் 2,77,103 ரூபாய் பெற்றுக் கொள்ளாலாம்.
தொடர் வைப்பு கணக்கு (RD): உண்டியலைப் போலவே, மாதாந்திரத் தொகையைச் சேமிக்க விரும்புவோருக்கு, போஸ்ட் ஆபீஸ் RD திட்டம் சிறந்தது. 100 ரூபாய்க்கு குறைவான தொடக்க முதலீட்டில், எதிர்காலத் தேவைகளுக்காக கார்பஸை உருவாக்க விரும்பும் சிறு முதலீட்டாளர்களுக்கு இந்தத் திட்டம் ஏற்றது. இந்தத் திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். RD திட்டத்திற்கான தற்போதைய வட்டி விகிதம் 6.7%. ஒவ்வொரு மாதமும் ரூ. 500 முதலீடு செய்வதன் மூலம், ஐந்தாண்டுகளில் ரூ. 30,000 முதலீடு செய்திருப்பீர்கள். அப்படியானால் முதிர்ச்சியின்போது 5,681 வட்டியுடன் ரூ. 35,681 ரூபாய் பெறலாம்.
சிறிய முதலீடும் கூட காலப்போக்கில் கணிசமான வருவாயை வழங்கும் என்பதை இந்தத் திட்டங்கள் நிரூபிக்கின்றன.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications